Let a Vedic priest enter your home every month

Let a Vedic Priest Enter Your Home Every Month

Search This Blog

Friday, September 28, 2012

Vaithikasri October 2011-ஆசிரியர் எண்ணங்கள்


ஒருவர் மிகப்பெரும் செல்வாக்குள்ளவர், அவர் மகிழ்ச்சியாக இருக்கும் ஸமயத்தில் யார் எதைக்கேட்டாலும் தரக்கூடிய சக்தி யுள்ளவர், அப்படிப்பட்டவரை மகிழ்வித்தல் எப்படி? அவருக்குப் பிடிக்கும் செயலைச் செய்தால் அவர் மகிழ்வார், அவருக்கு எந்தச் செயல் பிடிக்கும்? எதைச் செய்தால் அவர் ஸந்தோஷமடைவார்? இதைத்தான் நமது வேதங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன, மனிதர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் பிடிக்கும், ஸூர்யனுக்கும், பித்ருக்களுக்கும் (மறைந்த முன்னோர்களுக்கும்) நமஸ்காரம் செய்வது பிடிக்கும், ப்ருஹ்ம தேவருக்கும் மஹர்ஷிகளுக்கும் வேதத்தைச் சொல்வது பிடிக்கும், அக்னி இந்திரன் முதலான தெய்வங்களுக்கு ஹோமம் செய்வது பிடிக்கும், ஸ்ரீ மஹாவிஷ்ணுவிற்கு நிறைய ஆடை ஆபரணங்களால் அலங்காரம் செய்வது பிடிக்கும், பரமேஸ்வரருக்கு பால் தயிர் தேன் முதலான பொருட்களால் அபிஷேகம் செய்வது பிடிக்கும், முருகப்பெருமானுக்கு ஷஷ்டி கிருத்திகை போன்ற நாட்களில் உபவாஸம் இருத்தல் பிடிக்கும், லக்ஷ்மி பார்வதி போன்ற பெண் தெய்வங்களுக்கு நன்நடைத்தையுள்ள (பதிவிரதா) பெண்களைக் கொண்டாடுவதும் பூஜிப்பதும் பிடிக்கும், அனைத்து கலைகளின் இருப்பிடமும், அனைத்து உயிர்களுக்கும் பேசும் திறமையை (வாக் சக்தியை)த் தருபவளும், ஜகத் ஸ்ருஷ்டி கர்த்தாவான ப்ருஹ்மபத்னியுமான ஸரஸ்வதி தேவிக்கு ஸத்யம் (உண்மை) பேசுவதே பிடிக்கும் என்று வேதம் தெரிவித்துக்கொண்டே செல்கிறது, ஆம் ஸரஸ்வதி தேவியால் வழங்கப்பட்ட வாக் சக்தியை (பேசும் திறமையை) ஸரியாகப் பயன்படுத்துவதே அதாவது ஸத்யம் பேசுவதே ஸரஸ்வதியை மகிழ்விக்கும் செயல், இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் பண்பட்ட மனதுடன் நல்லவனாக வாழ கல்வியறிவு மிகவும் அவசியம், இந்தக் கல்வியறிவை தெய்வ அருளால்தான், குறிப்பாக ஸரஸ்வதியின் அருளால்தான் பெற முடியும், கையில் வீணை புஸ்தகத்துடன் தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் ஸரஸ்வதி தேவியை பூஜிப்பதால் கலைகள், கல்வி செல்வம் வீரம் போன்ற அனைத்தையும் பெற முடியும். ஸரஸ்வதியை ஏராளமான தாமரை போன்ற மலர்களால் அர்சனை செய்வதும், பலவிதமான உணவு வகைகளால் நிவேதனம் செய்வதும், பற்பல (வேத) மந்திரங்கள் சொல்வதும் மிகச் சிறந்தததுதான், ஆனாலும் ஸரஸ்வதியை மகிழ்விக்க ஸரஸ்வதியின் அருளைப்பெற இதைவிட மிகச் சுலபமான வழி ஒன்று உள்ளது, அதுதான் ஸத்தியம் (உண்மை) பேசுதல். மனதில் ஏற்படும் எண்ணங்களை அப்படியே மாறாமல் தனது வாக்கால் (சொற்களால்) வெளிப்படுத்துவதே ஸத்யம் (உண்மை) பேசுதல் எனப்படும், ஸத்தியத்திற்கு இருக்கும் பெருமை கணக்கிலடங்காது, எந்த ஒரு ஆபத்து காலத்திலும் ஸத்யத்தையே பேசுதல் என்னும் உறுதியான கொள்கையுடன் வாழ்ந்தார் தர்மாத்மா தர்மபுத்திரர், தனது பதவியையும் ஸுகத்தையும் மனைவியையும் இழந்தாலும் பொய்யே பேசமாட்டேன் என்று உறுதியுடன் காசி மாநகரத்தில் வாழ்ந்த சக்கிரவர்த்தி ஹரிஸ்சந்திரன் போன்றவர்கள் வாழ்ந்த நம் பாரத தேசத்தில்தான் நாமும் வாழ்கிறோம். கத்தியின்றி ரத்தமின்றி அஹிம்ஸை சத்தியம் என்னும் இரண்டால் மட்டுமே நம் தேசத்தை அன்னியர்களிடமிருந்து மீட்டு ஸ்வதந்திரம் வாங்கித் தந்தார் தேசப்பிதா மஹாத்மா காந்தி, ஆகவேதான் அவரது வாழ்க்கை சரித்திர புஸ்தகத்துக்கும் ஸத்திய சோதனை எனப் பெயரிடப்பட்டது, 1950 ஜனவரி 26ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது பாரத தேச (அசோக சக்கிர) அடையாளச்சின்னத்தின் கீழ் பகுதியில் முண்டகோபநிஷத்தின் வாக்கியமான ஸத்தியமேவ ஜயதே (வாய்மை மட்டுமே வெல்லும்) என்னும் சொற்கள் தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கின்றன, ஸத்தியத்தையே பேசுபவருக்கு எதிலும் வெற்றிதான் கிட்டும் என்பதையே இது வெளிப்படுத்துகிறது. தற்காலத்தில் ஸத்தியத்தையே பேசுவதும் ஸத்திய வாழ்க்கை வாழ்வதும் ஸாத்தியமா? என்று தோன்றலாம், ஸ்ரீ ஆதிசங்கரர் தனது ப்ருஹ்ம ஸூத்ர பாஷ்ய ஆரம்பத்தில் ஸத்யாந்ருதே மிதுனீ க்ருத்ய அதாவது ஸத்தியமும் பொய்யும் கலந்ததே இவ்வுலகம் (வாழ்க்கை) என்கிறார். இருந்தாலும் பொய்யைச் சுறுக்கி ஸத்தியத்தை (ஒளியை)ப் பெருக்கி சில காலமாவது நம்மால் வாழ முடியும், எப்போதும் ஸத்தியத்தையே பேச முடியா விட்டாலும் கூட, தெய்வ வழிபாடு செய்யும் ஆலயங்கள், தெய்வங்களை ஆராதிக்கும் நவராத்திரி ஸரஸ்வதி பூஜை போன்ற நாட்கள், ஸரஸ்வதியின் நக்ஷத்திரமான மூல நக்ஷத்ரம், போன்ற சில நாட்களிலும், பெற்றோர், ஆசிரியர்,ஆசார்யர், மஹான்கள், போன்ற சில மனிதர்களிடமும் மட்டுமாவது ஸத்தியத்தையே பேசுவது என்னும் கொள்கையை கடைபிடிக்க முயற்சிக்கலாம், தற்கால சூழ்நிலையில் நாம் ஸத்தியம் பேசுபவராக இருக்க நினைத்தாலும் நம்மை சுற்றியிருக்கும் சூழ்நிலை நம்மை பொய் சொல்லும்படி செய்து விடுகிறது என்கின்றனர் சிலர், இது ஓரளவு உண்மைதான் என்றாலும் இதற்கும் ஓர் மாற்று வழியுண்டு, அதுதான் காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகள் தனது வாழ்க்கையில் கடைசிவரை கடைபிடித்த உயர்ந்த வழி, அதுதான் மௌனம், ஆகவே பொய் சொல்லும் சூழ்நிலை தோன்றினாலும் கூட அப்போது பொய்யும் ஸத்யமும் (எதுவும்) பேசாமல் மௌனமாக இருந்து விடலாமே, மெளனேன கலஹோ நாஸ்தி (மௌனமாக இருந்தால் கலஹமில்லை), மௌனம் ஸர்வார்த்த ஸாதகம் (மௌனம் அனைத்தையும் ஸாதிக்கும் ) என்கிறது நீதி சாஸ்திரம், ஆகவே ஒவ்வொருவரும் கூடியவரை (மற்றவர் மனது புண்படாதவாறு) ஸத்தியத்தையே பேச முயற்சிக்கலாம், பொய்யே பேசி பழகி விட்ட நமக்கு, இது உடனடியாக ஸாத்தியமில்லாதது போல் இருக்கலாம், ஆனாலும் ஒவ்வொரு மாதமும் ஸரஸ்வதியின் நக்ஷத்ரமான மூல நக்ஷத்திர நாள், அல்லது வருஷத்திற்கு ஒருமுறை வரும் ஸரஸ்வதி பூஜை நாள், ஆகியகாலத்திலாவது பொய்யே பேசாமல் ஸத்தியம் பேச முயற்சிக்கலாம், அல்லது மௌனமாக இருக்கலாம், இதுவே நாம் ஸரஸ்வதி தேவிக்குச் செய்யும் மிகப்பெரும் பூஜை, இதுவே ஸரஸ்வதியை ஸந்தோஷிக்கச் செய்யும், நமது தேவைகள் அனைத்தையும் ஸரஸ்வயின் மூலம் பெற ஸுலபமான வழி இதுவே, இதுவே நாம் நமக்கும் நமது குடும்பத்துக்கும் நமது தேசத்திற்கும் செய்யும் மிகப்பெரும் ஸேவை, இதற்கு பகவான் நமக்கு அனுக்ரஹிக்கட்டும்.

Vaithikasri November 2011-


ஒருவர் மிகப்பெரும் செல்வாக்குள்ளவர், அவர் மகிழ்ச்சியாக இருக்கும் ஸமயத்தில் யார் எதைக்கேட்டாலும் தரக்கூடிய சக்தி யுள்ளவர், அப்படிப்பட்டவரை மகிழ்வித்தல் எப்படி? அவருக்குப் பிடிக்கும் செயலைச் செய்தால் அவர் மகிழ்வார், அவருக்கு எந்தச் செயல் பிடிக்கும்? எதைச் செய்தால் அவர் ஸந்தோஷமடைவார்? இதைத்தான் நமது வேதங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன, மனிதர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் பிடிக்கும், ஸூர்யனுக்கும், பித்ருக்களுக்கும் (மறைந்த முன்னோர்களுக்கும்) நமஸ்காரம் செய்வது பிடிக்கும், ப்ருஹ்ம தேவருக்கும் மஹர்ஷிகளுக்கும் வேதத்தைச் சொல்வது பிடிக்கும், அக்னி இந்திரன் முதலான தெய்வங்களுக்கு ஹோமம் செய்வது பிடிக்கும், ஸ்ரீ மஹாவிஷ்ணுவிற்கு நிறைய ஆடை ஆபரணங்களால் அலங்காரம் செய்வது பிடிக்கும், பரமேஸ்வரருக்கு பால் தயிர் தேன் முதலான பொருட்களால் அபிஷேகம் செய்வது பிடிக்கும், முருகப்பெருமானுக்கு ஷஷ்டி கிருத்திகை போன்ற நாட்களில் உபவாஸம் இருத்தல் பிடிக்கும், லக்ஷ்மி பார்வதி போன்ற பெண் தெய்வங்களுக்கு நன்நடைத்தையுள்ள (பதிவிரதா) பெண்களைக் கொண்டாடுவதும் பூஜிப்பதும் பிடிக்கும், அனைத்து கலைகளின் இருப்பிடமும், அனைத்து உயிர்களுக்கும் பேசும் திறமையை (வாக் சக்தியை)த் தருபவளும், ஜகத் ஸ்ருஷ்டி கர்த்தாவான ப்ருஹ்மபத்னியுமான ஸரஸ்வதி தேவிக்கு ஸத்யம் (உண்மை) பேசுவதே பிடிக்கும் என்று வேதம் தெரிவித்துக்கொண்டே செல்கிறது, ஆம் ஸரஸ்வதி தேவியால் வழங்கப்பட்ட வாக் சக்தியை (பேசும் திறமையை) ஸரியாகப் பயன்படுத்துவதே அதாவது ஸத்யம் பேசுவதே ஸரஸ்வதியை மகிழ்விக்கும் செயல், இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் பண்பட்ட மனதுடன் நல்லவனாக வாழ கல்வியறிவு மிகவும் அவசியம், இந்தக் கல்வியறிவை தெய்வ அருளால்தான், குறிப்பாக ஸரஸ்வதியின் அருளால்தான் பெற முடியும், கையில் வீணை புஸ்தகத்துடன் தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் ஸரஸ்வதி தேவியை பூஜிப்பதால் கலைகள், கல்வி செல்வம் வீரம் போன்ற அனைத்தையும் பெற முடியும். ஸரஸ்வதியை ஏராளமான தாமரை போன்ற மலர்களால் அர்சனை செய்வதும், பலவிதமான உணவு வகைகளால் நிவேதனம் செய்வதும், பற்பல (வேத) மந்திரங்கள் சொல்வதும் மிகச் சிறந்தததுதான், ஆனாலும் ஸரஸ்வதியை மகிழ்விக்க ஸரஸ்வதியின் அருளைப்பெற இதைவிட மிகச் சுலபமான வழி ஒன்று உள்ளது, அதுதான் ஸத்தியம் (உண்மை) பேசுதல். மனதில் ஏற்படும் எண்ணங்களை அப்படியே மாறாமல் தனது வாக்கால் (சொற்களால்) வெளிப்படுத்துவதே ஸத்யம் (உண்மை) பேசுதல் எனப்படும், ஸத்தியத்திற்கு இருக்கும் பெருமை கணக்கிலடங்காது, எந்த ஒரு ஆபத்து காலத்திலும் ஸத்யத்தையே பேசுதல் என்னும் உறுதியான கொள்கையுடன் வாழ்ந்தார் தர்மாத்மா தர்மபுத்திரர், தனது பதவியையும் ஸுகத்தையும் மனைவியையும் இழந்தாலும் பொய்யே பேசமாட்டேன் என்று உறுதியுடன் காசி மாநகரத்தில் வாழ்ந்த சக்கிரவர்த்தி ஹரிஸ்சந்திரன் போன்றவர்கள் வாழ்ந்த நம் பாரத தேசத்தில்தான் நாமும் வாழ்கிறோம். கத்தியின்றி ரத்தமின்றி அஹிம்ஸை சத்தியம் என்னும் இரண்டால் மட்டுமே நம் தேசத்தை அன்னியர்களிடமிருந்து மீட்டு ஸ்வதந்திரம் வாங்கித் தந்தார் தேசப்பிதா மஹாத்மா காந்தி, ஆகவேதான் அவரது வாழ்க்கை சரித்திர புஸ்தகத்துக்கும் ஸத்திய சோதனை எனப் பெயரிடப்பட்டது, 1950 ஜனவரி 26ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது பாரத தேச (அசோக சக்கிர) அடையாளச்சின்னத்தின் கீழ் பகுதியில் முண்டகோபநிஷத்தின் வாக்கியமான ஸத்தியமேவ ஜயதே (வாய்மை மட்டுமே வெல்லும்) என்னும் சொற்கள் தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கின்றன, ஸத்தியத்தையே பேசுபவருக்கு எதிலும் வெற்றிதான் கிட்டும் என்பதையே இது வெளிப்படுத்துகிறது. தற்காலத்தில் ஸத்தியத்தையே பேசுவதும் ஸத்திய வாழ்க்கை வாழ்வதும் ஸாத்தியமா? என்று தோன்றலாம், ஸ்ரீ ஆதிசங்கரர் தனது ப்ருஹ்ம ஸூத்ர பாஷ்ய ஆரம்பத்தில் ஸத்யாந்ருதே மிதுனீ க்ருத்ய அதாவது ஸத்தியமும் பொய்யும் கலந்ததே இவ்வுலகம் (வாழ்க்கை) என்கிறார். இருந்தாலும் பொய்யைச் சுறுக்கி ஸத்தியத்தை (ஒளியை)ப் பெருக்கி சில காலமாவது நம்மால் வாழ முடியும், எப்போதும் ஸத்தியத்தையே பேச முடியா விட்டாலும் கூட, தெய்வ வழிபாடு செய்யும் ஆலயங்கள், தெய்வங்களை ஆராதிக்கும் நவராத்திரி ஸரஸ்வதி பூஜை போன்ற நாட்கள், ஸரஸ்வதியின் நக்ஷத்திரமான மூல நக்ஷத்ரம், போன்ற சில நாட்களிலும், பெற்றோர், ஆசிரியர்,ஆசார்யர், மஹான்கள், போன்ற சில மனிதர்களிடமும் மட்டுமாவது ஸத்தியத்தையே பேசுவது என்னும் கொள்கையை கடைபிடிக்க முயற்சிக்கலாம், தற்கால சூழ்நிலையில் நாம் ஸத்தியம் பேசுபவராக இருக்க நினைத்தாலும் நம்மை சுற்றியிருக்கும் சூழ்நிலை நம்மை பொய் சொல்லும்படி செய்து விடுகிறது என்கின்றனர் சிலர், இது ஓரளவு உண்மைதான் என்றாலும் இதற்கும் ஓர் மாற்று வழியுண்டு, அதுதான் காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகள் தனது வாழ்க்கையில் கடைசிவரை கடைபிடித்த உயர்ந்த வழி, அதுதான் மௌனம், ஆகவே பொய் சொல்லும் சூழ்நிலை தோன்றினாலும் கூட அப்போது பொய்யும் ஸத்யமும் (எதுவும்) பேசாமல் மௌனமாக இருந்து விடலாமே, மெளனேன கலஹோ நாஸ்தி (மௌனமாக இருந்தால் கலஹமில்லை), மௌனம் ஸர்வார்த்த ஸாதகம் (மௌனம் அனைத்தையும் ஸாதிக்கும் ) என்கிறது நீதி சாஸ்திரம், ஆகவே ஒவ்வொருவரும் கூடியவரை (மற்றவர் மனது புண்படாதவாறு) ஸத்தியத்தையே பேச முயற்சிக்கலாம், பொய்யே பேசி பழகி விட்ட நமக்கு, இது உடனடியாக ஸாத்தியமில்லாதது போல் இருக்கலாம், ஆனாலும் ஒவ்வொரு மாதமும் ஸரஸ்வதியின் நக்ஷத்ரமான மூல நக்ஷத்திர நாள், அல்லது வருஷத்திற்கு ஒருமுறை வரும் ஸரஸ்வதி பூஜை நாள், ஆகியகாலத்திலாவது பொய்யே பேசாமல் ஸத்தியம் பேச முயற்சிக்கலாம், அல்லது மௌனமாக இருக்கலாம், இதுவே நாம் ஸரஸ்வதி தேவிக்குச் செய்யும் மிகப்பெரும் பூஜை, இதுவே ஸரஸ்வதியை ஸந்தோஷிக்கச் செய்யும், நமது தேவைகள் அனைத்தையும் ஸரஸ்வயின் மூலம் பெற ஸுலபமான வழி இதுவே, இதுவே நாம் நமக்கும் நமது குடும்பத்துக்கும் நமது தேசத்திற்கும் செய்யும் மிகப்பெரும் ஸேவை, இதற்கு பகவான் நமக்கு அனுக்ரஹிக்கட்டும்.

