Let a Vedic priest enter your home every month

Let a Vedic Priest Enter Your Home Every Month

Search This Blog

Friday, September 28, 2012

Vaithikasri October 2011-ஆசிரியர் எண்ணங்கள்


ஒருவர் மிகப்பெரும் செல்வாக்குள்ளவர், அவர் மகிழ்ச்சியாக இருக்கும் ஸமயத்தில் யார் எதைக்கேட்டாலும் தரக்கூடிய சக்தி யுள்ளவர், அப்படிப்பட்டவரை மகிழ்வித்தல் எப்படி? அவருக்குப் பிடிக்கும் செயலைச் செய்தால் அவர் மகிழ்வார், அவருக்கு எந்தச் செயல் பிடிக்கும்? எதைச் செய்தால் அவர் ஸந்தோஷமடைவார்? இதைத்தான் நமது வேதங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன, மனிதர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் பிடிக்கும், ஸூர்யனுக்கும், பித்ருக்களுக்கும் (மறைந்த முன்னோர்களுக்கும்) நமஸ்காரம் செய்வது பிடிக்கும், ப்ருஹ்ம தேவருக்கும் மஹர்ஷிகளுக்கும் வேதத்தைச் சொல்வது பிடிக்கும், அக்னி இந்திரன் முதலான தெய்வங்களுக்கு ஹோமம் செய்வது பிடிக்கும், ஸ்ரீ மஹாவிஷ்ணுவிற்கு நிறைய ஆடை ஆபரணங்களால் அலங்காரம் செய்வது பிடிக்கும், பரமேஸ்வரருக்கு பால் தயிர் தேன் முதலான பொருட்களால் அபிஷேகம் செய்வது பிடிக்கும், முருகப்பெருமானுக்கு ஷஷ்டி கிருத்திகை போன்ற நாட்களில் உபவாஸம் இருத்தல் பிடிக்கும், லக்ஷ்மி பார்வதி போன்ற பெண் தெய்வங்களுக்கு நன்நடைத்தையுள்ள (பதிவிரதா) பெண்களைக் கொண்டாடுவதும் பூஜிப்பதும் பிடிக்கும், அனைத்து கலைகளின் இருப்பிடமும், அனைத்து உயிர்களுக்கும் பேசும் திறமையை (வாக் சக்தியை)த் தருபவளும், ஜகத் ஸ்ருஷ்டி கர்த்தாவான ப்ருஹ்மபத்னியுமான ஸரஸ்வதி தேவிக்கு ஸத்யம் (உண்மை) பேசுவதே பிடிக்கும் என்று வேதம் தெரிவித்துக்கொண்டே செல்கிறது, ஆம் ஸரஸ்வதி தேவியால் வழங்கப்பட்ட வாக் சக்தியை (பேசும் திறமையை) ஸரியாகப் பயன்படுத்துவதே அதாவது ஸத்யம் பேசுவதே ஸரஸ்வதியை மகிழ்விக்கும் செயல், இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் பண்பட்ட மனதுடன் நல்லவனாக வாழ கல்வியறிவு மிகவும் அவசியம், இந்தக் கல்வியறிவை தெய்வ அருளால்தான், குறிப்பாக ஸரஸ்வதியின் அருளால்தான் பெற முடியும், கையில் வீணை புஸ்தகத்துடன் தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் ஸரஸ்வதி தேவியை பூஜிப்பதால் கலைகள், கல்வி செல்வம் வீரம் போன்ற அனைத்தையும் பெற முடியும். ஸரஸ்வதியை ஏராளமான தாமரை போன்ற மலர்களால் அர்சனை செய்வதும், பலவிதமான உணவு வகைகளால் நிவேதனம் செய்வதும், பற்பல (வேத) மந்திரங்கள் சொல்வதும் மிகச் சிறந்தததுதான், ஆனாலும் ஸரஸ்வதியை மகிழ்விக்க ஸரஸ்வதியின் அருளைப்பெற இதைவிட மிகச் சுலபமான வழி ஒன்று உள்ளது, அதுதான் ஸத்தியம் (உண்மை) பேசுதல். மனதில் ஏற்படும் எண்ணங்களை அப்படியே மாறாமல் தனது வாக்கால் (சொற்களால்) வெளிப்படுத்துவதே ஸத்யம் (உண்மை) பேசுதல் எனப்படும், ஸத்தியத்திற்கு இருக்கும் பெருமை கணக்கிலடங்காது, எந்த ஒரு ஆபத்து காலத்திலும் ஸத்யத்தையே பேசுதல் என்னும் உறுதியான கொள்கையுடன் வாழ்ந்தார் தர்மாத்மா தர்மபுத்திரர், தனது பதவியையும் ஸுகத்தையும் மனைவியையும் இழந்தாலும் பொய்யே பேசமாட்டேன் என்று உறுதியுடன் காசி மாநகரத்தில் வாழ்ந்த சக்கிரவர்த்தி