Vaithikasri December 2011 -ஆசிரியர் எண்ணங்கள்


இவ்வுலகில் மனிதராகப் பிறந்ததை ஓர் அரிய நிகழ்வாக எண்ணி, நமது (குழந்தைகளின்) பிறந்த நாளை, முதலாமாண்டு துவங்கி ஒவ்வொரு வருஷமும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம், இது நமது முன்னோர்கள் நமக்குக் காண்பித்தவழிமுறை, மேலும்இது சாஸ்திரப்படி ஸரியானதே, ஆனால் தற்சமயம் ஒரு சிலர் பிறந்த நாளைக் கொண்டாடும் வழிமுறையைக்காணும்போது, பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்ட நாம், அதைக் கொண்டாடும் வழிமுறையை ஸரியாகத் தெரிந்துகொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது, அதாவது ஒரு சிலர் பிறந்த நாளை ஆங்கிலத்தேதிப்படி கொண்டாடு கிறார்கள், ஆங்கிலத்தேதி என்பது மனிதர்களால் உலக வியவஹார த்துக்காக ஏற்படுத்தப்பட்டு, அவ்வப்போது மாறுதலையும் அடைந்து கொண்டிருப்பதாகும், ஆகவே நம் மஹரிஷிகள் கூறியபடி ஆகாசத்தில் ஸஞ்சரிக்கும் சந்திரன் போன்ற கிரஹங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் பிறந்த(தமிழ்) மாதம், பிறந்த நக்ஷத்ரத்தன்று ஒவ்வொரு வருடமும் பிறந்த நாளைக்கொண்டாடுவதே சிறந்தது, மேலும் ஒரு சிலர் தங்கள் (குழந்தைகளின்) பிறந்த நாளை, கடையிலிருந்து வாங்கி வரப்பட்ட(பிறந்தநாள் கொண்டாடுபவர் பெயர் எழுதப்பட்ட சாப்பிடக்கூடாத பொருட்கள் கலந்து செய்யப்பட்ட) கேக் என்னும் உணவுப் பொருளை, உறவினர்கள் நண்பர்களுடன் சேர்ந்து(ஆங்கிலத்தில்) பாட்டுப்பாடி, கத்தியை வைத்து கேக்கைத் துண்டாக்கி, (எரிந்து கொண்டிருக்கும்) மெழுகு வத்தியை தீபத்தை வாயால் ஊதி அணைத்துக் கொண்டாடுகிறார்கள், இவ்விதம் பிறந்த நாளைக் கொண்டாடும் வழிமுறையைப் பார்க்கும் போது, இது நம் சாஸ்திரத்துக்கும்கலாசாரத்துக்கும்விரோதமானதோ எனத் தோன்றுகிறது, ஏனென்றால் சாஸ்திரத்தால் சாப்பிடக்கூடாது என நிஷேதிக்கப்பட்ட பொருள் கலந்ததைச் சாப்பிடுதல், எழுத்துக்களை கத்தியால் துண்டாக்குதல், வாயால் ஊதி தீபத்தை அணைத்தல், எச்சில் பார்க்காமல் அனைவரும் ஒருவருக்கொருவர் சாப்பிடுதல் என இவற்றில் பல சாஸ்திர விரோதச் செயல்கள் ஏற்படுகின்றன. தற்சமயம் பலகுடும்பத்தில் இது ஒரு ஸம்ப்ரதாயமாகவே மாறிவிட்டது, அதுவும் ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தையின் பிறந்த நாளை இவ்விதம் கொண்டாடினால், மற்ற குழந்தைகளும் எனக்கும் அதே போல் கேக் வெட்டிக் கொண்டாட வேண்டும் என்று கேட்கிறது, அந்தக் குழந்தைக் காகவும் முன்போலவே, கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப் படுகிறது, குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் இவ்விதமாகவே பிறந்த நாளைக் கொண்டாடுவது என்பது சிலகாலத்தில் எங்கள் குடும்பப் பழக்கம் என்னும் சொல்லும்படியாகக் கூட நேரலாம், நாம் செய்யும் இந்தத்தவறு நம் ஸமுதாயத்தையும் கலாசாரத்தையும் பாதிக்கும் செயலாகக்கூட மாறலாம், ஆகவே இவ்விதம் செய்வதையோ செய்பவர்களை ஊக்கப்படுத்துவதையோ தவிர்க்க முயற்சிக்கலாம், பிறந்த நாளன்று பலருக்கும் அன்னமிட்டு, உற்றார் உறவினருக்கும் ஏழைகளுக்கும் தேவையான உதவிகளைச் செய்து, (ஆலயங்களுக்குச் சென்று) நமக்கு ஆயுளை அளித்து, நமது கைகள், கால்கள், கண் வாய் போன்ற உறுப்புகளையும் உடலையும் ஆரோக்யமாக வைத்து, நம்மை பாதுகாக்கும் தெய்வங்களை பிரார்த்தனை செய்து, நன்றி கூறி, தன்னை விட வயதில் பெரியோர்களை நமஸ்கரித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதே சிறந்தது, மேலும் சிரஞ்சீவியாக இன்றும் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் மார்கண்டேயர் போன்ற மஹரிஷிகளையும் விபீஷணர் போன்ற ஆழ்வார்களையும் ஹனுமான் போன்ற பக்தர்களையும் ஆயுஸ்ஸை வளர்க்கும் ஆயுர்தேவதை போன்ற தேவதைகளையும் நக்ஷத்ர தேவதைகளையும் பூஜைகள் ஸ்தோத்ர பாராயணங்கள் ஹோமங்கள் மூலம் ஆராதித்து பிரார்த்தனை செய்வதே சாஸ்திரப்படி பிறந்த நாள் கொண்டாடும் வழிமுறையாகும். இதுவே சாஸ்திர ஸம்மதமாகும், இவ்விதம்தான் நம் முன்னோர்கள் பலரும் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள், இன்றும் பலரும் இவ்விதமே கொண்டாடி மகிழ்கிறார்கள், ஆகவே ஒவ்வொரு வருஷமும் பிறந்த தமிழ் மாதம், ஜன்மநக்ஷத்ரத்தன்று உற்றார் உறவினர்களுடன் ஒன்று சேர்ந்து, முன்கூறியபடி தெய்வங்களை ஆராதித்து, சாஸ்திர விரோத மில்லாமல், நமக்கும் நமது ஸமுதாயத்துக்கும் நமது தேசத்துக்கும் பயனளிக்கும் வகையில் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ பகவான் நமக்கு அனுக்ரஹிக்கட்டும்,

Vaithikasri January 2012-ஆசிரியர் எண்ணங்கள்


உலகம் முழுவதும் பொதுவாக பலராலும் உபயோகிக்கும் ஆங்கில வருஷம் 2011 முடிந்து 2012ஆம் ஆண்டு ஆரம்பமாகிறது, இன்று மேற்கத்திய கலாசாரத்தை ஒட்டி, பல பொது இடங்களிலும் பலரது வீட்டிலும் மகிழ்சியை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறுநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன, மற்றவருக்கு பாதிப்பு ஏற்படாமல் நமது கலாசாரத்தை பாதிக்காத முறையில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை பலர் கொண்டாடுகிறார்கள், இதனால் பலருக்கும் மகிழ்ச்சி, ' ஆனால் ஒரு சில இடங்களில் இந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் மேற்கத்திய கலாசாரத்தைப்பின்பற்றி நமது கலாசாரத்தை பாதிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது,குறிப்பாக நமது ஆலயங்களில் நடு இரவில் நடத்தப்படும் புத்தாண்டு சிறப்பு அபிஷேக அர்ச்சனை போன்ற நிகழ்ச்சிகள் நமது சாஸ்திர முறைப்படியும் கலாசாரப்படியும் அமையவில்லை, நடு இரவில் புத்தாண்டை கொண்டாடும் சிலர், உலகத்தையே ஸ்ருஷ்டி செய்து பரிபாலனம் செய்து வரும் தெய்வங்களும் இந்த புத்தாண்டை (மேற்கத்திய கலாசாரத்தை ஒட்டி) நடு இரவில் கொண்டாடவேண்டும் என்று எண்ணி, நீங்களும் இந்த புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்று தெய்வங்களை நிர்பந்தப்படுத்தும்விதமாக ஆலயங்களிலும் நடு இரவில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள், ஆகமம் மற்றும் வைதிகம் ஆகிய இரு வழிகளிலும் செய்ய வேண்டும் என்று விதிக்கப்படாத செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட அகாலத்தில் குறிப்பாக புத்தாண்டு பிறக்கும் நேரம் என்று மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட நடு இரவில் ஸுமார் 12 மணிக்கு யோக நித்ரையில் ஆழ்ந்திருக்கும் தெய்வங்களை எழுப்பி, அவர்களுக்கு அபிஷேகம் அர்ச்சனைகள் பூஜைகள் செய்கிறார்கள், இது ஆகம வைதிக முறைப்படி ஸரியானதாகத் தோன்றவில்லை, ஆகமம் மற்றும் வைதிக மார்கங்களில் அந்தந்த காலங்களில் செய்ய வேண்டியதாகக் குறிப்பிடப்பட்ட அபிஷேகம் அர்ச்சனை பூஜை போன்றவற்றை தினஸரி நடைபெறும் பூஜைகளைப்போலவே அந்தந்த காலங்களில் குறிப்பாக பகல் மற்றும் மாலை இரவு நேரங்களில் சிறப்பாக நடத்துவதே சிறந்ததாகும், நிசரர் ரஜனீசரர் என்பதாக தமோகுணம் மேலோங்கும் இரவு நேரங்களில் செயல்களைச்செய்பவர், இரவில் சுற்றித்திரிபவர் என்றெல்லாம் அரக்கர்களுக்குத்தான் பெயர், மனிதர்கள் என்பவர்கள் ஸத்வ குணம் அதிகமாக காணப்படும் ஸூரியன் இருக்கும் பகல் பொழுதில் செயல்களைச் செய்பவர்கள் என்று அரக்கர்களுக்கும் மனிதர்களுக்கும் வேறுபாடு சாஸ்திரங்களில் காணப்படுகிறது, ஆகவே பொதுவாக மனிதர்கள் இரவில் வெகு நேரம் கண் விழித்து முக்கியமான செயல்களை செய்யக்கூடாது, அப்போது மனம் தெளிவாக இருக்காது, எனவே அவ்வாறு செய்யும் செயல்கள் ஸரியானதாக அமையாது, குறிப்பாக சிவராத்திரி நாளைத்தவிர மற்ற எந்த நாட்களிலும் இரவு ஸுமார் ஒன்பது மணிக்கு மேல் ஆலயங்களிலும், ஏன் வீட்டிலும் கூட அபிஷேகம் அர்ச்சனை பூஜை போன்ற எந்த ஒரு தெய்வ வழிபாட்டையும் நடத்துவதற்கு ஆகமம் வைதிக சாஸ்திரங்களில் இடமில்லை, சாஸ்திர விருத்தமான செயல்களைச் செய்வது இந்த தேசத்துக்கும் மக்களுக்கும் ஏற்படும் நன்மைக்குத் தடங்கலாக அமையலாம். யம் க்ரியமானம் ஆர்யா: ப்ரம்ஸந்தி தம் தர்மமித்யாசக்ஷதே நீ செய்யும் எந்தச் செயலை வேத சாஸ்திரக் கருத்துக்களையுணர்ந்த பெரியோர்கள் இது ஸரிதான், இது தர்மம்தான் என்று ஏற்றுக்கொள்கிறார்களோ, அதுவே தர்மமான ஸரியான செயல் என்கிறார் ஆபஸ்தம்ப மஹர்ஷி, இன்றைய சூழ்நிலையில் பெரியோர்கள் ஸாதுக்கள் பலரும் இவ்வாறு அகாலத்தில் நடு இரவில் ஆலயங்களில் செய்யும் தெய்வ வழிபாடுகளை ஸரிதான் என்று ஏற்றுக் கொள்வதில்லை. ஆகவே நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்த லௌகீகமான முறையில் புத்தாண்டுக் கொண்டாட்டம் போன்ற சில நிகழ்ச்சிகளை நடத்தும் போது, அவற்றில் சாஸ்திரத்தையும் ஆகமத்தையும் புகுத்தாமல் இருக்கலாம், ஆகமம் மற்றும் வைதிக முறைப்படி ஏராளமான பொருட்செலவில் நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பற்பல வேத மந்திரங்கள் மூலம் தெய்வ ஸான்னித்யத்தை வரவழைத்து தினஸரி நியமமாக பூஜைகள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வரும் ஆலயங்களிலுள்ள தெய்வத்தின் ஸான்னித்யமானது, இவ்வாறு அறியாமல் ஒரு சிலரால் நடத்தப்படும் (நடு இரவில் பூஜை போன்ற) சில நிகழ்ச்சிகளால் குறைந்து போகலாம், மேலும் இதுவே பிற்காலத்தில் ஒரு சில வருஷங்களில் சாஸ்திர ஸம்ப்ரதாயமாகவும் மாறிவிடலாம், ஆகவே நம் முன்னோர்கள் பல காலமாக கட்டிக்காத்து தூய்மையாக பாதுகாத்து வந்த ஆலய பூஜா முறைகளை நம் காலத்தில் மாற்ற முயலக்கூடாது, புத்தாண்டு நாளன்று மகிழ்ச்சியைக் கொண்டாடும் நாம் அன்று காலை சூரியன் உதயமான பின்பு ஆலயத்தில் அல்லது வீட்டில் உள்ள தெய்வங்களை வழிபட்டு நாமும் நம்மை சுற்றியுள்ளவரும் நம்மை வாழவைக்கும் நமது தேசமும் என்றும் சிறப்புடன் விளங்க தெய்வங்களை ப்ரார்திப்போம் ஸ்ரீ பகவான் நிஸ்சயமாக் இதை நிறைவேற்றி நம்மை ரக்ஷிப்பார்,

Vaithikasri February 2012ஆசிரியர் எண்ணங்கள்


நமது மதத்திற்கும், அனைத்து தர்ம காரியங்களுக்கும் தெய்வ வழிபாட்டுக்கும் மூலபிரமாணம் ஆதாரம்வேதங்களே வேத மந்திரங்களே, வேதம் எத்தனை காலமாக இவ்வுலகில் இருக்கிறது என்பதை யாராலும் கூற இயலாது, ஆராய்சியாளர்கள் கி.மு. 2000ஆம் ஆண்டு என்று கூறினாலும், உலக ஸ்ருஷ்டிக்கு முன்காலத்திலும் வேதங்கள் இருந்தன என்னும் சாஸ்திரப்படி இதுவும் தவறான கணிப்புகள்தான், அப்படிப்பட்ட வேதங்கள் பல்வேறு ஆயிரம் ஆண்டுகளாக ஸ்வரங்கள், மாத்ராகாலம், எழுத்துக்கள் போன்ற எவ்வித மாறுதலுமின்றியும் இடைச்செறுகலின்றியும் ஆசார்ய புருஷர்களாலும், முன்னோர்களாலும் நம் தேசத்தை ஆண்ட அரசர்களாலும், மற்றும் பல்வேறு பிரிவினராலும் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன, அவர்கள்வேதங்களை கற்றுக் கொள்வதிலும் கற்றுக்கொண்ட வேதமந்திரங்களை முறையாக நியமத்துடன் உபயோகிப்பதிலும் சில கட்டுப்பாடுகளை கடைபிடித்தார்கள், ஆகவேதான் இன்றளவும் வேதமந்திரங்கள் சக்தியுடன் இருக்கின்றன, வேதமந்திரங்கள் சொல்லி நடத்தப்படும் பல்வேறு கர்மாக்களின் மூலம் பல்வேறு நன்மைகளை அடைய முடிகிறது, நமது தேசமும் காலத்தில் மழை, விவஸாய செழிப்பு, என பல்வேறு நன்மைகளை அடைந்து வருகிறது, ஆனால் தற்சமயம் ஒரு சில இடங்களில் வேத மந்திரங்களை கற்றுக்கொள்ளும் போதும், கற்றுக்கொண்ட பிறகு அதை உபயோகிக்கும்போதும், அதற்கான நியமங்கள் ஸரிவர கடைபிடிப்பதில்லை, குறிப்பாக தகுதியற்ற அதர்மமான கர்மாக்கள் வேதமந்திரங்கள் சொல்லி நடத்தப்படுவதால் வேதம் அதன் புனிதத்தன்மையை இழக்கிறது, வேத மந்திரங்களின் சக்தியும் குறைகிறது, தற்சமயம் சில இடங்களில் (சில குடும்பங்களில்) வேததர்மத்துக்கும் சாஸ்திரங்களுக்கும் புறம்பான (திருமணம் போன்ற) நிகழ்ச்சிகள் (கர்மாக்கள்) நடத்த வேண்டிய சூழ்நிலை உறுவாகியுள்ளது, இது அவரவர்களின் சூழ்நிலை மற்றும் குடும்பம் ஸம்பந்தப் பட்ட விஷயம் என்றாலும், கட்டுக்கோப்பாக தற்சமயம் வரை பாதுக்காக்கும் நமது கலாசாரத்துக்கு, இதுவே தவறான வழிகாட்டுதலுக்குக் காரணமாகவும் அமையலாம், கலாசாரம் பாதிக்கப்படலாம். நல்ல குடும்பத்தில் நல்ல ஸம்ஸ்காரத்தில் வாழ்ந்ததின் பயனாக குடும்பத்திலுள்ள ஒருசிலர்,இப்படிப்பட்ட வேத விருத்தமான அதர்மச் செயலை (திருமணத்தை) அனுமதிக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள், அதைத் தவிர்க்கவும் முயற்சிக்கிறார்கள், ஆனாலும் கலியின் பிரபாவத்தாலும் புண்யபலத்தின் குறைவாலும் அவர்களாலும் அதைத் தடுக்க முடியவில்லை, அவர்களின் முயற்சி பயனலிக்காமல் இறுதியில் (இப்படிப்பட்ட நிகழ்ச்சி நடத்துவதும் அதை நடத்த அனுமதிப்பதும் அதில் கலந்து கொள்வதும் தவறு என்று தெரிந்தும் கூட)அவர்களும் அந்த அதர்மத்த்துக்குத் துணை போகிறார்கள். அந்த நிகழ்சிகளில் கலந்து கொள்கிறார்கள், இதனால் ஏற்படும் பாபங்களையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளத் துணிகிறார்கள். வேத தர்மத்துக்கு விரோதமாக செய்யப்படும் பல்வேறு விதமான திருமணங்களையும் வேத மந்திரம் சொல்லி நடத்தி, வைதிகமாக மாற்ற வேண்டும் என்று பலர் எண்ணுகிறார்கள், இது மிகவும் தவறான எண்ணமாகும், எப்போது சாஸ்திர விருத்தமாக செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டதோ, அப்போதே திருமணம் போன்ற அந்த நிகழ்ச்சிகளை, அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்து கொண்டு லௌகீகமான முறையில் செய்வதானால் (இதுவும் மிகப்பெரியத் தவறுதான்) செய்து விட்டுப்போகட்டும், ஆனால் இதில் சாஸ்திர ஸம்மதம் கிடைக்க வேண்டும் என்று ஒரு போதும் நினைக்கக்கூடாது, அதற்காக வைதிகமான முறையில் இதை நடத்தக்கூடாது, இதனால் நாம் நமது வேதத்தையும் வேத மந்திரத்தையும், ஏன் அதை இதுநாள் வரை கட்டுக்கோப்பாக பாதுகாத்த ஆசார்யர்களையும், , ராஜாக்களையும் நம் முன்னோர்களையும் கூட அவமானம் செய்தது போல் ஆகிவிடுகிறது. ஆகவே காலம் காலமாக புனிதத்தன்மை மாறாமல் பாதுகாக்கப்படும், பகவானின் மூச்சுக்காற்றாக போற்றப்படும், வேதங்கள், வேத மந்திரங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுத்தாமல் இருக்க வேண்டும், வேத மந்திரம் சொல்லி அதர்மச் செயல்களைச் செய்ய க்கூடாது, ராஜாவின் முன்னிலையில் ஸங்கீதம் பாட மறுத்த ஸத்குரு தியாகராஜ ஸ்வாமிகள் ஸங்கீதத்தை முறையாக உபயோகித்ததால்தான் ஸ்ரீ ராமரை ப்ரத்யக்ஷமாகக் கண்டார். ஆகவே ஸங்கீதத்துக்கே மூலமான நமது வேதமந்திரங்களை, அனாசாரமாக வேத விருத்தமாகதர்ம சாஸ்திர ஸம்மதமில்லாத நிகழ்ச்சிகளில் உபயோகிக்கக்கூடாது, சாஸ்திர ஸம்மதமில்லாத திருமண அங்கீகாரத்தை லௌகீகமானமுறையில் பெற்றுக்கொள்ளலாம், வேத சாஸ்திர விருத்தமான திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வைதிக முறைப்படி வேத மந்திரங்கள் சொல்லி நடத்த வேண்டும் என்னும் விபரீதமான எண்ணம் யார் மனதிலும் எழாமல் இருந்து, நமது வேத மந்திரங்களுக்கும் அதை பாதுக்காப்பவர்களுக்கும், அதற்கான கௌரவம் மரியாதை கிடைத்து , வேத மந்திரங்களின் முழுமையான சக்தியின் மூலம் இந்த தேசமும் நமது ஸமூஹமும் செழிப்பாக வளர ஸ்ரீ பகவான் ரக்ஷிக்கட்டும்.

Vaithikasri March 2012-ஆசிரியர் எண்ணங்கள்


ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகப்பெறும் மாற்றத்தை ஏற்படுத்துபவர் தேவையான வித்யையை (கல்வியை) கற்றுத் தந்து அறிவுக்கண்ணைத்திறந்து விடும் ஆசிரியராவார், ஆசிரியரின் உதவியால்தான் இவ்வுலகத்தை-உலகில் நடைபெறும் ஸம்பவங்களை- நாம் நன்கு பார்க்க முடிகிறது, அத்துடன் ஆசிரியர் என்பவர் கல்வியை மட்டும் போதிக்காமல் இவ்வுலக வாழ்கைக்குத் தேவைப்படும்- ஒரு மனிதனை பண்படுத்தும் -நல்ல பல குணங்களையும் போதிப்பவராக இருக்கிறார், ஆகவேதான் குரு என்பவர் தெவத்துக்கும் மேலானவர் என்கின்றன நமது சாஸ்திரங்கள் ஆசிரியரைப் போலவே கல்வி கற்கும் மாணவனும் அடக்கத்துடன் பணிவுடன் கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும், அப்போதுதான் கற்றுக்கொள்ளும் கல்வியானது தக்க ஸமயத்தில் இவனுக்கு பயனுள்ளதாக அமையும், (தான் பிராஹ்மணன் என்று) பொ சோல்லி கல்வியை கற்றுக்கொண்ட கர்ணனுக்கு அவன் கற்ற அஸ்திர சஸ்திரங்கள் என்னும் கல்வி, குருகே்ஷத்ர (மஹாபாரத) யுத்த ஸமயத்தில் அதாவது தேவையான நேரத்தில் பயனளிக்கவில்லை, கல்வி இருந்தாலும் அதை முறையாக கர்ணன் கற்றுக்கொள்ளாததே இதற்குக்காரணம், எப்படிப்பட்ட (பெரிய இடத்து) மாணவனாக இருந்தாலும் கூட, ஆசிரியர் இருக்குமிடத்துக்குச் சென்று, அவரிடம் பணிவுடன் அடக்கமாக இருந்துதான் கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும், இதுதான் முறை, ஆகவேதான் பகவானே ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியாக இவ்வுலகில் அவதரித்த போது, குலகுருவான வஸிஷ்டாசார்யரிடமும், ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்த போது ஸாந்தீபினி மஹர்ஷியிடமும் அவர்கள் இருக்கும் ஆசிரமத்துக்கு (குருகுலத்திற்கு)ச் சென்று வித்யைகளை -கல்வியை- கற்றுக்கொண்டார்கள் என்கின்றன புராணங்கள் ஆனால் தற்சமயம் கல்வி போதிக்கும் முறையைக்காணும் போது, கற்றுத்தரும் முறையில் மாற்றம் தேவை என்று எண்ணத்தோன்றுகிறது, அதற்குக்காரணம் தற்போது சென்னையில் நடந்துள்ள ஒரு ஸம்பவம், அதாவது ஸுமார் 15 வயதுள்ள ஓர் மாணவன், தான் படிக்கும் பள்ளியில் கல்வி போதிக்கும் ஓர்ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செத ஸம்பவம், மிகுந்த வருத்தத்தையும் ஆஸ்சரியத்தையும் அளிக்கும் இந்த ஸம்பவத்திற்குக் காரணங்களை பலவாறாகா ஆராந்தாலும் கூட, அவற்றுள் அந்த மாணவன் கல்வி கற்றுக்கொண்ட- கற்பிக்கப்பட்ட- (தவறான) முறையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம், ஸுமார் 10 வருடங்களாக கற்றுக்கொள்ளும் , அந்த மாணவனின் கல்வி, அவனுக்கு விநயத்தையும் பண்பாட்டையும் குரு பக்தியையும் கற்றுத் தந்திருக்க வேண்டும், மாறாக அந்த கல்வி அவனுக்கு வெறுப்புத் தன்மையையும் குரோதத்தையும் கற்றுத் தந்துள்ளது, இது மிகவும் வருந்தத்தக்க விஷயம், தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஶ்நேந ஸேவயா என்பதாக ஆசிரியரிடமிருந்து மாணவன், ப்ரணிபாதம் என்னும் அடக்கத்துடனும், விநயத்துடனும் இருந்து குருவுக்கு பணிவிடைகள் செது வித்யையை (கல்வியை) குருவினிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டும், ஸந்தேஹங்களை பரிப்ரச்னத்துடன் (பணிவுடன்) கேட்டுத்தெளிவு பெற வேண்டும் என்பதாக பாடம் கற்றுக்கொள்ளும் முறையை பகவத் கீதை நமக்கு போதிக்கிறது, ஆனால் தற்போது ஆங்காங்கே பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் கலாசாலைகளிலும் படிக்கும் முறையை ஆராந்தால் இதன்படி இல்லை என்பது புரியும், முன்காலத்தில் கல்வி கற்பிக்கும் முறைகளுக்கும் தற்போதைய கல்வி கற்றுத்தரும் முறைகளுக்கும் நிறைய வேறுபாடுகள். ஆசிரியரின் முன்பாக அடக்கத்துடன்இருந்து மாணவர்கள் கல்விகற்றுக்கொண்ட நிலை மாறி, ஆசிரியர் நின்று கொண்டு கற்றுத்தருவதும், மாணவர்கள் கால்களை தொங்க விட்டுக்கொண்டு அலக்ஷ்யமாக பாடங்களை கற்றுக்கொள்வதுமாக இன்றைய நிலை, ஒரு மாணவனின் வாழ்க்கையில் அனைத்து கல்விகளுக்கும் ஒருவர்தான் குரு (ஆசிரியர்) என்னும் நிலை மாறி, ஒரே மாணவனுக்கு ஒரே நேரத்தில் (பாடப்பிரிவின் படி) பல்வேறு ஆசிரியர்கள் என, ஒரு மாணவன் 10ஆம் வகுப்பு படித்து முடிக்கும் போது, அவனுக்கு கல்வி போதித்த ஆசிரியர்களின் எண்ணிக்கை ஸுமார் 100 பேர்கள், இது இன்றைய கல்வி கற்கும் நிலை, குரு இருக்குமிடம் சென்று, குரு சோல்லித்தரும் ஸமயத்தில், மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டது அன்றைய நிலை, மாணவர்கள் இருக்கும் வகுப்பறையைத் தேடி ஆசிரியர் வந்து, மாணவர்களுக்கு உகந்த நேரத்தில் பாடங்களை கற்றுத் தருவது இன்றைய நிலை, நான் சோன்னபாடம் உனக்கு புரிந்ததா?என்று ஆசிரியர் மாணவனிடம் கேட்டநிலைமாறி, நான் உனக்கு புரியும்படி பாடங்களை கற்றுத்தந்தேனா? என்று கேட்பது இன்றைய நிலை. ஆகவே எப்படிப்பட்ட கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்தும் நாம் அந்தக் கல்வியை எந்த முறையில் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும், அப்போதுதான் கற்றுக்கொள்ளும் கல்வியும் வித்யா ததாதி விநயம் என்பதாக மாணவ்ர்களின் அறிவுக் கண்ணைத் திறந்து விடும், அந்தக் கல்வி கற்பவருக்கும் கற்றுத்தருபவருக்கும் இவ்வுலகத்திற்கும் நன்மையைத்தரும், ஆகவே பெரியோர்கள் ஒன்று கூடி பள்ளிகளில் தற்சமயம் கல்வி கற்றுத்தரும் முறைகளை மறுபரிசீலனை செய வேண்டும் தேவையானால் அவற்றில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும், இதற்கு ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்,

Vaithikasri April 2012-ஆசிரியர் எண்ணங்கள்


நீர், நெருப்பு, மண், ஆகாசம், காற்று ஆகிய ஐந்தும் இவ்வுலகில்அனைத்து ஜீவராசிகளும் உயிர்வாழ மிக முக்கியமானவை, பஞ்ச பூதங்கள் எனப்படும் இவை ஐந்தும் கடவுளின் அருளால் மட்டுமே நமக்குக் கிடைப்பவை. இவற்றை இவ்வுலகிற்குக் கிடைக்கச் செய்வதில் மற்றவர்களைக் காட்டிலும் அந்தணர்களுக்கு மிக முக்கியமான பங்கு உள்ளது, ஒவ்வொரு நாளும் ஸூர்யன் உதிக்கும் மற்றும் மறையும் நேரங்களில் தோன்றும் ஸந்த்யா என்னும் தேவதையை, வந்தனம் என்னும் கர்மாவால், காயத்ரீ போன்ற மந்திரங்களை ஜபித்து உபாஸிக்கும் முறையே ஸந்த்யாவந்தனம் எனப்படும் , இதை அந்தணர்கள் மட்டுமின்றி, (உபநயனம் ஆன) அனைவரும் தவறாது செய்ய வேண்டும். அப்போதுதான் நீர் நெருப்பு ஆகாசம் காற்ற்று மண் ஆகிய பஞ்சபூதத்தின் சக்திகள் இவ்வுலகிற்குக் கிட்டும், பஞ்ச பூதங்களால் ஏற்படும் (இயற்கை) சீற்றங்கள் ஏற்படாமல் உயிரினங்கள் பாதுகாக்கப்படும், ஆகவேதான் நமது வேதங்களும் சாஸ்திரங்களும் உலக நன்மையைக்கருதி ஒவ்வொரு அந்தணரும் தவறாது காலை மற்றும் மாலை நேரங்களில் ஸந்த்யாவந்தனம் செய்ய வேண்டும் என்று கடமையாகவே கூறியுள்ளது, ஸந்த்யாவந்தனம் செய்ய வேண்டிய (ஸூர்யஉதய- ஸூர்யஅஸ்தமன) நேரம், செய்பவருக்கான (சாஸ்திரப்படி வேஷ்டி கட்டிக்கொள்ளுதல், ஸ்னானம் செய்தல் முதலான) கட்டுப்பாட்டுகள்.,செய்யும் வழிமுறைகள், செய்யப்படும் இடங்கள் ஆகியவற்றில் (நோயாளிகள்-சிறுவர்கள்-முதியோர் போன்றவர்களுக்கு) சில விதிவிலக்குகளை வழங்கிய சாஸ்திரம், ஸந்தியாவந்தனத்தைச் செய்யாமல் இருப்பதற்கு யாருக்கும் அனுமதியளிக்கவில்லை, மாறாக ஸந்த்யா ஹீன: அஶுசிர் நித்யம் அநர்ஹ: ஸர்வகர்மஸு என்பதாக ஸந்த்யாவந்தனம் செய்யாத அந்தணர், தீட்டுள்ளவரைப் போல் எப்போதும் அசுத்தமானவர் என்று கூறும் தர்மசாஸ்திரம், அதைவிடக்கடுமையாக, அப்படிப்பட்டவர் எந்த ஒரு செயலையும் செய்யத்தகுதியற்றவர் என்றும் பயமுறுத்துகிறது. அதாவது ஸந்த்யாவந்தனம் செய்யாதவர், தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும், மற்றவருக்காகவும், செய்கின்ற தெய்வ ஸம்பந்தப்பட்ட பூஜைகள் பாராயணங்கள் அபிஷேகம் ஆலய தரிசனம் போன்றவைகளும், இறந்த தனது பெற்றோருக்காகச்செய்யும் சிராத்தம் தர்ப்பணம் போன்றவையும் முழுமையான பலனைத்தராது என்கிறது சாஸ்திரம், இவ்வுலகில் த்ரேதாயுகத்தில் பகவானே ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியாக மனிதராகப் பிறந்து, ஒரு மனிதன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை, தானே வாழ்ந்தும் காட்டினார், ஸ்ரீ ராமநவமியைக் கொண்டாடும் நாம், ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை- ராமாயணத்தை-படிக்கும் போது, ஸ்ரீ ராமர் வைதிக தர்மங்களுக்கு குறிப்பாக ஸந்த்யாவந்தனத்திற்கு, தந்துள்ள முக்கியத்துவத்தைப் பார்க்கலாம். ஸ்ரீ ராமலக்ஷ்மணர்கள், காயத்ரீ மந்திரத்தை உலகிற்குத் தந்த விஸ்வாமித்ர மஹர்ஷியுடன் யாகத்தை பாதுகாக்கச் செல்லும் போது, ஸ்நாத்வா க்ருதோத3கௌ வீரௌ ஜேபது: பரம ஜபம் (பாலகாண்டம்-23) என்று, ஸரயூ நதிக்கரையில் தங்கி ஓய்வெடுத்து விட்டு, மறுநாள் காலையில் எழுந்து நதியில்ஸ்னானம் செய்து,அர்க்யம் தந்து உயர்வான (காய்த்ரீ) மந்திரத்தை ஜபம் செய்தார்கள் என்கிறார் வால்மீகி மஹர்ஷி,மேலும் யதா2ர்ஹம் அஜபன் ஸந்த்4யாம் ருஷயஸ்தே ஸமாஹிதா: என்பதாக, காட்டில் வஸிக்கும் அனைத்து மஹ்ர்ஷிகளும் ஸந்த்யோபாஸனம் செய்தார்களாம். அத்துடன் ஜனகரின் தேசத்திற்கு ஜானகியை கைபிடிப்பதற்காக விஸ்வாமித்ரருடன் செல்லும் ஸ்ரீ ராம லக்ஷ்மணர்கள், க்ருத்வா பூர்வாஹ்ணிகாம் கிரியாம் என்று, பகலில் முதன்முதலாகச் செய்யவேண்டிய (ஸந்த்யோபாஸனம் என்னும்) கிரியைகளைச் செய்தார்கள் என்றும் காண்கிறோம், அயோத்தியில் சக்கிரவர்த்தியாக ஆக்ஷி செய்த ஸமயத்திலும் பூர்வாம் ஸந்த்4யா முபாஸீனோ ஜஜாப யத மானஸ: என்பதாக, காலையில் செய்ய வேண்டிய ஸந்த்யோபாஸனத்தை முடித்த பின்னரே, அரச ஸபைக்குச் சென்று தன்னைக் காண வந்திருக்கும் மக்களைக்கண்டார் என்கிறார் வால்மீகி மஹர்ஷி. ஸீதை மற்றும் லக்ஷ்மணருடன் காட்டில் ஸஞ்சரிக்கும் ஸ்ரீ ராமர், அகஸ்தியரின் ஆஸ்ரமம் செல்லும் முன்பாக ஸூர்யன் அஸ்தமனமாவதை உணர்ந்து ஸந்த்யோபாஸனத்தை(சுறுக்காமல்) முறையாக செய்தார் என்பதை ராமஶ்ச அஸ்தம் க3த: ஸந்த்4யா காலோப்4யவர்த்த, உபாஸ்ய பச்சிமாம் ஸந்த்4யாம் ஸஹ ப்ராப்ய யதா2விதி4 என்று ஆரண்யகாண்டம் தெரிவிக்கிறது.மனைவியை (ஸீதையை)ப் பிரிந்து தனிமையில் வருந்தும் போதும், ராவணணுடன் யுத்தம் செய்யும் ஸமயத்திலும் கூட ராமர் ஸந்த்யாவந்தனத்தை விட்டு விடவில்லை என்பதை ஆங்காங்கே தவறாது தெரிவிக்கிறார் வால்மீகி மஹர்ஷி. தர்மங்களுக்குள் சிறந்ததான-வேத விஹிதமான- ஸந்த்யோபாஸனம் என்னும் தர்மத்தை தவறாது செய்ததால்தான் ஸ்ரீராமரை ராமோ விக்4ரஹவான் த4ர்ம: என்பதாக தர்மத்தின் வடிவமே ஸ்ரீ ராமர் என்று கூறுகிறோம், ஸந்த்யாவந்தனம் அந்தணரின் கடமை என்பதால், ஸமயம் கிடைக்கும் போது செய்தால் போதுமே என்று நினைக்கக் கூடாது, ஸந்த்யோபாஸனத்தால் பஞ்ச பூதங்களின் சக்தி இவ்வுலகத்திற்கு ஸரியாக காலத்தில் கிடைக்கிறது என்பதால் இவ்வுலக (மக்களின்) நன்மையில் விருப்பமுள்ளவர்கள், மற்ற செயல்களைக் காட்டிலும் ஸந்த்யோபாஸனத்திற்கு முக்கியத்துவம் தந்து, ஒவ்வொரு நாளும் காலை மாலை நேரங்களில் ஸந்த்யோபாஸனம் செய்ய முயற்சிக்க வேண்டும், ஒவ்வொருவரும், தனக்கு ஏற்படும் ஆபத்தான காலங்களில் அவற்றிலிருந்து விடுபட, மந்திரஜபம் ஹோமம் பாராயணம் கே்ஷத்ராடனம் நாம ஸங்கீர்த்தனம் என்று பலவாறாக ஈடுபடுகிறார்கள், ஆனால் அதற்கு முன்பாக, ந கா3யத்ர்யா: பரோ மந்த்ர: என்பதாக காயத்ரீ மஹா மந்திரத்துக்கு மேலான மந்திரம் ஈரேழு புவனத்திலும் இல்லை என்பதால், ஸந்த்யோபாஸனம் செய்துவிட்டு, அதாவது முதன்முதலாக பலர்ர் முன்னிலையில் சிறு வயதில் தனக்கு (ப்ருஹ்ம) உபதேசம் செய்யப்பட்ட காயத்ரீ மஹா மந்திரத்தை ஜபம் செய்து விட்டுச் செய்தால் பூஜை ஜபம் பாராயணம் போன்றவைகள் முழுமையான பலனை விரைவாகத்தரும், தேவையான ஸமயத்திலெல்லாம் நமக்காக பால் சுறக்கும் காமதேனு (பசு)வைப் போல் இருக்கும் காயத்ரீ மந்திரம், நமது அனைத்துத் தேவைகளையும், ஏன்! இந்த தேசத்தின் தேவைகளைக் கூட, நிறைவேற்றும் ஆற்றலுடையது, நோய் வறுமை கடன் ஆபத்துகள் போன்றவற்றை விலக்கி, ஆயுள், செல்வம், புத்தி வளர்ச்சி, வெற்றி,லாபம்,ஆகிய அனைத்தையும், ஸந்த்யா வந்தனத்தை- காயத்ரீ ஜபத்தை-முறையாகச் செய்வதால் நாம் அடைய முடியும். உரியகாலத்தில் ஸந்த்யோபாஸனம் செய்பவர்கள் இருக்கும் கிராமத்தில்- நகரத்தில்- தேசத்தில்- நீராலோ (ஜலக்கஷ்டம்-வெள்ளம்), நெருப்பாலோ, ஆகாசத்தினாலோ (வான் வெளி ஆபத்துகள்), காற்றாலோ (புயல்), மண்ணாலோ (பூகம்பம்), எந்த ஆபத்தும் ஒரு போதும் ஏற்படாது. என்றும், ஆகவே ஸந்த்யா வந்தனம் செய்யாத அந்தணர் (தேசத்தை பாதுகாக்கத் தவறிய) குற்றம் புரிந்தவர் என்றும், அவரை அந்த தேச அரசன் (தேச த்ரோஹ குற்றத்திற்காக) தண்டிக்க வேண்டும் என்றும் கூறுகிறது மனுஸ்ம்ருதி. (அந்தணர்களின் நல்ல காலத்தால் இந்த ஷரத்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை, தற்போதைய ஆக்ஷியாளர்களும் இதை சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் நினைக்கவில்லை), அந்தணரல்லாத மற்றவர்கள்அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைக:ளை ஓரளவாவது செய்துகொண்டு வருகிறார்கள், அந்தணர்கள் மட்டும் தான், தனது கடமைகளை, (அதனால் கிட்டும் பயன்களை ஸரிவரப்புரிந்து கொள்ளாததால்) செய்யாமல் விட்டு விடுகிறார்கள் என்பது சிலரின் கருத்து. உலகில் காலத்தில் மழை பெய்யவும், பூகம்பம் ஸுனாமி, வெள்ளம் போன்ற ஆபத்துகள் வராமல் பாதுக்காக்கவும், வேத சாஸ்திரங்களால் தவறாது செய்ய வேண்டும் என்று விதிக்கப்பட்ட ஸந்த்யாவந்தனம் என்னும் கர்மாவை, ஒவ்வொரு அந்தணரும் ஒவ்வொரு நாளும் செய்ய முயற்சித்து, அதில் வெற்றி யடையவும், அதன் மூலம் உலகில் வாழும் மனிதன் மிருகம் பறவைகள் செடி கொடிகள் போன்ற அனைத்து உயிர்களுக்கும் நன்மைகள் கிடைக்கவும் ஸ்ரீ பகவான் நமக்கு அனுக்ரஹிக்கட்டும்.