ஹரிஸ்சந்திரன் போன்றவர்கள் வாழ்ந்த நம் பாரத தேசத்தில்தான் நாமும் வாழ்கிறோம். கத்தியின்றி ரத்தமின்றி அஹிம்ஸை சத்தியம் என்னும் இரண்டால் மட்டுமே நம் தேசத்தை அன்னியர்களிடமிருந்து மீட்டு ஸ்வதந்திரம் வாங்கித் தந்தார் தேசப்பிதா மஹாத்மா காந்தி, ஆகவேதான் அவரது வாழ்க்கை சரித்திர புஸ்தகத்துக்கும் ஸத்திய சோதனை எனப் பெயரிடப்பட்டது, 1950 ஜனவரி 26ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது பாரத தேச (அசோக சக்கிர) அடையாளச்சின்னத்தின் கீழ் பகுதியில் முண்டகோபநிஷத்தின் வாக்கியமான ஸத்தியமேவ ஜயதே (வாய்மை மட்டுமே வெல்லும்) என்னும் சொற்கள் தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கின்றன, ஸத்தியத்தையே பேசுபவருக்கு எதிலும் வெற்றிதான் கிட்டும் என்பதையே இது வெளிப்படுத்துகிறது. தற்காலத்தில் ஸத்தியத்தையே பேசுவதும் ஸத்திய வாழ்க்கை வாழ்வதும் ஸாத்தியமா? என்று தோன்றலாம், ஸ்ரீ ஆதிசங்கரர் தனது ப்ருஹ்ம ஸூத்ர பாஷ்ய ஆரம்பத்தில் ஸத்யாந்ருதே மிதுனீ க்ருத்ய அதாவது ஸத்தியமும் பொய்யும் கலந்ததே இவ்வுலகம் (வாழ்க்கை) என்கிறார். இருந்தாலும் பொய்யைச் சுறுக்கி ஸத்தியத்தை (ஒளியை)ப் பெருக்கி சில காலமாவது நம்மால் வாழ முடியும், எப்போதும் ஸத்தியத்தையே பேச முடியா விட்டாலும் கூட, தெய்வ வழிபாடு செய்யும் ஆலயங்கள், தெய்வங்களை ஆராதிக்கும் நவராத்திரி ஸரஸ்வதி பூஜை போன்ற நாட்கள், ஸரஸ்வதியின் நக்ஷத்திரமான மூல நக்ஷத்ரம், போன்ற சில நாட்களிலும், பெற்றோர், ஆசிரியர்,ஆசார்யர், மஹான்கள், போன்ற சில மனிதர்களிடமும் மட்டுமாவது ஸத்தியத்தையே பேசுவது என்னும் கொள்கையை கடைபிடிக்க முயற்சிக்கலாம், தற்கால சூழ்நிலையில் நாம் ஸத்தியம் பேசுபவராக இருக்க நினைத்தாலும் நம்மை சுற்றியிருக்கும் சூழ்நிலை நம்மை பொய் சொல்லும்படி செய்து விடுகிறது என்கின்றனர் சிலர், இது ஓரளவு உண்மைதான் என்றாலும் இதற்கும் ஓர் மாற்று வழியுண்டு, அதுதான் காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகள் தனது வாழ்க்கையில் கடைசிவரை கடைபிடித்த உயர்ந்த வழி, அதுதான் மௌனம், ஆகவே பொய் சொல்லும் சூழ்நிலை தோன்றினாலும் கூட அப்போது பொய்யும் ஸத்யமும் (எதுவும்) பேசாமல் மௌனமாக இருந்து விடலாமே, மெளனேன கலஹோ நாஸ்தி (மௌனமாக இருந்தால் கலஹமில்லை), மௌனம் ஸர்வார்த்த ஸாதகம் (மௌனம் அனைத்தையும் ஸாதிக்கும் ) என்கிறது நீதி சாஸ்திரம், ஆகவே ஒவ்வொருவரும் கூடியவரை (மற்றவர் மனது புண்படாதவாறு) ஸத்தியத்தையே பேச முயற்சிக்கலாம், பொய்யே பேசி பழகி விட்ட நமக்கு, இது உடனடியாக ஸாத்தியமில்லாதது போல் இருக்கலாம், ஆனாலும் ஒவ்வொரு மாதமும் ஸரஸ்வதியின் நக்ஷத்ரமான மூல நக்ஷத்திர நாள், அல்லது வருஷத்திற்கு ஒருமுறை வரும் ஸரஸ்வதி பூஜை நாள், ஆகியகாலத்திலாவது பொய்யே பேசாமல் ஸத்தியம் பேச முயற்சிக்கலாம், அல்லது மௌனமாக இருக்கலாம், இதுவே நாம் ஸரஸ்வதி தேவிக்குச் செய்யும் மிகப்பெரும் பூஜை, இதுவே ஸரஸ்வதியை ஸந்தோஷிக்கச் செய்யும், நமது தேவைகள் அனைத்தையும் ஸரஸ்வயின் மூலம் பெற ஸுலபமான வழி இதுவே, இதுவே நாம் நமக்கும் நமது குடும்பத்துக்கும் நமது தேசத்திற்கும் செய்யும் மிகப்பெரும் ஸேவை, இதற்கு பகவான் நமக்கு அனுக்ரஹிக்கட்டும்.