Vaithikasri June 2012ஆசிரியர் எண்ணங்கள்


இவ்வுலகில் அனைவரின் வாழ்க்கையிலும் நடைபெறும் முக்கியமான ஸம்பவம் திருமணம், குறிப்பாக ஓர் பெண்ணின் வாழ்க்கையில் நடைபெறும் மகிழ்ச்சியான தருணம் திருமணம், திருமணம் ஆன பிறகு உரிய காலத்தில் குழந்தை பிறத்தல் என்பது அதை விட ஆனந்தம், மிகப்பெரிய பங்களா கட்டி அதில் அனைத்து ஸுக போகங்களுடன் வாழ்ந்தாலும் கூட அந்த வீட்டில் இங்குமங்கும் தவழ்ந்து ஓடி விளையாடி, வீட்டை அழுக்காக்கி, விஷமத்தனம் செய்து, மழலைச் சொல் பேசி மகிழ்விக்க சில குழந்தைகள் இருந்தால்தான் அந்த ஸுகத்தை வாழ்க்கையை நன்கு அனுபவிக்க முடியும், காலத்தில் திருமணம் நடைபெற்று உரிய காலத்தில் குழந்தை பிறத்தல் என்பது பகவத் கிருபையால்தான் கிட்டும், பலருக்கும் அந்த (ஸந்தான) பாக்யம் கிடைத்தாலும் கூட, ஒரு சிலருக்கு மட்டும் தகுந்த வயதில் திருமணம் நடந்தும் கூட பல காலமாக குழந்தை பாக்யம் கிடைப்பதில்லை, இதற்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனாலும் பொதுவான காரணங்கள் சில, அவற்றில், தந்தை தனது பெண்ணிற்கு காலத்தில் செய்து வைக்க வேண்டிய (ப்ரதமார்த்தவ சாந்தி மற்றும் கர்ப்பதானம் என்னும்) இரண்டு ஸம்ஸ்காரங்களைச் செய்து வைக்காதது என்பதும் ஒரு காரணம், 1)ஒரு பெண்ணின் வயிற்றில் கர்ப்பத்தை (குழந்தையை) உறுவாக்குதல், 2)அந்த கர்ப்பத்தை எந்த ஒரு ஆபத்தும் இன்றி பாதுகாத்தல் ஆகிய இரண்டும் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அருளால்தான் கிட்டும், ஒரு மனிதனின் முயற்சியால் கர்ப்பத்தில் குழந்தையை உருவாக்கவோ, அந்த சிசுவை பாதுகாப்பதோ இயலாத காரியம், தெய்வ அருளால் மட்டுமே ஒரு ஜீவனை கர்ப்பத்தில் உருவாக்கவும் பாதுகாக்கவும் முடியும், கர்ப்பத்தில் இருக்கும் சிசு, தனது தாய் சாப்பிடும் உணவையே தானும் சாப்பிட்டு வளரும்படி செய்வதும் பகவான்தான். மனித முயற்சி என்பது அதற்குத் துணையாகத்தான் இருக்க முடியும், ஆகவேதான் ஒரு பெண் முதன்முதலாக ருதுஸ்னானம் செய்த உடன், அந்தப் பெண்ணிற்கு உடலையும் உள்ளத்திலும் இருக்கும் தோஷத்தை (அழுக்கை) போக்கி அந்தப்பெண்ணின் உடலில் கர்ப்பம் தரிக்கும் தன்மையை ஏற்படுத்தும் விதமாக, பெண்ணின் தந்தை, ப்ரதமார்த்தவ சாந்தி என்னும் ஸம்ஸ்காரத்தைச் செய்து வைக்க வேண்டும் என்கிறார்கள் மஹர்ஷிகள், அதாவது பெண் ருதுவான நாளின் நக்ஷத்ர தேவதைக்கும் ஸ்ரீ மஹாவிஷ்ணுவிற்கும் பூஜை ஜபம் ஹோமம் செய்து கலச ஜலத்தை பெண்ணிற்கு அபிஷேகம் செய்து வைக்க வேண்டும், இதற்குத்தான் ப்ரதமார்த்தவ சாந்தி எனப்பெயர். உரிய காலத்தில் இந்த சாந்தியைச் செய்ய இயலவில்லை என்றால் திருமணத்திற்கு முன்பாக இதைச் செய்தபின்னர் பெண்ணிற்குத் திருமணம் நடத்த வேண்டும், இதனால் ஒரு பெண்ணின்உடலில் இருக்கும் தோஷம் விலகுகிறது, அவள் உடலாலும் உள்ளத்தாலும் தூய்மையை அடைகிறாள் என்பதால் ப்ரதமார்த்தவ சாந்தியை முறையாக நடத்த முயற்சிக்கலாம். இவ்வாறே திருமணம் ஆன உடன் முறையாக நடத்த வேண்டிய நிகழ்ச்சி கர்ப்பாதானம் என்னும் ஸம்ஸ்காரம், விஷ்ணுர் யோநிம் கல்பயது முதலான மந்திரங்கள் சொல்லி, ஸ்ரீ மஹாவிஷ்ணுவை பிரார்தித்து நடத்தப்படும் கர்ப்பாதான ஸம்ஸ்காரத்தால், ஒரு பெண், தனக்கிருக்கும் (கர்ப்பாசய) தோஷத்தை விலக்கி கர்ப்பத்தில் குழந்தையைத் தாங்கும் சக்தியைப் பெறுகிறாள், தற்காலத்தில் ஒரு சிலருக்கு, முறையாக மந்திரங்கள் சொல்லி சாஸ்திரமுறைப்படி திருமணம் நடைபெற்றாலும் கூட, அதன் பிறகு ஸந்ததி பாக்யத்தைத் தரும் கர்ப்பாதான நிகழ்ச்சி, முறையாக நடத்தாததால், குழந்தை பாக்யம் கிடைப்பதில் பெண் கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது, ஒரு சில இடங்களில் கர்ப்பாதானம் நடத்தாமலேயே (ஸீமந்தம் நடத்தி) குழந்தை பிறந்தாலும் கூட, அந்தக்குழந்தையிடம் அறிவு வளர்ச்சி நல்ல குணங்கள் போன்றவை அவ்வளவாக காணப்படுவதில்லை, இந்த தோஷத்தை விலக்கி காலத்தில் நல்ல குணங்களுடன் ஆரோக்யமாக அறிவு வளர்ச்சியுடன் கூடிய (பல)குழந்தைகள் பிறப்பதற்கும், அந்தக் குழந்தைகள் மூலம் அனைவருக்கும் ஆனந்தம் கிடைப்பதற்கும், பகவத் கிருபையை குறிப்பாக ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அருளை பெற்றுத்தரும் கர்ப்பாதானம் என்னும் ஸம்ஸ்காரத்தை திருமணம் ஆன பின்னர் நல்ல நாள் மற்றும் பொருத்தமான நக்ஷத்ரம் முஹூர்த்தம் பார்த்து சாஸ்திரப்படி நடத்தலாம், அப்போதுதான் எந்த ஒரு பரிஹாரமும் இன்றி திருமணம் ஆன உடனேயே காலத்தில் ஸந்ததி (குழந்தை)பாக்யம் கிட்டும், பிறக்கும் குழந்தையும் அறிவாளியாக தேச பக்தி மாத்ரு பித்ரு பக்தி உள்ளதாகப் பிறக்கும், ஆகவே ஒவ்வொரு பெண்ணிற்கும் பிரதமார்த்தவ சாந்தி மற்றும் கர்பாதானம் ஆகிய இரு ஸம்ஸ்காரமும் முறையாக நடைபெறவும், அதன் மூலம் பகவத் கிருபையால் உரிய காலத்தில் நல்ல சுபலக்ஷணமான குழந்தைகள் பிறக்கவும், அந்தக்குழந்தை நல்ல குணங்களுடன் வளர்ந்து நீண்ட ஆயுளுடன் பிரகாசிக்கவும் அத்துடன் அந்தக்குழந்தை குடும்பத்தின் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கவும் ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்

Vaithikasri July 2012-ஆசிரியர் எண்ணங்கள்


ஐம்பெரும் பூதங்கள் உட்பட யாருக்கும் எந்த ஒரு துன்பத்தையும் தர மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டு துறவறம் ஏற்பவர்களே ஸன்யாஸிகள் (துறவிகள்) எனப்படுகிறார்கள். மண்ணாசை பெண்ணாசை பொண்ணாசை என்னும் மூன்று வித ஆசைகளையும் துறந்த இவர்கள் தனது உபதேசம் (அருளுரை) மூலம் மக்களின் மனதிலுள்ள இருளை விலக்கி, ஆத்ம ஞானமென்னும் ஒளியை ஏற்றுபவர்கள், வருடம் முழுவதும் தேசமெங்கிலும் சுற்றிச் சுற்றி வந்து மக்க:ளுக்கு அருளாசி வழங்கலாம் என்னும் ஸ்வதந்திரத்தை இவர்களுக்குத் தந்த சாஸ்திரம், மழை காலங்களில் (இரண்டு மாதம்) மட்டும் ஒரே இடத்தில் -ஒரே ஊரில்- தங்கியிருக்க வேண்டும் என்று கூறுகிறது, அதன் படியே வருஷம் முழுவதும் ஸஞ்சரிக்கும் ஸன்யாஸிகளும், மழைகாலங்களில் (இந்த வருடம் மூன்று மாதம்) மட்டும் ஒரே இடத்தில் (ஊரில்) தங்கி சாதுர்மாஸ்யம் என்னும் விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள், இந்த ஸன்யாஸிகள், தாங்கள் தங்கும் இடத்தில், தினந்தோறும் தாங்கள் வழிபடும் தெய்வங்களுக்கு பூஜை செய்தல், தினஸரி வேதாந்த (உபநிஷத்) பாடங்களை மக்களுக்குச் சொல்லுதல், ஆத்ம விசாரம் செய்தல், மக்களுக்கு அருளுரை வழங்குதல்,என பற்பல செயல்கள் மூலம் மக்களுக்கு உதவி செய்கின்றார்கள். ப்ரும்ஹசாரி க்ருஹஸ்தன் வானப்ரஸ்தன் ஸன்யாஸி என்னும் நான்கு ஆசிரமங்களுக்குள் மிகவும் உயர்வான ஆசிரமம் துறவறம், ஆகவேதான் துறவி மிகவும் மரியாதைக்குரியவர்- அனைவராலும் போற்றப்பட வேண்டியவர்- இவர்கள் எங்கு வருகிறார்களோ-தங்குகிறார்களோ- அந்த தேசத்துக்கும் நகரத்திற்கும் - காலத்தில் மழை, உணவு தான்ய உத்பத்தி ,வியாபாரச் செழுமை, போன்ற பற்பல நன்மைகள் ஏற்படும் என்றும் , ஆகவே இவர்களை வரவேற்று உபசரித்து பூஜிக்க வேண்டியது அவர்கள் தங்கும் நகரத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை என்றும் கூறுகிறது சாஸ்திரம். ஸ்ரீ நாரதரின் முற்பிறவியில், அவர் சிறு குழந்தையாக இருந்த போது அவரது ஊரில் வந்து தங்கி சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்த துறவிகளுக்கு ஸேவை செய்ய, நாரதரின் தாயார் அவரை நியமிக்க ஸ்ரீ நாரதரும் அதை ஏற்றுக் கொண்டு ஸன்யாஸிகளுக்கு நான்கு மாதம் ஸேவை செய்ய, கடைசியில் ஒரு நாள், ஸன்யாஸிகள், தான் சாப்பிட்ட மிகுதியை நாரதருக்குத் தந்து சாப்பிடச் சொல்ல ஸ்ரீ நாரதரும் அதைச் சாப்பிட, அவருக்கு ஆத்ம ஸ்வரூபம் புலப்பட பிறகு காட்டிற்குச் சென்று தனிமையில் தவம் செய்து அடுத்த பிறவியில் ஸ்ரீ நாரதராகப் பிறந்தார் என்கிறது ஸ்ரீமத் பாகவத புராணம். மனிதனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய நல்ல வாய்ப்புகளில் ஸன்யாஸிகள் சாதுர்மாஸ்ய விரதத்தைச்செய்வதற்காக, தங்கள் வஸிக்கும் (அருகிலுள்ள) ஊரில் வந்து தங்குவதும் ஒன்று, இந்த வருஷம் 03-07-2012 முதல் 30-09-2012 முடிய ஸுமார் இரண்டு மாத காலங்கள் ஸன்யாஸிகள் (துறவிகள்) ஆங்காங்கே தங்கி , தினஸரி பூஜை, வேதாந்த சாஸ்திர விசாரம், மக்களுக்கு அருளுரை போன்றவைகளுடன் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள், மக்கள் தினஸரி அவர்கள் இருப்பிடம் சென்று அவர்களுக்குத்தேவையான பிக்ஷாவந்தனம் முதலியவற்றை அளித்து ,பாதபூஜை செய்து, பூஜா (அபிஷேக) தீர்த்த பிரஸாதம் பெற்றுக் கொண்டு, அருளுரையைக் கேட்டு ஆனந்தித்து பயனடைய வேண்டும், இது அவரவர்களின் விருப்பத்திற்குட்பட்ட செயல் மட்டுமல்ல , கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என்னும் சாஸ்திர விதி, உலகமனைத்தையும் ப்ருஹ்ம ஸ்வரூபமாக த்யானிக்கும் ஸன்யாஸிக்கு ஒரு நாள் (ஒரு வேளை) பிக்ஷாவந்தனம் செய்வதால் (அன்னமளிப்பதால்) இவ்வுலகில் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒரு நாள் உணவிட்ட பலன் கிட்டுமாம், துறவிகளுக்குச் செய்யும் பாதபூஜையால் செல்வம் ஆரோக்யம் போன்ற நன்மைகள் கிட்டும், வஸ்திரதானத்தால் ஆயுள் அதிகரிக்கும், ஒவ்வொரு நாளும் இவர்கள் செய்யும் வேதாந்த உபதேசத்தை-அருளுரையைக் கேட்பதால் என்பது கிருச்ரம் செய்த பலன் கிட்டும், இவ்விதம் கூறும் யதி தர்ம ப்ரதீபிகா என்னும் புஸ்தகம், மேலும் தனது இருப்பிடத்தை நாடி வந்திருக்கும் துறவியை யார் மதிக்க வில்லையோ அவர்களுக்கு பலவிதமான சிரமங்கள் ஏற்படலாமென்றும் பயமுறுத்துகிறது, யதி ஸன்யாஸிநம் பி4க்ஷும் பி4க்ஷான்னம் போ4ஜயேத் து ய: ஸ ஸத்ரயாக3 க்ருத் நித்யம் ஸார்வ தை3வத்ய லிங்க3த: என்பதாக யார் ஒருவர் யதியான ஸன்யாஸிக்கு பிகை்ஷ அளிக்கிறாறோ ,அவர் பலவருஷம் செய்ய வேண்டிய ஸத்ர யாகத்தின் பலனையடைகிறார்.என்கிறார் தூர்வாஸ மஹர்ஷி காளீ புராணத்தில். அத்துடன் மந்திர ஜபம் ஸ்தோத்திர (வேத) பாராயணம் புராண பாராயணம் போன்றவற்றை ஸன்யாஸிகளின் முன்னிலையில் செய்வதால் அவை உடனேயே ஸித்தியைத்தந்து பலனைத்தரும், ஆகவே தற்சமயம் ஆங்காங்கே தங்கி, சாதுர்மாஸ்ய விரதங்களை அனுஷ்டிக்கும் ஸன்யாஸிகளை நாமும் ஆச்ரயித்து பூஜித்து நமஸ்கரித்து பிக்ஷாவந்தனம் செய்து அனுக்ரஹ பாஷனத்தைக்கேட்டு அனைத்து நன்மைகளையும் அடைய ஸ்ரீ பகவான் நமக்கு அனுக்ரஹிக்கட்டும், (இந்த வருஷம் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கும் சில ஸன்யாஸிகளின் விபரங்கள்