Vaithikasri November 2011-


ஒருவர் மிகப்பெரும் செல்வாக்குள்ளவர், அவர் மகிழ்ச்சியாக இருக்கும் ஸமயத்தில் யார் எதைக்கேட்டாலும் தரக்கூடிய சக்தி யுள்ளவர், அப்படிப்பட்டவரை மகிழ்வித்தல் எப்படி? அவருக்குப் பிடிக்கும் செயலைச் செய்தால் அவர் மகிழ்வார், அவருக்கு எந்தச் செயல் பிடிக்கும்? எதைச் செய்தால் அவர் ஸந்தோஷமடைவார்? இதைத்தான் நமது வேதங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன, மனிதர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் பிடிக்கும், ஸூர்யனுக்கும், பித்ருக்களுக்கும் (மறைந்த முன்னோர்களுக்கும்) நமஸ்காரம் செய்வது பிடிக்கும், ப்ருஹ்ம தேவருக்கும் மஹர்ஷிகளுக்கும் வேதத்தைச் சொல்வது பிடிக்கும், அக்னி இந்திரன் முதலான தெய்வங்களுக்கு ஹோமம் செய்வது பிடிக்கும், ஸ்ரீ மஹாவிஷ்ணுவிற்கு நிறைய ஆடை ஆபரணங்களால் அலங்காரம் செய்வது பிடிக்கும், பரமேஸ்வரருக்கு பால் தயிர் தேன் முதலான பொருட்களால் அபிஷேகம் செய்வது பிடிக்கும், முருகப்பெருமானுக்கு ஷஷ்டி கிருத்திகை போன்ற நாட்களில் உபவாஸம் இருத்தல் பிடிக்கும், லக்ஷ்மி பார்வதி போன்ற பெண் தெய்வங்களுக்கு நன்நடைத்தையுள்ள (பதிவிரதா) பெண்களைக் கொண்டாடுவதும் பூஜிப்பதும் பிடிக்கும், அனைத்து கலைகளின் இருப்பிடமும், அனைத்து உயிர்களுக்கும் பேசும் திறமையை (வாக் சக்தியை)த் தருபவளும், ஜகத் ஸ்ருஷ்டி கர்த்தாவான ப்ருஹ்மபத்னியுமான ஸரஸ்வதி தேவிக்கு ஸத்யம் (உண்மை) பேசுவதே பிடிக்கும் என்று வேதம் தெரிவித்துக்கொண்டே செல்கிறது, ஆம் ஸரஸ்வதி தேவியால் வழங்கப்பட்ட வாக் சக்தியை (பேசும் திறமையை) ஸரியாகப் பயன்படுத்துவதே அதாவது ஸத்யம் பேசுவதே ஸரஸ்வதியை மகிழ்விக்கும் செயல், இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் பண்பட்ட மனதுடன் நல்லவனாக வாழ கல்வியறிவு மிகவும் அவசியம், இந்தக் கல்வியறிவை தெய்வ அருளால்தான், குறிப்பாக ஸரஸ்வதியின் அருளால்தான் பெற முடியும், கையில் வீணை புஸ்தகத்துடன் தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் ஸரஸ்வதி தேவியை பூஜிப்பதால் கலைகள், கல்வி செல்வம் வீரம் போன்ற அனைத்தையும் பெற முடியும். ஸரஸ்வதியை ஏராளமான தாமரை போன்ற மலர்களால் அர்சனை செய்வதும், பலவிதமான உணவு வகைகளால் நிவேதனம் செய்வதும், பற்பல (வேத) மந்திரங்கள் சொல்வதும் மிகச் சிறந்தததுதான், ஆனாலும் ஸரஸ்வதியை மகிழ்விக்க ஸரஸ்வதியின் அருளைப்பெற இதைவிட மிகச் சுலபமான வழி ஒன்று உள்ளது, அதுதான் ஸத்தியம் (உண்மை) பேசுதல். மனதில் ஏற்படும் எண்ணங்களை அப்படியே மாறாமல் தனது வாக்கால் (சொற்களால்) வெளிப்படுத்துவதே ஸத்யம் (உண்மை) பேசுதல் எனப்படும், ஸத்தியத்திற்கு இருக்கும் பெருமை கணக்கிலடங்காது, எந்த ஒரு ஆபத்து காலத்திலும் ஸத்யத்தையே பேசுதல் என்னும் உறுதியான கொள்கையுடன் வாழ்ந்தார் தர்மாத்மா தர்மபுத்திரர், தனது பதவியையும் ஸுகத்தையும் மனைவியையும் இழந்தாலும் பொய்யே பேசமாட்டேன் என்று உறுதியுடன் காசி மாநகரத்தில் வாழ்ந்த சக்கிரவர்த்தி ஹரிஸ்சந்திரன் போன்றவர்கள் வாழ்ந்த நம் பாரத தேசத்தில்தான் நாமும் வாழ்கிறோம். கத்தியின்றி ரத்தமின்றி அஹிம்ஸை சத்தியம் என்னும் இரண்டால் மட்டுமே நம் தேசத்தை அன்னியர்களிடமிருந்து மீட்டு ஸ்வதந்திரம் வாங்கித் தந்தார் தேசப்பிதா மஹாத்மா காந்தி, ஆகவேதான் அவரது வாழ்க்கை சரித்திர புஸ்தகத்துக்கும் ஸத்திய சோதனை எனப் பெயரிடப்பட்டது, 1950 ஜனவரி 26ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது பாரத தேச (அசோக சக்கிர) அடையாளச்சின்னத்தின் கீழ் பகுதியில் முண்டகோபநிஷத்தின் வாக்கியமான ஸத்தியமேவ ஜயதே (வாய்மை மட்டுமே வெல்லும்) என்னும் சொற்கள் தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கின்றன, ஸத்தியத்தையே பேசுபவருக்கு எதிலும் வெற்றிதான் கிட்டும் என்பதையே இது வெளிப்படுத்துகிறது. தற்காலத்தில் ஸத்தியத்தையே பேசுவதும் ஸத்திய வாழ்க்கை வாழ்வதும் ஸாத்தியமா? என்று தோன்றலாம், ஸ்ரீ ஆதிசங்கரர் தனது ப்ருஹ்ம ஸூத்ர பாஷ்ய ஆரம்பத்தில் ஸத்யாந்ருதே மிதுனீ க்ருத்ய அதாவது ஸத்தியமும் பொய்யும் கலந்ததே இவ்வுலகம் (வாழ்க்கை) என்கிறார். இருந்தாலும் பொய்யைச் சுறுக்கி ஸத்தியத்தை (ஒளியை)ப் பெருக்கி சில காலமாவது நம்மால் வாழ முடியும், எப்போதும் ஸத்தியத்தையே பேச முடியா விட்டாலும் கூட, தெய்வ வழிபாடு செய்யும் ஆலயங்கள், தெய்வங்களை ஆராதிக்கும் நவராத்திரி ஸரஸ்வதி பூஜை போன்ற நாட்கள், ஸரஸ்வதியின் நக்ஷத்திரமான மூல நக்ஷத்ரம், போன்ற சில நாட்களிலும், பெற்றோர், ஆசிரியர்,ஆசார்யர், மஹான்கள், போன்ற சில மனிதர்களிடமும் மட்டுமாவது ஸத்தியத்தையே பேசுவது என்னும் கொள்கையை கடைபிடிக்க முயற்சிக்கலாம், தற்கால சூழ்நிலையில் நாம் ஸத்தியம் பேசுபவராக இருக்க நினைத்தாலும் நம்மை சுற்றியிருக்கும் சூழ்நிலை நம்மை பொய் சொல்லும்படி செய்து விடுகிறது என்கின்றனர் சிலர், இது ஓரளவு உண்மைதான் என்றாலும் இதற்கும் ஓர் மாற்று வழியுண்டு, அதுதான் காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகள் தனது வாழ்க்கையில் கடைசிவரை கடைபிடித்த உயர்ந்த வழி, அதுதான் மௌனம், ஆகவே பொய் சொல்லும் சூழ்நிலை தோன்றினாலும் கூட அப்போது பொய்யும் ஸத்யமும் (எதுவும்) பேசாமல் மௌனமாக இருந்து விடலாமே, மெளனேன கலஹோ நாஸ்தி (மௌனமாக இருந்தால் கலஹமில்லை), மௌனம் ஸர்வார்த்த ஸாதகம் (மௌனம் அனைத்தையும் ஸாதிக்கும் ) என்கிறது நீதி சாஸ்திரம், ஆகவே ஒவ்வொருவரும் கூடியவரை (மற்றவர் மனது புண்படாதவாறு) ஸத்தியத்தையே பேச முயற்சிக்கலாம், பொய்யே பேசி பழகி விட்ட நமக்கு, இது உடனடியாக ஸாத்தியமில்லாதது போல் இருக்கலாம், ஆனாலும் ஒவ்வொரு மாதமும் ஸரஸ்வதியின் நக்ஷத்ரமான மூல நக்ஷத்திர நாள், அல்லது வருஷத்திற்கு ஒருமுறை வரும் ஸரஸ்வதி பூஜை நாள், ஆகியகாலத்திலாவது பொய்யே பேசாமல் ஸத்தியம் பேச முயற்சிக்கலாம், அல்லது மௌனமாக இருக்கலாம், இதுவே நாம் ஸரஸ்வதி தேவிக்குச் செய்யும் மிகப்பெரும் பூஜை, இதுவே ஸரஸ்வதியை ஸந்தோஷிக்கச் செய்யும், நமது தேவைகள் அனைத்தையும் ஸரஸ்வயின் மூலம் பெற ஸுலபமான வழி இதுவே, இதுவே நாம் நமக்கும் நமது குடும்பத்துக்கும் நமது தேசத்திற்கும் செய்யும் மிகப்பெரும் ஸேவை, இதற்கு பகவான் நமக்கு அனுக்ரஹிக்கட்டும்.