Vaithikasri August 2012-ஆசிரியர் எண்ணங்கள்


இன்பமாக வாழ்க்கையை நடத்த தெய்வ அனுக்ரஹம் கட்டாயம் தேவை என்பதை பலரும் உணர்ந்திருக்கிறார்கள், ஒவ்வொரு ஆஸ்திகர்களும் தன்வீட்டில் தனக்குப் பிடித்தமான தெய்வ விக்ரஹங்களை- படங்களை-வாங்கி வந்து வைத்து, தினஸரி சக்திக்குத் தக்கவாறு பூஜை செய்கிறார்கள், சக்தியுள்ள சிலர் தனது வீட்டில் பூஜையறை என்று ஓரிடம் ஒதுக்கி, அதில் தெய்வங்களின் படங்களை வைத்து பூஜிக்கிறார்கள், மற்றும் சிலர் வீட்டில் எங்கு இடமிருக்கிறதோ அங்கெல்லாம் தெய்வங்களின் படங்களை (சுவற்றில் மாட்டி) வைத்து வழிபடுகிறார்கள், உங்கள் வீட்டில் எத்தனை தெய்வ (ஸ்வாமி)ப் படங்கள் இருக்கின்றன? என்று ஒருவரைக்கேட்டால் ஸுமார் 15 முதல் 20 வரை இருக்கலாம் என்று பதில் வரும், அவ்வளவு படங்கள் எப்படி வீட்டிற்கு வந்தன? என்று மறுபடியும் கேட்டால், ஒவ்வொரு ஸந்தர்பங்களிலும் ஒவ்வொரு படங்களை நானாகவே சேர்த்துக்கொண்டேன், சிலவற்றை எனக்கு நெருக்கமானவர் தந்தார், என்றெல்லாம் பதில் வரும், அந்தப்படங்களை வீட்டில் எங்கெல்லாம் மாட்டி வைத்துள்ளீர்கள்? என்று கேட்டால், வீட்டு வாசலில் சில, வீட்டின் உள்ளே நுழையுமிடத்தில் சில, ஹாலில் சில, பெட் ரூமில் சில, சாப்பிடும் இடத்தில் சில, சமையல் ரூமில் சில,கொல்லையில் ண்ச்சில, மாடியில் சில, என்று அடுக்கிக்கொண்டே போவார்கள், ஆக எங்கும் நிறைந்திருக்கும் தெய்வம், தனது வீட்டிலும் எங்கும் பரவி படங்களாக சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்பதைச் சொல்லுவார் அவர். இதுதான் பலரது நிலை, இதில் மாற்றம் தேவை. பெரிய மனிதர் ஒருவரின் எதிரில், நாம் கண்டகண்ட பேச்சுக்களைப் பேச மாட்டோம், கால்களைத் தொங்க விட்டுக்கொண்டோ நீட்டிக் கொண்டோ அமர மாட்டோம், மிகுந்த அடக்கத்துடன் நடந்து கொள்வோமல்லவா! நாம் ஒரு மனிதருக்குத் தரும் இந்த மரியாதையை நம் வீட்டில் படங்களாக காக்ஷிதரும் தெய்வங்களுக்கும் தர வேண்டாமா! தெய்வங்கள் படங்களில் விக்ரஹங்களில் ஸான்னித்யமாக இருக்கும் போது அந்தப்படங்களின் எதிரில் நாம் நாற்காலி சோபா போன்ற வற்றில் கால்களைத் தொங்கப்போட்டுக்கொண்டு அமர்வதும் மற்றவரைப் பற்றிய குற்றங்களையும் நமது தற்பெருமைகளையும், என- பேசக்கூடாத (பொய்) பேச்சுக்களைப் பேசுவதும், சாப்பிடக்கூடாது என்று சாஸ்திரங்களில் நிஷேதிக்கபட்ட பொருட்களை சாப்பிடக்கூடாத அகாலங்களில் சாப்பிடுவதும், தவறல்லவா!, இவற்றை நாம் தவிர்க்க முயற்சிக்கலாமே!, வீடு முழுவதும் தெய்வங்களின் படங்களை மாட்டி விட்டால் நாம் ஸுதந்திரமாக எங்கே நடமாடுவது? பேசுவது? சாப்பிடுவது? தூங்குவது? ஆகவேதான் வாஸ்து சாஸ்திரத்திலும் வீட்டில் பூஜையறை என்று ஒன்று அமைக்க வேண்டும் என்றும் அதில் தெய்வங்களை வைத்து பூஜிக்க வேண்டும், என்றும் கூறப்பட்டுள்ளது, ஆகவே நமது வீட்டில் எத்தனை தெய்வ விக்ரஹங்கள் படங்கள் இருக்கின்றனவோ, அத்தனையையும் ஒன்று சேர்த்து, பூஜை செய்யும் இடத்தில் (பூஜை யறையில்) வைத்துவிட வேண்டும்,அப்போதுதான் அனைத்துக்கும் ஒன்றாக இனைத்து பூஜைகள் நிவேதனங்கள் செய்ய ஸௌகரியமாக இருக்கும், இது காலண்டர் தானே!, இது அழகுக்கல்லவா மாடியிருக்கிறோம்? என்றெல்லாம் ஸமாதானம் சொல்லாமல் வீட்டிலுள்ள அனைத்து தெய்வப்படங்களையும் ஓரிடத்தில் சேர்த்து மாட்டலாம், மேலும் வீட்டில் அதிகமான அளவில் படங்களை விக்ரஹங்களை சேர்த்துக்கொள்ளாமல், படங்களின் விக்ரஹங்களின் எண்ணிக்கையையும் குறைத்துக் கொள்ளலாம். ஒரே தெய்வங்களின் ஒரேவிதமான பற்பல படங்களை வைத்துக் கொள்ளாமல் ஓரிறு படங்களை மட்டும் வைத்திருந்தால் போதும், ஆசார்யர்களின் படங்களையும் மஹான்களின் படங்களையும் தெற்கு நோக்கி மாட்ட வேண்டும், தெய்வங்களின் படங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி மாட்ட வேண்டும், மறைந்த முன்னோர்களின் படங்களை பூஜையறையில் மாட்டக்கூடாது போன்ற நியமங்களை கடைபிடிக்க வேண்டும், சிறிய அளவில் தெய்வ விக்ரஹங்கள் மற்றும் படங்களை வீட்டில் ஒரே இடத்தில் வைத்துக்கொண்டு தினந்தோறும் சிறிய அளவில் பூஜை செய்து வந்தாலே தெய்வ அருள் முழுமையாக நமக்குக் கிட்டும், குடும்பத்தில் நிம்மதி ஏற்படும், இதற்கு பகவான் அனுக்ரஹிக்கட்டும்.

Monday, November 01, 2010

Vaithikasri November 2010 Editorial


நமது கலாச்சாரத்துக்கும் சாஸ்திர ஸம்ப்ரதாயங்களுக்கும் அடிப்படை நம்பிக்கை தான், அந்த நம்பிக்கை என்பது அறிவு சார்ந்ததாக அமைந்துள்ளது, நமது இந்திரியங்களுக்கு புலப்படாத புண்யம் பாபம் தெய்வம் தர்மம் அதர்மம் ஸ்வர்கம் நரகம் பரலோகம் போன்ற பற்பல விஷயங்களை, தனது தவ வலிமையால் உணர்ந்த மஹர்ஷிகள் யோகிகள் ஸித்தர்கள், நமக்குஉணர்த்துகிறார்கள்,அவர்களின் சுயநலமற்ற இந்தச் செயலை புரிந்து கொண்டு, அவர்களது வார்த்தைகளை அப்படியே நம்பி நாமும் ஏற்றுக்கொள்கிறோம், இந்த நம்பிக்கைதான் நமது மதத்துக்கு நமது ஆன்மிகப் பயணத்துக்கு அடிப்படையாக அமைகிறது, ஆகவேதான் நமது பழக்க வழக்கங்களை அறிவியல் காரணங்களைக் கொண்டு ஆராயாமல் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே பலகாலமாக நாம் அனுஷ்டித்து வருகிறோம்,பலர் நமது சாஸ்திர ஸம்பிரதாயங்களுக்கு விக்ஞான ரீதியான காரணங்களைக் கேட்கிறார்கள், மெய்ஞானத்தை விக்ஞானத்தைக்கொண்டு ஆராய்வதில் ப்ரயோஜனமில்லை, ஆனாலும் முதன் முதலில் நமது ஸம்ப்ரதாயங்களை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இது உதவியாக இருக்குமே என்பதற்காக நமது அறிவுக்குத்தக்கவாறு சிற்சில காரணங்களைக் கூறிவருகிறோம், இது ஒரு சிலருக்கு நமது ஸம்ப்ரதாயத்திலுள்ள அவநம்பிக்கையை போக்கவும் உதவலாம்,


ஆனால் ஒரு சிலர் வெறும் நம்பிக்கையை மட்டும் அடிப்படையாகக்கொண்டு செய்யப்படும் செயல்கள் நீடிக்காது என்கிறார்கள், இது தவறு, உலக ஸ்ருஷ்டி முதல் வேதம் சாஸ்திரம் மஹர்ஷிகளின் வாக்கு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே நமது கலாசாரம் வளர்ந்து வருகிறது, முன்னோக்கிச் செல்கிறது, அறிவை அடிப்படையாகக்கொண்டு செயல்படும் (விக்ஞானிகள்) பலரும் தெய்வ நம்பிக்கையுடனேயே இருக்கிறார்கள், ஏன் தெய்வத்தையே முழுமையாக நம்புகிறார்கள் என்பதே இன்றைய சூழ்நிலை.நம்பிக்கை அடிப்படையிலான நமது ஹிந்து மதத்துக்கு, கலாசாரத்துக்கு, சாஸ்திர ஸம்பிரதாயங்களுக்கு, தற்சமயம் அரசாங்க ரீதியில் ஓர் அங்கீகாரம் கிடைத்துள்ளது, ஆம், அயோத்தியில் ராமஜன்ம பூமி விஷயத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்புதான் அது,அகழ்வாராய்ச்சிகள் தஸ்தாவேஜுகள் முதலியவற்றை பரிசீலித்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், ராமர் பிறந்த இடம் இது என்னும் லக்ஷோபலக்ஷம் மக்களின் நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு, அவர்களின் நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டு, இந்தத் தீர்ப்பு வழங்கப்படுகிறது என்று தீர்ப்பில் நீதியரசர்கள் கூறியிருக்கிறார்கள், தீர்ப்பின் விபரங்களை ஆராயாமல் அதன் ஒரு பகுதியான நம்பிக்கை அடிப்படையிலான இந்தத்தீர்ப்பு என்னும் வாசகத்தை மட்டும் நாம் பார்க்கலாம், நமது தேசம் ஸுதந்திரம் அடைந்தது முதல் ஏராளமான தீர்ப்புகள் வெளியிடப்பட்டிருந்தாலும் நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டு வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு இதுவாகத்தான் இருக்க முடியும், அறிவுசார்ந்த ரீதியில் செயல்படும் நீதியரசர்கள், ஸுமார் 60 ஆண்டு காலமாக பல விபரங்களை ஆராய்ந்து, நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு என்னும் வாசகத்துடன் வழங்கிய இந்தத் தீர்ப்பு அரசாங்கம் மற்றும் அறிவு சார்ந்த ஸமுதாயம் சார்பாகக் கூறப்பட்ட கருத்தாகவே கொள்ளவேண்டும்,நமது கலாசாரத்துக்கும் மற்றும் ஒவ்வொரு மதத்திலும் பின்பற்றப்படும் நம்பிக்கை அடிப்படையிலான பற்பல செயல்களுக்கும், இநதத் தீர்ப்பு வருங்காலத்தில் மிகப்பெரும் துணையாக இருக்கும் என்கிறார்கள் படித்த பெரியோர்கள், ஆகவே ஒவ்வொரு மதத்திலும் காணப்படும் நம்பிக்கை அடிப்படையிலான செயல்களை ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், மற்றவரின் மத ரீதியான நம்பிக்கைகளுக்கு ஒவ்வொருவரும் மதிப்பளிக்க வேண்டும், அதற்கான விக்ஞான ரீதியானக் காரணங்கள் தற்சமயம் நமக்கு புலப்படாவிட்டாலும் கூட, நமது முன்னோர்கள் செய்து வந்த அனுஷ்டானங்களை பூஜை ஜப ஹோமங்கள் தர்ப்பணங்கள் ச்ராத்தங்கள் முதலானவற்றை நாமும் தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்யவேண்டும்,


விக்ஞான ரீதியான காரணங்கள் மாறினால் நமது செயல்களிலும் சுணக்கம் ஏற்படலாம், ஆகவே எதற்கும் ஏன்? எதற்கு? என்று விக்ஞான ரீதியில் காரணங்களை ஆராய்ந்த பின்பே செய்வது, என்று எண்ணாமல். நமது மத நம்பிக்கை இது. நமது சாஸ்திர ஸம்பிரதாயம் இது. என்று ஏற்றுக்கொண்டு அனுஷ்டானங்களை செய்ய ஆரம்பித்து விட்டு. பிறகு தேவை பட்டால் விக்ஞானரீதியான காரணங்களை புரிந்து கொண்டு, செய்யும் அனுஷ்டானங்களை உறுதிபடுத்திக் கொள்ளலாம், இதுவே நமது முன்னோர்கள் காண்பித்த நடைமுறை,இவ்வாறு நாம் செய்யும் அனைத்து தெய்வ காரியங்களையும் அனுஷ்டானங்களையும்ச்ரத்தை, விஸ்வாசம், முழு நம்பிக்கையுடன் செய்து முழுமையான பலனையடையவும், மற்றவரின் நம்பிக்கையைஅவமதிக்காமல், மற்றவரின் (மற்ற மதத்தினரின்)நம்பிக்கைகளை யும் மதித்து நடந்துகொள்ளவும், பகவான் நமக்கு அனுக்ரஹிக்கட்டும்,

Vaithikasri October 2010

நமது மதத்திலும் வேதங்களிலும் புராணங்களிலும் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிக கௌரவம் தரப்பட்டிருக்கிறது, பெண்களை ஸாதாரண மனிதரைப்போல் பாவிக்காமல் தெய்வமாகவே கருதி கௌரவம் தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது, வயதான பெண்களை மட்டுமல்லாமல் சிறுவயது பெண் குழந்தையைக் கூட பாலா த்ரிபுர ஸுந்தரியாக கன்னிகையாக பூஜிக்கிறோம், வயதான பெண்களை ஸுவாஸினிகளாக அம்பாளாக பாவித்து பூஜிக்கிறோம்,ஒரு பெண் (மனைவி) அனுமதியின்றி ஆண்(கணவன்) செய்யும் தானம் தர்மம் போன்றவைகள் பலனைத்தராது, தனது பெற்றோருக்கு செய்யும் ச்ராத்தம் கூட பெண்(மனைவி) கூட இருந்தால்தான் (ஔபாஸன அக்னியில்) நடத்தமுடியும் ,


யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா: என்பதாக எந்தக்குடும்பத்தில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்குதான் அனைத்து தெய்வ பூஜைகளும் விரதங்களும் பலனைத்தரும் என்கிறார் மனு, ஆகவே ஆண்களைவிட பெண்களுக்குத்தான் ஸுலபமாக அனைத்து உரிமைகளும் நமது சாஸ்திரங்களில் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் ஸ்வபாவமாகவே அபலைகள் (உடல் வலிமை குன்றியவர்கள்)என்பதால் அவர்களுக்கு அடிக்கடி ஓய்வு தரப்படுகிறது,அர்த்தானாம் ஆர்ஜநே சைவ வ்யயே சைவ நியோஜயேத் என்று , ஸம்பாதிக்கும் பணத்தைசொத்தைபொருளை வீட்டுப் பெண்களிடம் மனைவியிடம் ஒப்படைத்து , அவர்கள் மூலமாக அவற்றை சிலவு செய்யச் செய்யவேண்டும் என்கிறது நீதி சாஸ்திரம். இப்படி பெண்களுக்கு அதிகமாக கௌரவம் தரக்காரணம் அவர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும் தபஸ் (கற்பு) சக்திதான், ஆம்ஆண்கள் பலவிதமாக கஷ்டப்பட்டு பல ஸாதனைகள் செய்து ஸம்பாதிக்கும் தபஸ் சக்தியை பகவான் பெண்களுக்கு இயற்கையாவே அமைத்திருக்கிறார், இந்த சக்திக்குத்தான் பதிவ்ரதா சக்தி எனப்பெயர், தனது நடவடிக்கையின் மூலமும் தனது ஆசாரத்தாலும், அன்பாலும் சிற்சில கட்டுப்பாடுகளாலும் இந்த சக்தியை அனைத்துப் பெண்களும் முன் காலத்தில் பாதுகாத்து வளர்த்து வந்தார்கள், அத்துடன் தேவையான நேரத்தில் அத்தகைய தனது பதிவ்ரதா சக்தியை உபயோகித்தும் வந்தார்கள்.