Vaithikasri December 2011 -ஆசிரியர் எண்ணங்கள்


இவ்வுலகில் மனிதராகப் பிறந்ததை ஓர் அரிய நிகழ்வாக எண்ணி, நமது (குழந்தைகளின்) பிறந்த நாளை, முதலாமாண்டு துவங்கி ஒவ்வொரு வருஷமும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம், இது நமது முன்னோர்கள் நமக்குக் காண்பித்தவழிமுறை, மேலும்இது சாஸ்திரப்படி ஸரியானதே, ஆனால் தற்சமயம் ஒரு சிலர் பிறந்த நாளைக் கொண்டாடும் வழிமுறையைக்காணும்போது, பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்ட நாம், அதைக் கொண்டாடும் வழிமுறையை ஸரியாகத் தெரிந்துகொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது, அதாவது ஒரு சிலர் பிறந்த நாளை ஆங்கிலத்தேதிப்படி கொண்டாடு கிறார்கள், ஆங்கிலத்தேதி என்பது மனிதர்களால் உலக வியவஹார த்துக்காக ஏற்படுத்தப்பட்டு, அவ்வப்போது மாறுதலையும் அடைந்து கொண்டிருப்பதாகும், ஆகவே நம் மஹரிஷிகள் கூறியபடி ஆகாசத்தில் ஸஞ்சரிக்கும் சந்திரன் போன்ற கிரஹங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் பிறந்த(தமிழ்) மாதம், பிறந்த நக்ஷத்ரத்தன்று ஒவ்வொரு வருடமும் பிறந்த நாளைக்கொண்டாடுவதே சிறந்தது, மேலும் ஒரு சிலர் தங்கள் (குழந்தைகளின்) பிறந்த நாளை, கடையிலிருந்து வாங்கி வரப்பட்ட(பிறந்தநாள் கொண்டாடுபவர் பெயர் எழுதப்பட்ட சாப்பிடக்கூடாத பொருட்கள் கலந்து செய்யப்பட்ட) கேக் என்னும் உணவுப் பொருளை, உறவினர்கள் நண்பர்களுடன் சேர்ந்து(ஆங்கிலத்தில்) பாட்டுப்பாடி, கத்தியை வைத்து கேக்கைத் துண்டாக்கி, (எரிந்து கொண்டிருக்கும்) மெழுகு வத்தியை தீபத்தை வாயால் ஊதி அணைத்துக் கொண்டாடுகிறார்கள், இவ்விதம் பிறந்த நாளைக் கொண்டாடும் வழிமுறையைப் பார்க்கும் போது, இது நம் சாஸ்திரத்துக்கும்கலாசாரத்துக்கும்விரோதமானதோ எனத் தோன்றுகிறது, ஏனென்றால் சாஸ்திரத்தால் சாப்பிடக்கூடாது என நிஷேதிக்கப்பட்ட பொருள் கலந்ததைச் சாப்பிடுதல், எழுத்துக்களை கத்தியால் துண்டாக்குதல், வாயால் ஊதி தீபத்தை அணைத்தல், எச்சில் பார்க்காமல் அனைவரும் ஒருவருக்கொருவர் சாப்பிடுதல் என இவற்றில் பல சாஸ்திர விரோதச் செயல்கள் ஏற்படுகின்றன. தற்சமயம் பலகுடும்பத்தில் இது ஒரு ஸம்ப்ரதாயமாகவே மாறிவிட்டது, அதுவும் ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தையின் பிறந்த நாளை இவ்விதம் கொண்டாடினால், மற்ற குழந்தைகளும் எனக்கும் அதே போல் கேக் வெட்டிக் கொண்டாட வேண்டும் என்று கேட்கிறது, அந்தக் குழந்தைக் காகவும் முன்போலவே, கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப் படுகிறது, குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் இவ்விதமாகவே பிறந்த நாளைக் கொண்டாடுவது என்பது சிலகாலத்தில் எங்கள் குடும்பப் பழக்கம் என்னும் சொல்லும்படியாகக் கூட நேரலாம், நாம் செய்யும் இந்தத்தவறு நம் ஸமுதாயத்தையும் கலாசாரத்தையும் பாதிக்கும் செயலாகக்கூட மாறலாம், ஆகவே இவ்விதம் செய்வதையோ செய்பவர்களை ஊக்கப்படுத்துவதையோ தவிர்க்க முயற்சிக்கலாம், பிறந்த நாளன்று பலருக்கும் அன்னமிட்டு, உற்றார் உறவினருக்கும் ஏழைகளுக்கும் தேவையான உதவிகளைச் செய்து, (ஆலயங்களுக்குச் சென்று) நமக்கு ஆயுளை அளித்து, நமது கைகள், கால்கள், கண் வாய் போன்ற உறுப்புகளையும் உடலையும் ஆரோக்யமாக வைத்து, நம்மை பாதுகாக்கும் தெய்வங்களை பிரார்த்தனை செய்து, நன்றி கூறி, தன்னை விட வயதில் பெரியோர்களை நமஸ்கரித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதே சிறந்தது, மேலும் சிரஞ்சீவியாக இன்றும் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் மார்கண்டேயர் போன்ற மஹரிஷிகளையும் விபீஷணர் போன்ற ஆழ்வார்களையும் ஹனுமான் போன்ற பக்தர்களையும் ஆயுஸ்ஸை வளர்க்கும் ஆயுர்தேவதை போன்ற தேவதைகளையும் நக்ஷத்ர தேவதைகளையும் பூஜைகள் ஸ்தோத்ர பாராயணங்கள் ஹோமங்கள் மூலம் ஆராதித்து பிரார்த்தனை செய்வதே சாஸ்திரப்படி பிறந்த நாள் கொண்டாடும் வழிமுறையாகும். இதுவே சாஸ்திர ஸம்மதமாகும், இவ்விதம்தான் நம் முன்னோர்கள் பலரும் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள், இன்றும் பலரும் இவ்விதமே கொண்டாடி மகிழ்கிறார்கள், ஆகவே ஒவ்வொரு வருஷமும் பிறந்த தமிழ் மாதம், ஜன்மநக்ஷத்ரத்தன்று உற்றார் உறவினர்களுடன் ஒன்று சேர்ந்து, முன்கூறியபடி தெய்வங்களை ஆராதித்து, சாஸ்திர விரோத மில்லாமல், நமக்கும் நமது ஸமுதாயத்துக்கும் நமது தேசத்துக்கும் பயனளிக்கும் வகையில் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ பகவான் நமக்கு அனுக்ரஹிக்கட்டும்,

Vaithikasri January 2012-ஆசிரியர் எண்ணங்கள்


உலகம் முழுவதும் பொதுவாக பலராலும் உபயோகிக்கும் ஆங்கில வருஷம் 2011 முடிந்து 2012ஆம் ஆண்டு ஆரம்பமாகிறது, இன்று மேற்கத்திய கலாசாரத்தை ஒட்டி, பல பொது இடங்களிலும் பலரது வீட்டிலும் மகிழ்சியை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறுநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன, மற்றவருக்கு பாதிப்பு ஏற்படாமல் நமது கலாசாரத்தை பாதிக்காத முறையில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை பலர் கொண்டாடுகிறார்கள், இதனால் பலருக்கும் மகிழ்ச்சி, ' ஆனால் ஒரு சில இடங்களில் இந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் மேற்கத்திய கலாசாரத்தைப்பின்பற்றி நமது கலாசாரத்தை பாதிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது,குறிப்பாக நமது ஆலயங்களில் நடு இரவில் நடத்தப்படும் புத்தாண்டு சிறப்பு அபிஷேக அர்ச்சனை போன்ற நிகழ்ச்சிகள் நமது சாஸ்திர முறைப்படியும் கலாசாரப்படியும் அமையவில்லை, நடு இரவில் புத்தாண்டை கொண்டாடும் சிலர், உலகத்தையே ஸ்ருஷ்டி செய்து பரிபாலனம் செய்து வரும் தெய்வங்களும் இந்த புத்தாண்டை (மேற்கத்திய கலாசாரத்தை ஒட்டி) நடு இரவில் கொண்டாடவேண்டும் என்று எண்ணி, நீங்களும் இந்த புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்று தெய்வங்களை நிர்பந்தப்படுத்தும்விதமாக ஆலயங்களிலும் நடு இரவில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள், ஆகமம் மற்றும் வைதிகம் ஆகிய இரு வழிகளிலும் செய்ய வேண்டும் என்று விதிக்கப்படாத செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட அகாலத்தில் குறிப்பாக புத்தாண்டு பிறக்கும் நேரம் என்று மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட நடு இரவில் ஸுமார் 12 மணிக்கு யோக நித்ரையில் ஆழ்ந்திருக்கும் தெய்வங்களை எழுப்பி, அவர்களுக்கு அபிஷேகம் அர்ச்சனைகள் பூஜைகள் செய்கிறார்கள், இது ஆகம வைதிக முறைப்படி ஸரியானதாகத் தோன்றவில்லை, ஆகமம் மற்றும் வைதிக மார்கங்களில் அந்தந்த காலங்களில் செய்ய வேண்டியதாகக் குறிப்பிடப்பட்ட அபிஷேகம் அர்ச்சனை பூஜை போன்றவற்றை தினஸரி நடைபெறும் பூஜைகளைப்போலவே அந்தந்த காலங்களில் குறிப்பாக பகல் மற்றும் மாலை இரவு நேரங்களில் சிறப்பாக நடத்துவதே சிறந்ததாகும், நிசரர் ரஜனீசரர் என்பதாக தமோகுணம் மேலோங்கும் இரவு நேரங்களில் செயல்களைச்செய்பவர், இரவில் சுற்றித்திரிபவர் என்றெல்லாம் அரக்கர்களுக்குத்தான் பெயர், மனிதர்கள் என்பவர்கள் ஸத்வ குணம் அதிகமாக காணப்படும் ஸூரியன் இருக்கும் பகல் பொழுதில் செயல்களைச் செய்பவர்கள் என்று அரக்கர்களுக்கும் மனிதர்களுக்கும் வேறுபாடு சாஸ்திரங்களில் காணப்படுகிறது, ஆகவே பொதுவாக மனிதர்கள் இரவில் வெகு நேரம் கண் விழித்து முக்கியமான செயல்களை செய்யக்கூடாது, அப்போது மனம் தெளிவாக இருக்காது, எனவே அவ்வாறு செய்யும் செயல்கள் ஸரியானதாக அமையாது, குறிப்பாக சிவராத்திரி நாளைத்தவிர மற்ற எந்த நாட்களிலும் இரவு ஸுமார் ஒன்பது மணிக்கு மேல் ஆலயங்களிலும், ஏன் வீட்டிலும் கூட அபிஷேகம் அர்ச்சனை பூஜை போன்ற எந்த ஒரு தெய்வ வழிபாட்டையும் நடத்துவதற்கு ஆகமம் வைதிக சாஸ்திரங்களில் இடமில்லை, சாஸ்திர விருத்தமான செயல்களைச் செய்வது இந்த தேசத்துக்கும் மக்களுக்கும் ஏற்படும் நன்மைக்குத் தடங்கலாக அமையலாம். யம் க்ரியமானம் ஆர்யா: ப்ரம்ஸந்தி தம் தர்மமித்யாசக்ஷதே நீ செய்யும் எந்தச் செயலை வேத சாஸ்திரக் கருத்துக்களையுணர்ந்த பெரியோர்கள் இது ஸரிதான், இது தர்மம்தான் என்று ஏற்றுக்கொள்கிறார்களோ, அதுவே தர்மமான ஸரியான செயல் என்கிறார் ஆபஸ்தம்ப மஹர்ஷி, இன்றைய சூழ்நிலையில் பெரியோர்கள் ஸாதுக்கள் பலரும் இவ்வாறு அகாலத்தில் நடு இரவில் ஆலயங்களில் செய்யும் தெய்வ வழிபாடுகளை ஸரிதான் என்று ஏற்றுக் கொள்வதில்லை. ஆகவே நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்த லௌகீகமான முறையில் புத்தாண்டுக் கொண்டாட்டம் போன்ற சில நிகழ்ச்சிகளை நடத்தும் போது, அவற்றில் சாஸ்திரத்தையும் ஆகமத்தையும் புகுத்தாமல் இருக்கலாம், ஆகமம் மற்றும் வைதிக முறைப்படி ஏராளமான பொருட்செலவில் நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பற்பல வேத மந்திரங்கள் மூலம் தெய்வ ஸான்னித்யத்தை வரவழைத்து தினஸரி நியமமாக பூஜைகள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வரும் ஆலயங்களிலுள்ள தெய்வத்தின் ஸான்னித்யமானது, இவ்வாறு அறியாமல் ஒரு சிலரால் நடத்தப்படும் (நடு இரவில் பூஜை போன்ற) சில நிகழ்ச்சிகளால் குறைந்து போகலாம், மேலும் இதுவே பிற்காலத்தில் ஒரு சில வருஷங்களில் சாஸ்திர ஸம்ப்ரதாயமாகவும் மாறிவிடலாம், ஆகவே நம் முன்னோர்கள் பல காலமாக கட்டிக்காத்து தூய்மையாக பாதுகாத்து வந்த ஆலய பூஜா முறைகளை நம் காலத்தில் மாற்ற முயலக்கூடாது, புத்தாண்டு நாளன்று மகிழ்ச்சியைக் கொண்டாடும் நாம் அன்று காலை சூரியன் உதயமான பின்பு ஆலயத்தில் அல்லது வீட்டில் உள்ள தெய்வங்களை வழிபட்டு நாமும் நம்மை சுற்றியுள்ளவரும் நம்மை வாழவைக்கும் நமது தேசமும் என்றும் சிறப்புடன் விளங்க தெய்வங்களை ப்ரார்திப்போம் ஸ்ரீ பகவான் நிஸ்சயமாக் இதை நிறைவேற்றி நம்மை ரக்ஷிப்பார்,