தனது கணவனை, , கணவன் ஆசைபட்ட தாஸியின் வீட்டுக்கு கூடையில் ஸுமந்து சென்றாள் நளாயினீ என்னும் பதிவிரதை, ஆணி மாண்டவ்யர் சாபமிட்டார், விடிந்தால் உன் கணவனுக்கு மரணம் என்று, கணவனின் மரணத்தைத் தடுக்க வேறு வழி தெரியாத கற்புக்கரசி நளாயினி, ஸூர்யனே உதிக்கக் கூடாது என்று ஆணையிட்டாள், ஸூர்யனும் உதிக்கவில்லை, பிறகு தேவர்களின் ப்ரார்தனைக்கிணங்க மறுபடி ஸூர்யனை உதிக்கச்செய்தாள், ஸ்ரீமத் ராமாயணத்தில் ஓர் ஸம்பவம் ஸ்ரீ ராமரின் தர்மபத்னி ஸீதாதேவி ராவணணிடம் தனது கற்பின் பெருமைகளைக் கூறுகிறாள்,அஸந்தே3சாத் து ராமஸ்ய தபஸசாநு பாலநாத்
ந த்வாம் குர்மி த3க்3ரீவ ப4ஸ்ம ப4ஸ்மார்ஹ! தேஜஸா


ராவணா!,நீ செய்யும் கொடுமைகளுக்கு நான் நினைத்தால் உன்னை எனது கற்புக்கனலால் எரித்து சாம்பலாக்கிவிடுவேன், ஆனால் நான் செய்யமாட்டேன், ஏன் தெரியுமா!, எனது கணவர் எனக்கு (ஆபத்காலத்தில் உனது பதிவ்ரதா சக்தியை உபயோகித்திக்கொள் என்று)ஆணையிடவில்லை, அவர் ஸம்மதமின்றி நான் செய்ய மாட்டேன், ஆகவே நான் உன்னை விட்டுவிடுகிறேன் என்கிறாள், இதுதான் பதிவ்ரதா சக்தி,கற்புத் தவறாத மங்கையர்க்கோர் மழை பதிவ்ரதா சக்தியுடன் திகழும் மாதர்க்காக மாதம் ஒருமுறை மழை பெய்யும் என்கிறாள் ஔவை பிராட்டி, கண்ணகி என்னும் கற்புக்கரசி தனது பதிவிரதா சக்தியால் மதுரை மாநகரையே எரித்தாள் என்பதை இலக்கியம் நமக்கு எடுத்துரைக்கிறது, இதைப்போல் நமது தேசப்பெண்கள் தனது பதிவ்ரதா சக்தியின் மூலம் மிகப்பெரும் காரியங்களையும் ஸாதித்துள்ளனர், ஆனால் இன்றைய பெண்களிடமும் அத்தகைய சக்தி இருக்கிறதா? என்று கேட்டால், ஆம் இன்றளவும் அனைத்து பெண்களிடமும் இத்தகைய சக்தி இருக்கத்தான் செய்கிறது என்பதுதான் பதில்,ஆனால் இன்றைய பெண்கள் இத்தகைய சக்தியை வெளிப்படுத்துவதில்லை, ஏன் என்றால் பெண்கள் பலர் தன்னிடம் இத்தகைய பதிவ்ரதா சக்தி இருப்பதையே தெரிந்து கொள்ளவில்லை, மேலும் பலர் ஸ்வபாவமாக (இயற்கையாக) அமைந்த இந்த தனது சக்தியை பாதுகாக்கத் தெரியாமல் வழிதவறி இழந்து விட்டார்கள், பலர் இழந்து கொண்டிருக்கிறார்கள், இதற்குக்காரணம் பதிவ்ரதா சக்தியை ஸரியாக பாதுகாக்காததுதான், இதை பாதுகாக்கும் வழிமுறைகளாக பெண்கள் சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்,எப்போதும் தந்தை கணவர் மகன் என்னும் பாதுகாப்பு வட்டத்தில் வாழ வேண்டும், குல ஸம்ப்ரதாயங்களை அனுஸரித்து, செய்ய வேண்டிய (குலதைவ ப்ரார்த்தனைஸமராதனை போன்றவற்றை) செய்யச் செய்ய வேண்டும், செய்யக்கூடாத செயல்களிலிருந்து குழந்தைகளை கணவனை தடுக்க வேண்டும், தானும் தவிர்க்க வேண்டும், குழந்தைகளுக்கு நல்ல போதனைகளை அளிக்க வேண்டும்,வேத சாஸ்திரத்தை யனுஸரித்து பற்பல கர்மாக்களை சொல்லி வந்த ஆபஸ்தம்ப மஹர்ஷி, தனது ஆபஸ்தம்ப க்ருஹ்யஸூத்ரபுஸ்தகத்தில் அட்ஞீபீஙஹட்க்ஷீணூஜ்சூ: ஙணூசூணிச்ஙூயு ஆவ்ருத சாஸ்த்ரீப்ய: ப்ரதீயேரன் நான் கூறாத பல குடும்ப ஸம்ப்ரதாயங்களையும் சாஸ்திரங்களையும் குடும்பத்திலுள்ள பெண்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்,ஏனென்றால் இன்றும் கூட பல குடும்பங்களிலும் நடைபெறும்தெய்வ பித்ரு காரியங்கள் பெண்களின் தூண்டுதலாலேயே பெண்களின் ஒத்துழைப்பாலேயே நடைபெறுகின்றன, ஆகவே குடும்பத்தில் தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து கொண்டு பெண்கள் செயல்பட வேண்டும், அவரவர்கள் தாயார் மாமியார் போன்ற பெரியோர்களிடமிருந்து குடும்பப் பழக்க வழக்கங்களைக் கேட்டுத்தெரிந்து கொண்டு, அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும்,பெரியோர்களைக்காண ச் செல்லும் போதும் ஆலயங்களுக்குச்செல்லும் போதும் ஆடை அணிவதிலும் மற்றும் சில விஷயங்களிலும் (தலையை விரித்துப்போட்டுக்கொள்ளாமல் இருத்தல், ஆசாரமாக ஆடை அணிதல்) சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், முன்னோர் ஆசாரப்படி சாஸ்திரப்படி தனது கணவனையும் தனது குழந்தைகளையும் அழைத்துச்செல்வதில் கவனமாக இருக்க வேண்டும்.ஒரு வாஸுகி தேவி பதிவ்ரதையுடன் கணவருக்குப் பணிவிடை செய்ததால்தான் இன்றையதினம் நமக்கு ஐயன் வள்ளுவன் மூலம் திருக்குறள் என்னும் பொக்கிஷம் கிடைத்துள்ளது, ஒரு சாரதாதேவியின் அனுகூலத்தால்தான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் உலகம் போற்றும் உத்தம ஞானியானார், குடும்பத்தைத் துறந்து விட்டு தபஸ் செய்யக்கிளம்பிய யாக்ஞவல்க்ய மஹர்ஷியை தடுத்து நிறுத்தி தாங்கள் எதை (மரணமற்ற தன்மையை) நோக்கிச் செல்லுகிறீர்களோ எனக்கும் அந்த வழியை காட்டிவிட்டு, என்னையும் அந்த வழியிலேலே அழைத்துச்செல்லுங்கள் ,என்று தைரியமாகக் கூறினாள் மைத்ரேயி,ஆகவேவயதானவர்கள் வயதான காலத்தில் பொருப்புகளை தனது நாட்டுப்பெண், பெண், முதலானவர்களிடம் ஒப்படைத்து ஆத்யாத்மிக விஷயத்தில் ஈடுபட முயற்சிக்க வேண்டும். நமது பாரததேசப்பெண்களுக்குத்தான் இத்தகைய பதிவ்ரதா சக்தி அதிகமாக இயற்கையாகவே பகவானால் அளிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு பெண்களும் தனக்குள்ள சக்தியை உணர்ந்து கொண்டு அதன்படி நடந்து கொண்டு தனது தபஸ் சக்தியை பாதுகாத்து வளர்த்து இந்த தேசத்திற்கும் தனக்கும் நன்மையை செய்ய பகவான் அனுக்ரஹிக்கட்டும்.

Thursday, August 12, 2010

ஆசிரியர் எண்ணங்கள் ஆகஸ்ட் 2010

ஆசிரியர் எண்ணங்கள் August 2010
ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நேர்வழிப்படுத்தி நன்மையை அடைவிப்பதே நமது வேதங்களின் நோக்கமாகும்,

உலகம் போற்றும் உத்தம உபநிஷத் தத்துவத்தை வேதம்தான் உணத்துகிறது,

பௌதிக தத்துவத்தை விக்ஞானிகளும் வியக்கும்படி விளக்குவது வேதம்தான்.

காமதேனுவைப்போலக் கருதும் அனைத்து பொருளையும் கைக்கு எட்டும்படி செய்யும் ஏராளமான கர்மாக்களை காட்டுவது வேதம்தான்,

கடவுளைக் கண்கொண்டு காண பக்திவழி காட்டுவது வேதங்களே.

இப்படிப்பட்ட அரிய பொக்கிஷமான வேதத்திற்காகவும், நாம் இதுவரையில் செய்த பாவத்தைப் போக்கிக் கொள்ளவும், நம்மை பரிசுத்தமாக்கும் காயத்ரீ மந்திரத்துக்காககவும் வருஷத்தில் ஒருநாள் ஒதுக்க வேண்டும், அந்த நாள்தான் உபாகர்மா (ஆவணி அவிட்டம்) செய்யப்படு நாள்.


அனாதியான நம் வேதம் நம் முன்னோர்களால் கற்றும் கற்பிக்கப்பட்டும் வந்தது. அதை நாம் இளமையிலேயே கற்றுள்ளோம், அது நம்மிடம் வந்து நாளானதால் பழமை என்ற தோஷம் உண்டாகிறது.ஸமையல் செய்த பொருட்ளை ஒரு ஜா(யா)மமானால் உபயோகிக்கக்கூடாது என்பதைப்போல் கற்ற வேதத்தையும் பழமையாகிவிட்டால் உபயோகிக்கக்கூடாது என தர்மசாஸ்திரம் கூறுகிறது,

ஏன்என்றால்? அதில் சில தோஷம் தோன்றுகிறது. சில நமக்கே புலப்படும். சிலவை அகக்கண்ணுள்ள முனிவர்களுக்கே தெரியும். ஊசிப் போனதை நம் நாக்கும், மூக்கும் ஏற்பதில்லை. துர்நாற்றம் என அதை உண்ண மறுக்கிறோம். அங்ஙனமே நம்மிடமுள்ள வேதத்திற்கு பழமை என்ற ஒரு தோஷம் ஏற்படுகிறது. அந்த தோஷம் நன்மை அடையாதபடி தடை செய்யும். அதை அகற்றவே உபாகர்மா என்ற ஆவணி அவிட்டம் செய்கிறோம்.


தேவபவித்ரம் எனக்கூறப்படும் வேதத்திற்கே தோஷம் உண்டாகுமா? என்ற ஸந்தேஹம் தோன்றும், நமது அனாசாரத்தால் நாம் வேதோக்த கர்மா செய்யாததால், நாம் தினஸரி ப்ரும்ம யக்ஞம் கூறாததால் அந்த வேதத்துக்கும் தோஷம் தோன்றலாம். அதனால் வேதத்திற்கு யாதொரு குறையுமில்லை. நமக்கு அருள்புரியும் வேதத்தின் சக்திதான் குறையும்.

வேதோக்தமாக, கும்பாபிஷேகம் செய்து பிரதிஷ்டை செய்த ஆலய மூர்த்திகளுக்கு சில அசுத்தம் ஏற்பட்டால்ஆலய மூர்த்திக்குத் தீட்டோ, அசுத்தமோ உண்டா? ஆனால் அந்த தெய்வ விக்ரஹங்களுக்கு அனுக்ரஹம் செய்யும் அருள் சக்தி குன்றும் என்பது போல், நமது ஸங்கத்தால் பரிசுத்தமான வேதமும் சிறிது தோஷமுள்ளதாக ஆகின்றது.

உயர்ந்த வஸ்த்துக்களும் மல மூத்ர ரத்த மஜ்ஜை நிறைந்த நம் உடலுட் சென்றவுடன் மலமாகிறதல்லவா, அதுபோல்

ஆதலால்தான் இயற்கையிலேயே பரிசுத்தமாயினும் நம்மாலும், காலத்தாலும் வேதம் தோஷமுள்ளதாக ஆகின்றது, ஆயுதங்கள் உபயோகிக்கப்படாவில் துருப்பிடிக்கும். அதைச்சாணை தீட்டவேண்டும், உபயோகமானாலும் கூறு மழுங்கும். அப்போதும் அதைச் சாணை தீட்டவேண்டும்.

ஸ்ரீ க்ருஷ்ணர் ஒருவருக்கே வேதம் இந்த தோஷமில்லாது இருக்கட்டும் என அவர் குரு ஸாந்தீபினிமஹர்ஷி அருள் புரிந்தார். அப்படியிருந்தும் தாம் செய்யாவிடில் பிறரும் செய்யார் என அஞ்சி, கண்ணனும் ராமரும் கூட உபாகர்மாவை சிரத்தையாகச் செய்தனர்.

வேதத்தை அத்யயனம் செய்தாலல்லவா இந்த தோஷம் தோன்றும்? வேதமே தெரியாதவர்கள் இதை ஏன் செய்ய வேண்டும்? என்று சிலருக்குத் தோன்றலாம்.

மூன்று வேதங்களிலிருந்தும் ஸாரமாக எடுக்கப்பட்டது மூன்று பாதமுள்ள காயத்ரீ. அது உபநயனத்தின் (பூணல்போடும்) போது நம் அனைவருக்கும் உபதேசிக்கப்பட்டுள்ளது. அந்த வேத பாகம் (காயத்ரீ மந்திரம்) தோஷமில்லாமல் இருக்கவாவது கட்டாயம் உபாகர்மாவை செய்ய வேண்டும்.

இந்த உபாகர்மா ப்ரும்ஹசாரி, க்ருஹஸ்தன், வானப்ரஸ்தன் என்ற மூன்று ஆஸ்ரமிகளாலும் செய்யத்தக்கது. துறவிகள் கூட வ்யாஸபூஜை என்ற முறையில் சிஷ்ய பரிவாரத்துடன் ஸ்ரீவேதவ்யாஸரை பூஜிக்கின்றனர்.

ஆகவே வேதமும், வித்யாப்யாஸமும் ஸம்பந்தமுள்ள கர்மா இந்த உபாகர்மா,ஆகவே உபாகர்மா அன்று ஒருநாளாவது வேதம், வேத அங்கங்களின் முதல் பதத்தையாவது குரு முகமாக உபதேசம் பெற்றுக்கொள்ளலாம்,

வேதங்களுக்கு வேதமந்திரங்களுக்கு நமக்கு ஸொந்தமான காயத்ரீ மந்திரத்துக்கும் சக்தியைத்தரும் உபாகர்மாஆவணி அவிட்டம்என்று கூறப்படுகிறது,

வருடத்துக்கு ஒரு நாள் செய்ய வேண்டிய இந்த நிகழ்ச்சியை நாம் சிறிது கவனத்துடன் சிரத்தையுடன் செய்ய வேண்டும், மற்ற மதத்தினர் வேதத்துக்காக ஒரு மாதம் முழுவதும் பகலில் உபவாஸம் இருந்து விரதம் அனுஷ்டிக்கிறார்கள், நாம் அன்று ஒரு நாளாவது நியமத்துடன் இருக்க வேண்டாமா? ,

அன்புடன் காண்டரிஷிகளுக்குச் செய்யும் ஹோமத்தில் நாம் அனைவரும் ஒன்று சேரலாமே? வேத வேதாந்தங்களை வ்யாஸ கலசத்தினருகே, அக்னி முன்னே ,ஆசார்யர் முகமாக உபதேசம் பெறலாமே? இந்த ஒரு நாளேனும் வேற்றுமையைவிட்டு, ஒற்றுமையுடன் நம் ஸமூகத்துடன் அளவளாவ இரண்டொரு மணி நேரம் அளிக்கலாமே? இதற்கு பகவான் அனுக்ரஹிக்கட்டும்,

ஆசிரியர் எண்ணங்கள் july 2010

ஆசிரியர் எண்ணங்கள் july 2010

நமது ஸனாதன தர்மத்துக்கு மூலப்ரமாணமா இருப்பது நமது வேதங்களே, யாராலும் இயற்றப்படாத என்றும் அழியாத இந்த வேதங்கள் இன்று வரை பலரால் காப்பாற்றப்பட்டு வருகின்றன, வேதங்களை அழியாமல் காப்பாற்றுதல் என்றால் அதை முறையாக கற்றுக் கொண்டு அதன்படி செயல்படுதல் எனப்பொருள்,

நாகரீகம் மிகவும் வளர்ந்து விட்ட இன்றைய சூழ்நிலையில்கூட தனது பரம்பரை வழக்கப்படி தன்னைப்போல் தனது குழந்தைகளும் வேதம் அத்யயயனம் செய்ய வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள், குறிப்பாக வைதிகர்கள் புரோஹிதர்கள் அர்ச்சகர்கள்சிவாச்சார்யர்கள் என்னுகிறார்கள், இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம், ஆனாலும் வேதத்தை தனது குழந்தைக்கு தானே தனது வீட்டில் கற்றுக் கொடுக்க இயலாமல் வேத பாடசாலைக்கு அனுப்புகிறார்கள்,

இதற்கு அவர்கள் வஸிக்கும் சின்னஞ்சிறிய வீட்டின் சூழ்நிலை வேதம் கற்றுத்தர பொருமையின்மை நேரமின்மை போன்ற பற்பல காரணங்கள், இருந்தாலும் குழந்தைக்கு உரிய காலத்தில் உபநயனம் செய்து வைத்ததைப்போலவே அந்த குழந்தைக்கு வேதத்தையும் தானே கற்றுத்தர முயற்சிக்க வேண்டும்,

எத்தனையோ குடும்பத்துக்கு புரோஹிதராக இருந்து ஹிதமான ஆலோசனைகள் சொல்லி, வைதிக கார்யங்களை நடத்தி வைப்பவர்கள் தனது குழந்தைக்கு என சிறிது நேரத்தை ஒதுக்கி பொருமையுடன் தான் கற்ற வேதத்தை தனது பிள்ளைகளுக்கு சொல்லித்தரலாம், முழுமையாக முடியாவிட்டாலும் கூட புருஷஸூக்தம் ருத்ரம் சமகம் போன்ற முக்கியமான வேதப்பகுதியையாவது தானே சொல்லி வைக்க முயற்சிக்கலாம்.

உபநயனம் செய்து வைத்து வேதமும் சொல்லித்தருபவரே ஆசார்யர் எனப்படுவார் என்கிறது சாஸ்திரம், ஒவ்வொரு குழந்தைக்கும் அவரவர் தந்தையே முதன் முதல் ஆசார்யன் ஆகிறார், அஷ்ட வர்ஷம் ப்ராஹ்மணம் உபநயீத தம் அத்யாபயீத எட்டு வயதில் தனது பிள்ளைக்கு உபநயனம் செய்து வைத்து வேதமும் கற்றுத்தரவேண்டும் என்கிறார் ஆபஸ்தம்பர் தர்ம ஸூத்ரத்தில்.

ஆகவே தன் வீட்டில் வஸதியில்லை நேரமில்லை பொருமையில்லை போன்ற காரணங்களை பொருட்படுத்தாமல் வைதிகர்கள் புரோஹிதர்கள் அர்ச்சகர்கள் சிவாச்சார்யர்கள் ஆகியோர் தனது வம்ச பரம்பரா ப்ராப்தமான (வேதஆகம) வித்யையை, தானே சிறிதாவது தனது குழந்தைகளுக்கு சொல்லித்தர ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்

Thursday, June 10, 2010

ஆசிரியர் எண்ணங்கள் ஜூன் 2010

ஆசிரியர் எண்ணங்கள் June 2010
தெய்வ சக்தியால் மட்டுமே ஸாதிக்க முடியும் என்னும் பல விஷயங்களில் குழந்தை பிறப்பதும் ஒன்று, ஒரு ஜீவன் எப்படிப்பிறக்க வேண்டும்? எங்கே? யாருடைய குடும்பத்தில்? யாருக்குக் குழந்தையாக? பிறக்க வேண்டும் என்பதையும் அவரவரின் கர்மாக்களுக்குத் தகுந்தவாறு தெய்வமே தீர்மானிக்கிறது, ஒரு குழந்தை மனிதனாகவோ மிருகமாகவோ பிறப்பதும் ஆணாகவோ பெண்ணாகவோ பிறப்பதும் பாரதத்திலோ வெளிநாட்டிலோ ஆஸ்திக நாஸ்திக குடும்பத்திலோ பிறப்பதும் தெய்வ அருளால் மட்டும்தான்.

இவ்வாறு தெய்வ அருளால் பிறவியெடுக்கும் ஒரு ஜீவன் நம் குடும்பத்தில் வந்து பிறக்க வேண்டுமென்றால், நமக்கு தெய்வ அருள் இருக்கிறது என்றுதான் பொருள், இந்த தெய்வ அருள் ஒரு சிலருக்குத் தான் கிடைக்கிறது,

திருமணமாகி ஒரு சில மாதங்களிலேயே குழந்தை தவழ்ந்து விளையாடும் குடும்பத்தையும் , திருமணமாகி வெகு நாட்களாகியும் பல பரிஹாரங்கள் செய்தும் குழந்தை பிறக்கத் தாமதமாகும் குடும்பத்தையும் காண்கிறோம்,

ஆகவே குழந்தை எப்போது பிறக்கவேண்டும்? எப்படிப் பிறக்க வேண்டும்? என்பதை நாம் தீர்மானிக்க முடியாது, நமது புண்யபாபங்களின் பரிணாமத்துக்கு ஏற்ப தெய்வமே இதை தீர்மானிக்கிறது,


தற்காலத்தில் ஒரு சிலர்,பொருளாதாரம் போதாதே!,அழகு குறையுமே! போன்ற ஒரு சில ஸுயநலக் காரணத்துக்காக குழந்தை பிறப்பதைத் தள்ளி போடுகிறார்கள், அல்லது கர்ப்பத்தில் உருவாகும் குழந்தையை கலைத்து விடுகிறார்கள் என்பதை அறிகிறோம், இது தவிர்க்கப்பட வேண்டும்,

ஏனென்றால் ஒரு ஜீவனை கொல்லுதல் என்பது மிகப்பெரும் பாபம், கர்ப்பத்தில் உருவாகும் ஜீவனுக்கும் உயிர், மனது, உணர்ச்சிகள், உடல், ஆகியவை உண்டு, அந்த ஜீவனைக் கொலை செய்தல் என்பது ப்ரூணஹத்தி (குழந்தையைக் கொல்லுதல்) என்னும் பாபம், இதற்கு ப்ராயஸ்சித்தம் செய்வது தற்காலத்தில் ஸாத்யமில்லை,

மேலும் பாபம் செய்துவிட்டு ப்ராயஸ்சித்தம் செய்து கொள்வதைக் காட்டிலும் பாபமே செய்யாமல் இருக்கலாம் அல்லவா? இவ்வாறு சிசுவை கொலை செய்தல் அல்லது சிசு உருவாவதைத் தடுத்தல் என்னும் பாபம் தன்னை மட்டுமில்லாமல் தனது குடும்பத்தினரையும் கூட பாதிக்கலாம்,

நமது தேசத்தில் எவ்வளவோ பேர்கள் தனக்கு வம்ச வ்ருத்திக்கு ஏதாவது ஒரு குழந்தையாவது பிறக்காதா! என்று பல வருஷமாக ஏங்கிக் கொண்டிருக்க, இறைவன் நமக்கு மட்டும் காலத்தில் கருவில் குழந்தை உருவாகும் பாக்கியத்தை அளித்துள்ளானே ! இது நமக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்! என்று நினைத்து கணவனும் மனைவியும் குடும்பத்தினரும் ஸந்தோஷப்பட வேண்டும்,

குழந்தைச் செல்வம் என்பது மிகப்பெரும் செல்வம், மற்ற வஸதிகளைப் போலவே இதுவும் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிட்டும், அதை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், அவ்வாறின்றி இப்போதுதானே திருமணம் ஆகியிருக்கிறது, இப்போது குழந்தைக்கு என்ன அவஸரம், என்ற தவறான எண்ணத்தை வளர்த்துக்கொள்ளக் கூடாது,

ஜாதக ரீதியாக ஏழ்மையை கஷ்டத்தைஅனுபவிக்கும் குடும்பம் கூட, குழந்தை பிறந்த நேரத்தால், குழந்தையின் அதிர்ஷ்டத்தால் அனைத்து கஷ்டங்களும் விலகி சீரும் சிறப்புமாக வாழுகிறது என்பதை இன்றும் நாம் பார்க்கிறோம்.


நமக்குப் பிறக்கும் குழந்தை ஒரு மாவீரனாகவோ ஒரு யோகீஸ்வரராகவோ ஒரு மாபெரும் மாமேதையாகவோஒரு மிகப்பெரும் தேச பக்தனாகவோ கூட இருக்கலாம், இப்படிப்பட்டவர்கள் இந்த தேசத்துக்கு கிடைப்பதை நாம் ஏன் தடை செய்ய வேண்டும்?

சொல்லப்போனால் குழந்தை பெற்றுக்கொள்வதற்கோ அதை தள்ளிப்போடுவதற்கோ அல்லது தடுப்பதற்கோ நமக்கு முழு ஸுதந்திரம் இல்லை, நமக்குப் பிறக்கும் குழந்தை இந்த தேசத்தின் குழந்தை, இந்த ஸமூகத்தை மேம்படுத்த வரும் மாவீரன்,

ஆகவே இவற்றை நினைத்து நல்ல குழந்தை நம் வம்சத்தில் பிறப்பதை நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


ஆகவே கணவன் மனைவி இருவரும், திருமணம் ஆனது முதல் ஒரே இடத்தில் ஒன்றாக வஸித்தல், காலத்தில் தானாக உருவாகும் கர்ப்பத்தை கலைக்க முயற்சிக்காது இருத்தல் வம்ச வ்ருத்திக்காக தெய்வ அருளால் பிறக்கும் குழந்தையை ஸந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை செய்ய முயற்சிக்க வேண்டும்,

குழந்தை எப்போது பிறக்க வேண்டும் என்பதை தான் முடிவு செய்யக்கூடாது, தெய்வ அருளால் ஏற்படும் கர்ப்பத்தை கலைக்க முயற்சிக்கக்கூடாது, காலத்தில் பிறக்கும் குழந்தையை ஏற்றுக் கொண்டு நன்மையையடைய ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்
May 2010 ஆசிரியர் எண்ணங்கள் May 2010

இந்த மண்ணில் பிறக்கும்போது ஒவ்வொரு குழந்தையும் நல்லக்குழந்தையாகத்தான் பிறக்கிறது, அந்தக்குழந்தை நல்லவனாவதும் தீயவனாவதும் பெற்றோர் வளர்க்கும் விதத்தைப் பொருத்தது என்கிறார் ஒரு கவிஞர், இது உண்மை தான்,

ஆனாலும் நமது சாஸ்திரங்கள் இதையும் மீறி ஒரு விஷயத்தை உணர்த்துகிறது, அதாவது அந்தக் குழந்தை நல்லவனாக, தீயவனாக, உறுவாவது மண்ணில் பிறந்த பிறகு அல்ல, பிறப்பதற்கு முன்பாகவே அதாவது அந்தக் குழந்தை தனது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதே என்கின்றன சாஸ்திரங்கள்,


தாயின் கர்ப்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடையும் குழந்தை, தனக்கு வேண்டிய உணவை எவ்வாறு தாய் மூலம் பெற்றுக்கொள்கிறதோதாய் சாப்பிடும் சாப்பாட்டையே தானும் சாப்பிடுகிறதோஅவ்வாறே தாயின் ஒவ்வொரு இந்த்ரிய ஸுகத்தையும் தானும் அனுபவிக்கிறது, தாய் நுகரும் வாஸனை, தாயால் கேட்கப்படும் சொற்கள், தாயால் காணும் காக்ஷி, தாய் பேசும் பேச்சு, தாய் விடும் மூச்சு, முதலான தாயின் அனைத்து அம்சங்களுமே குழந்தையைச் சென்றடைகிறது,

குறிப்பாக தாய் காதால் கேட்கும் சொற்களும் அதனால் தாய்க்கு ஏற்படும் எண்ணங்களும் அந்தத் தாயையும் தாயின் கர்ப்பத்தில் வளரும் குழந்தையையும் சென்றடையும்,பாதிப்பை ஏற்படுத்தும்,


துஷ்டனான ஹிரண்யகசிபுவின் மகன் ப்ரஹ்லாதன், சிஷ்டனாக (நல்லவனாக) ஆனது எப்படி?, ப்ரஹ்லாதனுக்கு மட்டும் பிறக்கும் போதே தெய்வநம்பிக்கை ஏற்பட்டது எவ்வாறு? இதை பல முறை அவன் தந்தை ஹிரண்யகசிபுவும் குரு சண்டாமர்கர்களும் கேட்டபோதும் அதற்கான பதிலை விரிவாகத் தெரிவிக்காத பக்த ப்ரஹ்லாதன், தன்னுடன் கூட படிக்கும் மாணவர்கள் (இதே கேள்வியை) கேட்கும்போது மட்டும் உண்மையைக்கூறுகிறான்,

அதாவது தனது தந்தை ஹிரண்யகசிபு தவம் செய்ய காட்டிற்குச் சென்றிருந்த ஸமயம், தனது தாய் கயாது என்பவள் கருவுற்றிருந்தாள், இந்திரனின் துன்புறுத்தலுக்கு பயந்த தாய் கயாது அம்மாள், நாரதரை அடைக்கலம் அடைந்தாள், நாரதரும் தனது ஆசிரமத்திலேயே அடைக்கலம் தந்ததுடன், அடிக்கடி பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் பெருமைகளையும் குணங்களையும் கதைகளாக கயாது அம்மாளுக்குக் கூறிவந்தார்,

அந்த ஸமயம் தாயின் கர்ப்பத் திலிருந்த ப்ரஹ்லாதனாகிய நான் அவற்றைக்கேட்டுக் கொண்டிருந்தேன், அதுமுதல் எனக்கு பகவானிடம் தீவிர பக்தியும் நம்பிக்கையும் ஏற்பட்டது, அந்த ஸம்பவம் பகவானின் அருளால் இப்போதும் என் நினைவில் இருக்கிறது, தாயின் கர்ப்பதில் இருக்கும்போது நான் கேட்ட நல்லவிஷயங்களே என்னை நல்லவனாக மாற்றியது, என்கிறார் பக்த ப்ரஹ்லாத ஸ்வாமி,

உத்தரையின் கர்ப்பதிலிருந்த பரீக்ஷித்தை அஸ்வத்தாமாவின் ப்ருஹ்மா ஸ்த்ரத்திலிருந்து பகவான் தனது சக்ராயுதத்தால் ரக்ஷிக்க, கர்பத்திலிருந்த (பரீக்ஷித்) குழந்தை பகவானை ஸ்தோத்ரம் செய்ததாக ஸ்ரீ பாகவதம் கூறுகிறது,

தனது தாயார், தான் கருவுற்றிருக்கும்போது தினஸரி பஜனைப்பாடல்களை கேட்டுக் கொண்டிருந்ததால் தான், தனக்கும் தினஸரி (ரகுபதி ராகவ ராஜாராம்) பஜனை செய்ய வேண்டும் என்னும் எண்னம் தோன்றியதாக மஹாத்மா காந்தி தனது ஸத்ய சோதனையில் கூறுகிறார். இதைப்போல் பற்பல ஸம்பவங்கள்,

இதனால் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கும் கேட்கும் சக்தி, நினைக்கும் திறன் உண்டு என்பதையும் அதுவே அந்தக்குழந்தையை நல்லவனாகவோ தீயவனாகவோ உருவாக்குகிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம்,


தற்சமயம் நல்ல சப்தங்கள் காதில் விழுவதே அரிதாகி விட்டன, எங்கும் வாஹன இரைச்சல், டி.வி குக்கர் மிக்ஸி போன்ற யந்திரங்களின் சப்தங்கள், சண்டை சச்சரவுகளால் ஏற்படும் கொடுமையான சொற்கள், இப்படிப்பட்ட சப்தங்களிலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் தன்னை அப்புறப்படுத்திக்கொள்ள வேண்டும், இந்தக் கொடிய சப்தங்கள் தன்னை மட்டுமல்லாது தனது கருவில் வளரும் குழந்தையையும் பாதிக்கும் என்பதை உணர வேண்டும்,

தன் வயிற்றில் வளரும் குழந்தையை கருத்தில் கொண்டு உணவில் (பத்யமான) சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதைப் போல், செவிக்கு ஆஹாரமான சப்தங்களை கேட்பதிலும் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்,

கர்ப்பிணிப்பெண், தனக்குப்பிறக்கும் குழந்தை எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாளோ, கர்ப காலத்தில் அதற்குத்தக்க சூழ்நிலையில் அவள் வஸிக்க வேண்டும்,

குழந்தை ஸங்கீத மேதையாக உருவாக வேண்டும் என்று ஆசைப்பட்டால் அடிக்கடி சாஸ்த்ரீய ஸங்கீதத்தைப்பாடவோ அல்லது கேட்கவோ வேண்டும், வேத சப்தங்கள், இரைச்சலில்லாத நாமஸங்கீர்த்தனம், தர்மிஷ்டர்கள் மூலம் தர்ம ப்ரவசனங்கள், ஆகியவற்றை கேட்க வேண்டும் ,

கர்ப்பிணிப் பெண்கள் நமது கலாச்சாரத்துக்கும் சாஸ்திர ஸம்ப்ரதாயங்களுக்கும் உட்பட்ட சூழ்நிலையில் தன்னை இருத்திக்கொண்டு, கெட்ட சப்தங்களை விலக்கி நல்ல சப்தங்களை காதால் கேட்டுக்கொண்டு, தெய்வ நினைவோடு இருந்து கொண்டு, தெய்வ பக்தியுள்ள பெற்றோர் பெரியோர் ஆகியோர்களிடம் விநயமுள்ள புத்திசக்தி மேதா சக்தியுள்ளதேசபக்தியுள்ள தீர்காயுஸ்ஸான குழந்தைகளைப் பெற்று ஸுகமாக வாழ ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்.

Saturday, March 21, 2009

Vaithikasri February 2009

நமதுதேசத்தின் கலாசாரத்தை மற்ற தேசங்களுக்கு வெளிப்படுத்துபவை நமது ஆலயங்களே. ஒவ்வொரு ஊரிலும் பற்பல தெய்வ ஆலயங்கள், கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று போன்ற பழமொழிகளும் ஆலயங்களின் பெருமைகளை நமக்கு எடுத்துரைக்கின்றன,

ஆபி4ரூப்யாச்ச மூர்த்தீனாம் தே3வ: ஸான்னித்4யம்ருச்ச2தி என்பதாக ஆலயங்களில் தெய்வ உருவங்களை (சில்ப) சாஸ்திர முறைப்படி வடிவமைப்பதாலும், அர்ச்சகஸ்ய ப்ரபா4வேன சிலா ப4வதி கேவ:(ங்கர:). என்பதாக சிலைகளை ஆகம வைதீக தாந்த்ரீக முறைப்படி ப்ரதிஷ்டை செய்து பூஜைகள் செய்யப் படுவதாலும், வருடாவருடம் திருவிழாக்கள் நடத்தப் படுவதாலும் தெய்வங்களுக்கு அருட்சக்தி ஸித்திக்கிறது, (தீக்ஷை பெற்று) வேதம் ஆகம வைதீகம் ப்ரயோகங்கள் கற்று, தெய்வங்களை பூஜை செய்யும் அர்ச்சகர்கள் (சிவாச்சார்யர்கள்) தெய்வ அருளை மக்களுக்கு பெற்றுத்தருபவர்கள் , புயல் வெள்ளம், போன்ற ஆபத்தான காலங்களிலும் பூஜைகளை தவறாது செய்து வரும் இவர்கள் பொதுமக்களுக்காக ஆற்றும் பணி மிகவும் போற்றத்தக்கது,

ஆனால் தற்காலத்தில் சில அர்ச்சகர்கள் தாங்களது பெருமைகளை முழுமையாக உணராததால் உலகத்துடன் (நாகரிகத்துடன்) கலந்து விடுகின்றார்கள், இவர்களும் தாங்களது தகுதியை உணர்ந்து, வேதம் ஆகமம் ஸம்ஸ்க்ருதம் பாடல்கள் ஆகியவற்றில் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ளலாம்,

பக்தர்களின் பெயர், ராசி சொல்லி அர்ச்சனை, ஸங்கல்பம் சொல்ல ஸம்ஸ்க்ருத ஞானம் அவசியம், அபிஷேகம் தீபாராதனை போன்ற காலங்களில் வேத மந்திரத்தை ஸ்வர சுத்தத்துடன் சொல்ல வேதத்தை முறையாக கற்றுக்கொள்ளுதல் அவசியம். இவற்றுடன் ஆசாரமும் (தூய்மை) அவசியம், முச்சந்தியில் அமைந்திருக்கும் விநாயகரை பூஜிக்கக்கூட ஆசாரம் தேவை.