Vaithikasri February 2012ஆசிரியர் எண்ணங்கள்


நமது மதத்திற்கும், அனைத்து தர்ம காரியங்களுக்கும் தெய்வ வழிபாட்டுக்கும் மூலபிரமாணம் ஆதாரம்வேதங்களே வேத மந்திரங்களே, வேதம் எத்தனை காலமாக இவ்வுலகில் இருக்கிறது என்பதை யாராலும் கூற இயலாது, ஆராய்சியாளர்கள் கி.மு. 2000ஆம் ஆண்டு என்று கூறினாலும், உலக ஸ்ருஷ்டிக்கு முன்காலத்திலும் வேதங்கள் இருந்தன என்னும் சாஸ்திரப்படி இதுவும் தவறான கணிப்புகள்தான், அப்படிப்பட்ட வேதங்கள் பல்வேறு ஆயிரம் ஆண்டுகளாக ஸ்வரங்கள், மாத்ராகாலம், எழுத்துக்கள் போன்ற எவ்வித மாறுதலுமின்றியும் இடைச்செறுகலின்றியும் ஆசார்ய புருஷர்களாலும், முன்னோர்களாலும் நம் தேசத்தை ஆண்ட அரசர்களாலும், மற்றும் பல்வேறு பிரிவினராலும் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன, அவர்கள்வேதங்களை கற்றுக் கொள்வதிலும் கற்றுக்கொண்ட வேதமந்திரங்களை முறையாக நியமத்துடன் உபயோகிப்பதிலும் சில கட்டுப்பாடுகளை கடைபிடித்தார்கள், ஆகவேதான் இன்றளவும் வேதமந்திரங்கள் சக்தியுடன் இருக்கின்றன, வேதமந்திரங்கள் சொல்லி நடத்தப்படும் பல்வேறு கர்மாக்களின் மூலம் பல்வேறு நன்மைகளை அடைய முடிகிறது, நமது தேசமும் காலத்தில் மழை, விவஸாய செழிப்பு, என பல்வேறு நன்மைகளை அடைந்து வருகிறது, ஆனால் தற்சமயம் ஒரு சில இடங்களில் வேத மந்திரங்களை கற்றுக்கொள்ளும் போதும், கற்றுக்கொண்ட பிறகு அதை உபயோகிக்கும்போதும், அதற்கான நியமங்கள் ஸரிவர கடைபிடிப்பதில்லை, குறிப்பாக தகுதியற்ற அதர்மமான கர்மாக்கள் வேதமந்திரங்கள் சொல்லி நடத்தப்படுவதால் வேதம் அதன் புனிதத்தன்மையை இழக்கிறது, வேத மந்திரங்களின் சக்தியும் குறைகிறது, தற்சமயம் சில இடங்களில் (சில குடும்பங்களில்) வேததர்மத்துக்கும் சாஸ்திரங்களுக்கும் புறம்பான (திருமணம் போன்ற) நிகழ்ச்சிகள் (கர்மாக்கள்) நடத்த வேண்டிய சூழ்நிலை உறுவாகியுள்ளது, இது அவரவர்களின் சூழ்நிலை மற்றும் குடும்பம் ஸம்பந்தப் பட்ட விஷயம் என்றாலும், கட்டுக்கோப்பாக தற்சமயம் வரை பாதுக்காக்கும் நமது கலாசாரத்துக்கு, இதுவே தவறான வழிகாட்டுதலுக்குக் காரணமாகவும் அமையலாம், கலாசாரம் பாதிக்கப்படலாம். நல்ல குடும்பத்தில் நல்ல ஸம்ஸ்காரத்தில் வாழ்ந்ததின் பயனாக குடும்பத்திலுள்ள ஒருசிலர்,இப்படிப்பட்ட வேத விருத்தமான அதர்மச் செயலை (திருமணத்தை) அனுமதிக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள், அதைத் தவிர்க்கவும் முயற்சிக்கிறார்கள், ஆனாலும் கலியின் பிரபாவத்தாலும் புண்யபலத்தின் குறைவாலும் அவர்களாலும் அதைத் தடுக்க முடியவில்லை, அவர்களின் முயற்சி பயனலிக்காமல் இறுதியில் (இப்படிப்பட்ட நிகழ்ச்சி நடத்துவதும் அதை நடத்த அனுமதிப்பதும் அதில் கலந்து கொள்வதும் தவறு என்று தெரிந்தும் கூட)அவர்களும் அந்த அதர்மத்த்துக்குத் துணை போகிறார்கள். அந்த நிகழ்சிகளில் கலந்து கொள்கிறார்கள், இதனால் ஏற்படும் பாபங்களையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளத் துணிகிறார்கள். வேத தர்மத்துக்கு விரோதமாக செய்யப்படும் பல்வேறு விதமான திருமணங்களையும் வேத மந்திரம் சொல்லி நடத்தி, வைதிகமாக மாற்ற வேண்டும் என்று பலர் எண்ணுகிறார்கள், இது மிகவும் தவறான எண்ணமாகும், எப்போது சாஸ்திர விருத்தமாக செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டதோ, அப்போதே திருமணம் போன்ற அந்த நிகழ்ச்சிகளை, அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்து கொண்டு லௌகீகமான முறையில் செய்வதானால் (இதுவும் மிகப்பெரியத் தவறுதான்) செய்து விட்டுப்போகட்டும், ஆனால் இதில் சாஸ்திர ஸம்மதம் கிடைக்க வேண்டும் என்று ஒரு போதும் நினைக்கக்கூடாது, அதற்காக வைதிகமான முறையில் இதை நடத்தக்கூடாது, இதனால் நாம் நமது வேதத்தையும் வேத மந்திரத்தையும், ஏன் அதை இதுநாள் வரை கட்டுக்கோப்பாக பாதுகாத்த ஆசார்யர்களையும், , ராஜாக்களையும் நம் முன்னோர்களையும் கூட அவமானம் செய்தது போல் ஆகிவிடுகிறது. ஆகவே காலம் காலமாக புனிதத்தன்மை மாறாமல் பாதுகாக்கப்படும், பகவானின் மூச்சுக்காற்றாக போற்றப்படும், வேதங்கள், வேத மந்திரங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுத்தாமல் இருக்க வேண்டும், வேத மந்திரம் சொல்லி அதர்மச் செயல்களைச் செய்ய க்கூடாது, ராஜாவின் முன்னிலையில் ஸங்கீதம் பாட மறுத்த ஸத்குரு தியாகராஜ ஸ்வாமிகள் ஸங்கீதத்தை முறையாக உபயோகித்ததால்தான் ஸ்ரீ ராமரை ப்ரத்யக்ஷமாகக் கண்டார். ஆகவே ஸங்கீதத்துக்கே மூலமான நமது வேதமந்திரங்களை, அனாசாரமாக வேத விருத்தமாகதர்ம சாஸ்திர ஸம்மதமில்லாத நிகழ்ச்சிகளில் உபயோகிக்கக்கூடாது, சாஸ்திர ஸம்மதமில்லாத திருமண அங்கீகாரத்தை லௌகீகமானமுறையில் பெற்றுக்கொள்ளலாம், வேத சாஸ்திர விருத்தமான திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வைதிக முறைப்படி வேத மந்திரங்கள் சொல்லி நடத்த வேண்டும் என்னும் விபரீதமான எண்ணம் யார் மனதிலும் எழாமல் இருந்து, நமது வேத மந்திரங்களுக்கும் அதை பாதுக்காப்பவர்களுக்கும், அதற்கான கௌரவம் மரியாதை கிடைத்து , வேத மந்திரங்களின் முழுமையான சக்தியின் மூலம் இந்த தேசமும் நமது ஸமூஹமும் செழிப்பாக வளர ஸ்ரீ பகவான் ரக்ஷிக்கட்டும்.