தினஸரி ஸ்னானம் செய்தல், திருமணமானவர்கள் பஞ்சகச்ச முறையில் வேஷ்டி கட்டிக் கொள்ளுதல், குடுமி வைத்துக் கொள்ளுதல், வெளி இடங்களில் சாப்பிடாது இருத்தல், ஆகியவற்றை ஒவ்வொரு அர்ச்சகரும் எப்போதும் கடைபிடிக்க வேண்டும், தெய்வங்களை பூஜை செய்யும் போதாவது இவ்வாறு இருக்க முயற்சிக்கலாம்,

மக்கள் ஆலயத்தை நாடுகிறார்கள், தெய்வத்தை நம்புகிறார்கள், தெய்வ ஸான்னித்யம் அர்ச்சகர்களின் கையிலுள்ளது, ஆலய தெய்வத்தின் அருளை மக்களுக்குப் பெற்றுத் தரும் பாக்யத்தைப் பெற்றுள்ள அர்ச்சகர்கள், ஆலயத்தில் ஆசாரத்தோடும் ச்ரத்தையோடும் பூஜை செய்யவும் வேத மந்திரங்களை ஸ்வர சுத்தத்துடன் சொல்லவும் ஸ்ரீபகவான் அனுக்ரஹிக்கட்டும்.

Thursday, May 22, 2008

Rajagopala Ganapatigal Introduction

Rajagopala Ganapatigal
(Performed Jata and Ghana Veda Parayanam at Lots of Places)
Introduction
Sri V.Ragagopala Ganapatigal hails from a family of Deekshithars (Vedic scholars who have performed yagna sacrifices and are performing Agni hotric rites daily throughout their life time) He was born in Sengalipuram on the 20th of August 1963 to Br Sri Vaidyanatha Dikshitar and Srimathi Rajeswari Ammal. Sengalipuram ("Shivakalipuram" as it is known in scriptures) is a village where hundreds of Deekshithar families are living for generations upto today and where great saints like Sri Muthannaval and scholars like Sri Anantharama Deekshithar are born.
Degrees Obtained
diploma in Astrology from Madurai Kamaraj University
B.Com From Madras University - Madras
M.A. From Mysore University - Mysore
diploma in Computer science from Madurai Kamaraj University
Awards(Titles) Honoured
"Veda Vidya Alankara" from the Sanskrit Academy - Varanasi- U.P (1986)
"Vidya Ratnam" from Varanasy (Kasi) Maharaj with a gold Chain (1986)
"Salakshana Ghanapati" From Sri Kanchi Kamakoti Sankaracharya Swamigal (Veda Rakshana nidhi Trust) (1987)
"Salakshana Ghanapati" From Tirumala Tirupathy devasthanam (1987)
"Salakshana Ghanapati" From Srirangam Andavan Swamigal ,Srirangam. (1988)
"Veda Vidya Visharada" From Srirangam sriimath Andavan Swamigal (2007)
Certificates honoured In Shastras
"Nyaya Sastra" at the Advaita Sabha - Kumbakonam
"Vedantha Sastra" at the Advaita Sabha - Trichy
"Meemamsa Shastra" at the "Sastra Poshaka Sabha" (Sringeri Mutt) at Tenali
"Sroutam" at the "shashtyabtha purthy Trust" Sri Kanchi Kamakoti Shankara Mutt - Kancheepuram
"Veda Bhasyam" at the "shashtyabtha purthy Trust" Sankara Mutt at Kancheepuram

Vedas_ F A Q

Vedas_ F A Q

 1. What are the Vedas...?
 2. What do the Rig, Yajur, Sama and Atharva Veda contain ?
 3. What are the Classifications ... ?
 4. Are the Vedas only for the Indians or the Hindus.?
 5. Goal of Vedas Spirituality & Materialism..?
 6. Idol Worship Vs. Spiritual Worship...?
 7. How were the Vedas saved without changes for more than 5,000+ Years ?
 8. What can I do for 'Veda Rakshana' or saving the Vedas ?

1) What are the Vedas for, are they collection of commentaries on Gods or do they specify ways of living ? The Vedas are divided into four (The Rig, The Yajur, The Sama ,The Atharva) of the 14 Vidyaasthanas ( texts that have Knowledge and wisdom enshrined in them ). These are the doors to Dharma. Dharmais that which, if we follow, will make us contended and happy. Thus these are called DharmaPramanas ,that which gives one true knowledge of Dharma. Top

2) What do the Rig, Yajur, Sama and Atharva Veda contain ? The whole of the Rig Veda Samhita is in the form of verses, about 10,170 in number (out of 20,500 in all the four Vedas). 'Rik' was the earlier name of 'slokas', a group of Riks are called a 'Sooktha'. It starts & ends with Agni's praise, symbolizing the light of the soul's consiusness (Atma chaitnayam)- the glow of the soul's awakening. The first place to Rig, may be because Yajur's actions and Sama's musical recitation emerge from basic Riks.

The word 'Yajus' from 'Yaj' means worship, the word Yajna (sacrificial worship) also derived from it. It gives a practical shape to in the form of Yajna. It describes in prose the procedural details of different Yajnas. The main branches are Sukhla (white) known to be learnt from the Sun God, Surya, and the Krishna Yajur Veda(black). The glory of Yajur Veda lies in its good presentation of vedic karma or rituals. Yajnas like Darsa Poornamasa, Somayaga, Vaajapeya (are you thinking of Vajpayee! actually it means one who has conducted this Yajna ), Rajasooya, Aswamedha and many others in all their procedural detail by the Thaitreeya Samhita in Krishna Yajur Veda..Yajur is of special significance to Advaitins - those who understand and believe in the "non-dualism" school of philosophy, that declares that there is but One Reality, that the individual self and the Brahman are one. ( Jeevatman and the Paramatman reside in you as same ). Any philosophical doctrine should contain a Sootra or aphorism, to enunciate the doctrine in a condensed and pithy form. Bhaashya is a detailed commentary and Vaartika, a further elaborate elucidation of the Bhaashya.

Atharva means purohit , named after Rishi Atharvan, who brought it to light. The Athava Veda contains many types of mantras to ward off evil, hardship and to destroy enemies. Also many hymns dealing with creation esp. "Prithvi Sookthm", the hymn extoling the wonder of creation.The Upanishads are Prasna, Mundaka, and Madukya, where the third one helps in ensuring Moksha or liberation of soul from continuous births. Top

3) What are the classifications & sub-classifications in Vedas? What do the others signify ? To understand the classifications one should know know the Vidyaasthanas : the four Vedas, the six Vedaangas or auxiliaries to the Vedas viz.

 1. Siksha which is euphony and pronunciation;

 2. Vyaakarna which is grammar;

 3. Chandas which is metre;

 4. Niruktha or etymology;

 5. Jyotisha or astronomy;

 6. Kalpa or procedure;

 7. Meemaamsa or interpretation of Vedic texts;

 8. Nyaaya or logic;

 9. Puraana or mythology and

 10. Dharma Saastras which contain the codes of conduct.

The four Vedas from the core of the vedic religion. They are the supreme authority - Pramaana. The Vedas form the basic structure from which have been derived the 6 Vedangaas and the 4 Upaangas, in order to supplement the understanding of the Vedas. The Vedas are meant to be studied with the other ten of its constituents.
The following table gives the various branches of the 4 Vedas:

Vedas

Veda Sakha Samhita / Brahmana Aranyaka Upanisad
Rig Sakala aitreya aitreya aitreyopanisad
Sankhyana kausitaki kausitaki kausitaki
Yajur Taitriya TAITRIYA

SATAPATHA

Taitriya Taitriya , svetaswaratha , katho
Maitriyaniya
Kanva BRHADARNYAKA brhadaranyakamaitriisa , isavasyo
Madhyandina
Sama RANAYANIYA PANCAVIMSA , ARSEYA, VAMSA , TALAVAKARA , DIAVATA , JAINMINIYA UPANISHAD , SADVIMSA , MANTRA , CHANDOGYA , SAMAVUDHANA

SAMHITO PANISHAD

kenopanisad
jaiminiya
chandogyopanisad
kauthama
Atharva SAUNAKA GOPATHA mundako , mandukyo
PIPPALADA prasnopanisad

The 'Samhita' ,which means that has been collected and arranged, is the main text portion, the hymns, while the 'Braahmanas' lists the Vedic Karmas (rituals to be performed) . When the mantras contained in a Veda Samhita are converted in to action, called Yajna , the Braahmanas serve as a guidebook or handy manual explaining how each word should be understood , or what construction should be placed on each word used ie. the proper use of the mantra. 'Aranyaka' is derived from the word 'Aranya'(forest). The chanting of Vedas, the Yajnas and other rituals are for materialistic benefits, for those living in homes, but only preliminary. It has to be understood that these rituals are intended to confer mental purity ( Chiththa Shuddhi) by constant discipline. For this one must seek solitude of forests for meditation on the true nature of the self and true nature of reality. Top

4) Are the Vedas only for the Indians or the Hindus or is it Universal? The Vedic religion aims at Universal Harmony. There are evidences of the Vedas prevailing around the Globe. The last sooktha of Rig Veda pertains to Agni ,contains verse of Universal appeal:
"Let all men meet and think as one mind,
Let all hearts unite in Love,
Let the goal be common,
May all live in happiness with a common purpose".
Top

5) Is spirituality the only goal of Vedas ? Does Veda support Materialistic living like commerce etc.? As the Vedas give us us the Dharma, the primary goal of the Vedas is to make us Self-realize ( note :neither to know nor to understand, but realize) the Brahman or the Ultimate Truth. But these scriptures are supported by a set of texts 'wordly sciences'.To the 14 Vidyaasthanas may be added 4 more, called Upaangas or appendices to the Vedaangas. They are:
1.
Ayurveda or the science of life and medicine.
2. Arthasaastra the science of wealth or economics.
3. Dhanur Veda the science relating to weaponry, missiles and warfare and
4. Gaandharva Veda or treatises on fine arts like music, dance, drama, etc. Top

6) Do the Vedas support 'IDOL' worship ? The Vedas support both ritual and spirtual worship. The Karma kanda refers to the rites, Yajnas etc.. while the Gnana kanda supports to spiritual enlightenment. While the Vedas guide in sacrifices, Vedanta/ Upanishads denigrates the performer as a cow - a witless person. To understand these one must look more in to the God, as a Supreme Reality. The functional and attributive names of the Supreme Reality are numberless. Sometimes they are names of Nature's Bounties also - primarily the sun, secondarily the bounties of mid-spaces & the earth. The SR (Supreme Reality) is not merely a philosophical abstract concept, it is a reality which we have to invoke and evoke for our personal becoming or for the fulfillment of our life. In this sense, Vedic Theism is a concept of Dynamic Reality. The SR is our concern every moment. The God or the Supreme Reality is known by different names in regard to its functions, attributes and nature. Taken out of context of its creation and suzerainty over souls, the Reality would have no name other than OM (= A-U-M), the all comprehensive syllable, embracing the limits of entire phonetic alphabet with potential creativity, sustenance and dissolution in it ('Om Kham Brahma' - Yajur 60.17)

The distinguishing feature of Vedas is that no Vedas say, "This is the only way", "This is the only God". All of them say that any path ( compare with other religious texts) followed with faith and loyalty and any Devata worshipped in whatever way, will lead one to the true goal. This is the greatness of the Vedas. The FAQ Author understands that only personal realizations, through a Guru ie. an able spiritual Teacher can help in finding answers to these questions, while people around you would be (still) debating. Top

7) How were the Vedas saved without changes for more than 5,000+ Years ? The Vedas were not given script form until recently. They were chanted or taught from Guru to Sishya in the Gurukula system of Education. They used many techniques like Computer encoding Schemes and redundancy, that protect the Vedic Hymns from loss due to time and intentional sabotage. This system is explained below. A fool-proof method use to chant each mantra in various patterns and combinations, Top

8) What can I do for 'Veda Rakshana' or saving the Vedas ? "Dharma protects one who protects it". Any one can take up the path laid out in the Vedas. He can also do Dharma towards the cause of Vedic Education. It may be a small contribution like a day's meals for students in a Patasala , a Vedic educational institution or contributing monetary help to student's educational expenses or providing help for developmental activities like land, building etc.. Top

Sri Seethrama Gurukulam Veda Patasala

Sri Seethrama Gurukulam Veda Patasala

PREFACE:

THE VEDAS – ETERNAL GLORY OF OUR TRADITION Vedas are believed to be the Divine revelations from the Cosmic Space recognized by Ancient Rishis. No authorship has been ascribed to these ancient Scriptures. The Vedic Vibrations are eternally present in the Cosmic Space in a very subtle form. In ancient Yugas, the Vedas as known to humanity were much larger in content than it is known today. The whole Vedas have been classified by Sage Vyasa into four groups known as Rig, Yajur, Sama and Atharva. These four were further divided by Sage Patanjali, into many branches or Shakhas. Rig Veda had twenty-one, Yajur Veda had one hundred and eight, Sama Veda had one thousand and Atharva Veda had nine shakhas. However , due to passage of time most of these have been lost of the present world. Of the remaining, one is of Rig, Veda, Six are of Yajur Veda, Three are of Sama Veda and Two are of Atharva Veda available now. It is already proven beyond doubt that Veda Mantras confer peace, prosperity and general well being of the whole world. It is our abundant duty to nourish and cherish the Vedas which are the roots of our Culture and Sanatana Dharma for future generations.Sri Sri Seetharama Gurukulam Veda Patasala is one such Institution founded at the command and Blessings of His Holiness Sri Paramacharyal of Kanchi. With all our Respects & Obeisance's and Pranams to this Great Sage at this juncture we remember his words: - “The Vedas that Constitute the Scripture common to all and which reveal the Godhead that is common to us also teach, us, how to lead, our life, and – this is important – they do us the ultimate good by showing us in the end the way to become that very Godhead ourselves. They are our refuge both here and the hereafter and are the source and root of all our different traditions – all our systems of thought. All sects, all schools of thoughts, our religion, have their origin in Vedas. The Root is one but the branches are many. The Vedas are the source not only for the various divisions of Hinduism, but also for all the religions of the world that may be traced back to them. It is our bounden duty to preserve them for all time to come with their glory undiminished”. The “Sri Seetharama Gurukula”Veda Patasala assures that it will live and serve for the study of Vedas and resultant prayers for the peace and welfare of the entire world keeping the above ideal words of Great Sage of Kanchi & Sringery Aacharyas.PATTERN OF EDUCATIONEncouraged to take up their higher studies for which stipend is extended to them. Gurukula type Oral Vedic education is imparted to the vidyarthis. Students in the age group of 8 to 11 are admitted for their respective Vedic course i.e., the Veda of his hereditary. Academic year is from June to May and admission to Vedic course closes by the second week of June. Vedic education is free to students during the entire period of their course. Students are also given free boarding, lodging, clothing, medical care and traveling expenses to their hometown. Expenses are mainly met from the donations received from philanthropists and the interest earned from 'Corpus' fund. Successful vidyarthis after completion of their respective course are given 'Cash Award' along with medals and Merit certificates and they are also encouraged to take up their higher studies for which stipend is extended to them.INTRODUCTION:"Sri Seetharama Gurukul” Veda Patasala was started in the year 1996, with Blessing by the Grace of His Holiness Sri Paramacharyal of Sri Kanchi Kamakoti Peetam, with Tow Students under “Veda Vidyalankara” “ Vidya Ratnam “ Sri V.Rajagopala Ghanapatigal who is one of the very few Eminent Vedic Scholars in the Country. This was housed in his residence as traditional Gurukula system. As the Strength of the Patasala has been steadily increasing, The Patasala Run at Veda Bhavan No 488. T T K Road.Alwarpet,Chennai,600018 phone 91 44 24361210SOURCE OF FUNDS:

Funds are mobilized from Well-wishers, Philanthropists, and Charitable Institutions to run the Patasala efficiently.AIMS & OBJECTIVES OF THE GURUKULAM:*

To impart Vedic Sciences & Sastras in the Traditional Gurukulam method and other related subjects in depth, conducting daily classes, holding meetings and publishing Books

*

To enforce spiritual studies by augmenting Spiritual Training centers for General Public also.

*

To establish and maintain Libraries for Students

COURSES OF STUDY, ADMISSION OF STUDENTS AND METHOD OF TEACHING:The prescribed Shakhas in Krishna Yajur Veda are being taught at present. Normally it takes about 10 to 12 years of hard work to acquire mastery in one Shakha of the Vedas. Students are screened and Selected at the tender age of 8 to 9 years immediately after Upanayanam and admitted into the Curriculum. All branches of Vedas are being taught only as per the age old Gurukula system of oral chanting, hearing, repeating and committing to memory. The exact intonation and the Swara / Pitch are very important and any deviation will change the meaning of the text. Hence, this mode of learning is possible only where the Teacher & the Taught (Master / Learner) both live under one roof and practice the recitation of Vedas. Apart from the above, training of selected students in application of vedic procedure to various rituals like Upanayanam, Vivaham, Seemantham and other functions are also included in the Curriculum and this is known as Prayoga. The students are given free food, Clothing and Medical facilities to ensure good health, during this entire course of study.

MODE OF EXAMINATION

I. Internal examination: Every fortnight the portions which are taught are examined by the respective Adhyapakas. So also for quarterly and Half yearly examinations. Annual examinations are being conducted with the aid pandits of the state.

II. External examination: Each year, apart from Annual examination external examination are also being conducted by Veda Rakshana Nidhi Trust, Chennai affiliated to Kanchi Sri Sankaracharya Swamy Mutt, Kancheepuram. Successful candidates after completion of their respective course will be awarded with certificate to their respective course.

FACULTY:At present a team of learned, experienced and devoted persons under the leadership of the Managing Trustee are imparting Vedic Education in the Patasala There is also a proposal to include Srowtha classes which covers the performing of various rituals / Yagnas for the welfare of the manking and the world. Yagnas are to be performed strictly according to the system mentioned in the Vedas. Knowledge of performing the Yagnas and other rituals can be obtained only after studying the complete course in detail for which it takes a period of years to obtain mastery.DAILY ACTIVITIES:The Daily Academic Schedule / Activities for students are as under:

05.00 To 06.00 A.M. Avarthy

06.00 To 07.00 A.M. Anushtanam / Prayer

07.00 To 08.30 A.M. Brahma Yagyam Morning Classes

08.30 To 09.00 A.M. Breakfast

09.30 To 12.00 A.M. Classes for Students

12.00 To 12.30 NOON Anushtanam ( Madhyahnikam -Brahma Yagyam ) / Prayer

12.30 To 01.30 P.M. LUNCH & REST

01.30 To 04.00 P.M. Classes for Students

04.00 To 04.30 P.M. Tiffin

04.30 To 05.00 P.M. Sanskrit & Language Classes

05.00 To 06.00 P.M. Rest/Recreation

06.00 To 06.30 P.M. Anushtanam / Prayer

06.30 To 07.00 P.M. Vishnu Sahasranamam

07.00 To 08.00 P.M. Repetition of verses of Vedas

08.00 To 08.30 P.M. Dinner

(HOLIDAYS:=ON ALL ASHTAMI, CHATHURDASI, AMAVASYA, POURNAMI & PRATHAMA )The Donations/Contributions are accepted by Cash/Cheques/Demand drafts drawn in favour of “Sri Seetharama Gurukulam “ The Contributions may kindly be sent to the V.RAJAGOPALA GANAPATIGAL SRI SEETHARAMA GURUKULAM New No 476.(old 181) T T K Road. Alwarpet. Chennai.600018, Tamil Nadu. INDIA. Phone: 044- 24361210 E-mail: ganapatigal@gmail.com