Vaithikasri March 2012-ஆசிரியர் எண்ணங்கள்


ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகப்பெறும் மாற்றத்தை ஏற்படுத்துபவர் தேவையான வித்யையை (கல்வியை) கற்றுத் தந்து அறிவுக்கண்ணைத்திறந்து விடும் ஆசிரியராவார், ஆசிரியரின் உதவியால்தான் இவ்வுலகத்தை-உலகில் நடைபெறும் ஸம்பவங்களை- நாம் நன்கு பார்க்க முடிகிறது, அத்துடன் ஆசிரியர் என்பவர் கல்வியை மட்டும் போதிக்காமல் இவ்வுலக வாழ்கைக்குத் தேவைப்படும்- ஒரு மனிதனை பண்படுத்தும் -நல்ல பல குணங்களையும் போதிப்பவராக இருக்கிறார், ஆகவேதான் குரு என்பவர் தெவத்துக்கும் மேலானவர் என்கின்றன நமது சாஸ்திரங்கள் ஆசிரியரைப் போலவே கல்வி கற்கும் மாணவனும் அடக்கத்துடன் பணிவுடன் கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும், அப்போதுதான் கற்றுக்கொள்ளும் கல்வியானது தக்க ஸமயத்தில் இவனுக்கு பயனுள்ளதாக அமையும், (தான் பிராஹ்மணன் என்று) பொ சோல்லி கல்வியை கற்றுக்கொண்ட கர்ணனுக்கு அவன் கற்ற அஸ்திர சஸ்திரங்கள் என்னும் கல்வி, குருகே்ஷத்ர (மஹாபாரத) யுத்த ஸமயத்தில் அதாவது தேவையான நேரத்தில் பயனளிக்கவில்லை, கல்வி இருந்தாலும் அதை முறையாக கர்ணன் கற்றுக்கொள்ளாததே இதற்குக்காரணம், எப்படிப்பட்ட (பெரிய இடத்து) மாணவனாக இருந்தாலும் கூட, ஆசிரியர் இருக்குமிடத்துக்குச் சென்று, அவரிடம் பணிவுடன் அடக்கமாக இருந்துதான் கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும், இதுதான் முறை, ஆகவேதான் பகவானே ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியாக இவ்வுலகில் அவதரித்த போது, குலகுருவான வஸிஷ்டாசார்யரிடமும், ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்த போது ஸாந்தீபினி மஹர்ஷியிடமும் அவர்கள் இருக்கும் ஆசிரமத்துக்கு (குருகுலத்திற்கு)ச் சென்று வித்யைகளை -கல்வியை- கற்றுக்கொண்டார்கள் என்கின்றன புராணங்கள் ஆனால் தற்சமயம் கல்வி போதிக்கும் முறையைக்காணும் போது, கற்றுத்தரும் முறையில் மாற்றம் தேவை என்று எண்ணத்தோன்றுகிறது, அதற்குக்காரணம் தற்போது சென்னையில் நடந்துள்ள ஒரு ஸம்பவம், அதாவது ஸுமார் 15 வயதுள்ள ஓர் மாணவன், தான் படிக்கும் பள்ளியில் கல்வி போதிக்கும் ஓர்ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செத ஸம்பவம், மிகுந்த வருத்தத்தையும் ஆஸ்சரியத்தையும் அளிக்கும் இந்த ஸம்பவத்திற்குக் காரணங்களை பலவாறாகா ஆராந்தாலும் கூட, அவற்றுள் அந்த மாணவன் கல்வி கற்றுக்கொண்ட- கற்பிக்கப்பட்ட- (தவறான) முறையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம், ஸுமார் 10 வருடங்களாக கற்றுக்கொள்ளும் , அந்த மாணவனின் கல்வி, அவனுக்கு விநயத்தையும் பண்பாட்டையும் குரு பக்தியையும் கற்றுத் தந்திருக்க வேண்டும், மாறாக அந்த கல்வி அவனுக்கு வெறுப்புத் தன்மையையும் குரோதத்தையும் கற்றுத் தந்துள்ளது, இது மிகவும் வருந்தத்தக்க விஷயம், தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஶ்நேந ஸேவயா என்பதாக ஆசிரியரிடமிருந்து மாணவன், ப்ரணிபாதம் என்னும் அடக்கத்துடனும், விநயத்துடனும் இருந்து குருவுக்கு பணிவிடைகள் செது வித்யையை (கல்வியை) குருவினிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டும், ஸந்தேஹங்களை பரிப்ரச்னத்துடன் (பணிவுடன்) கேட்டுத்தெளிவு பெற வேண்டும் என்பதாக பாடம் கற்றுக்கொள்ளும் முறையை பகவத் கீதை நமக்கு போதிக்கிறது, ஆனால் தற்போது ஆங்காங்கே பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் கலாசாலைகளிலும் படிக்கும் முறையை ஆராந்தால் இதன்படி இல்லை என்பது புரியும், முன்காலத்தில் கல்வி கற்பிக்கும் முறைகளுக்கும் தற்போதைய கல்வி கற்றுத்தரும் முறைகளுக்கும் நிறைய வேறுபாடுகள். ஆசிரியரின் முன்பாக அடக்கத்துடன்இருந்து மாணவர்கள் கல்விகற்றுக்கொண்ட நிலை மாறி, ஆசிரியர் நின்று கொண்டு கற்றுத்தருவதும், மாணவர்கள் கால்களை தொங்க விட்டுக்கொண்டு அலக்ஷ்யமாக பாடங்களை கற்றுக்கொள்வதுமாக இன்றைய நிலை, ஒரு மாணவனின் வாழ்க்கையில் அனைத்து கல்விகளுக்கும் ஒருவர்தான் குரு (ஆசிரியர்) என்னும் நிலை மாறி, ஒரே மாணவனுக்கு ஒரே நேரத்தில் (பாடப்பிரிவின் படி) பல்வேறு ஆசிரியர்கள் என, ஒரு மாணவன் 10ஆம் வகுப்பு படித்து முடிக்கும் போது, அவனுக்கு கல்வி போதித்த ஆசிரியர்களின் எண்ணிக்கை ஸுமார் 100 பேர்கள், இது இன்றைய கல்வி கற்கும் நிலை, குரு இருக்குமிடம் சென்று, குரு சோல்லித்தரும் ஸமயத்தில், மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டது அன்றைய நிலை, மாணவர்கள் இருக்கும் வகுப்பறையைத் தேடி ஆசிரியர் வந்து, மாணவர்களுக்கு உகந்த நேரத்தில் பாடங்களை கற்றுத் தருவது இன்றைய நிலை, நான் சோன்னபாடம் உனக்கு புரிந்ததா?என்று ஆசிரியர் மாணவனிடம் கேட்டநிலைமாறி, நான் உனக்கு புரியும்படி பாடங்களை கற்றுத்தந்தேனா? என்று கேட்பது இன்றைய நிலை. ஆகவே எப்படிப்பட்ட கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்தும் நாம் அந்தக் கல்வியை எந்த முறையில் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும், அப்போதுதான் கற்றுக்கொள்ளும் கல்வியும் வித்யா ததாதி விநயம் என்பதாக மாணவ்ர்களின் அறிவுக் கண்ணைத் திறந்து விடும், அந்தக் கல்வி கற்பவருக்கும் கற்றுத்தருபவருக்கும் இவ்வுலகத்திற்கும் நன்மையைத்தரும், ஆகவே பெரியோர்கள் ஒன்று கூடி பள்ளிகளில் தற்சமயம் கல்வி கற்றுத்தரும் முறைகளை மறுபரிசீலனை செய வேண்டும் தேவையானால் அவற்றில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும், இதற்கு ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்,

Vaithikasri April 2012-ஆசிரியர் எண்ணங்கள்


நீர், நெருப்பு, மண், ஆகாசம், காற்று ஆகிய ஐந்தும் இவ்வுலகில்அனைத்து ஜீவராசிகளும் உயிர்வாழ மிக முக்கியமானவை, பஞ்ச பூதங்கள் எனப்படும் இவை ஐந்தும் கடவுளின் அருளால் மட்டுமே நமக்குக் கிடைப்பவை. இவற்றை இவ்வுலகிற்குக் கிடைக்கச் செய்வதில் மற்றவர்களைக் காட்டிலும் அந்தணர்களுக்கு மிக முக்கியமான பங்கு உள்ளது, ஒவ்வொரு நாளும் ஸூர்யன் உதிக்கும் மற்றும் மறையும் நேரங்களில் தோன்றும் ஸந்த்யா என்னும் தேவதையை, வந்தனம் என்னும் கர்மாவால், காயத்ரீ போன்ற மந்திரங்களை ஜபித்து உபாஸிக்கும் முறையே ஸந்த்யாவந்தனம் எனப்படும் , இதை அந்தணர்கள் மட்டுமின்றி, (உபநயனம் ஆன) அனைவரும் தவறாது செய்ய வேண்டும். அப்போதுதான் நீர் நெருப்பு ஆகாசம் காற்ற்று மண் ஆகிய பஞ்சபூதத்தின் சக்திகள் இவ்வுலகிற்குக் கிட்டும், பஞ்ச பூதங்களால் ஏற்படும் (இயற்கை) சீற்றங்கள் ஏற்படாமல் உயிரினங்கள் பாதுகாக்கப்படும், ஆகவேதான் நமது வேதங்களும் சாஸ்திரங்களும் உலக நன்மையைக்கருதி ஒவ்வொரு அந்தணரும் தவறாது காலை மற்றும் மாலை நேரங்களில் ஸந்த்யாவந்தனம் செய்ய வேண்டும் என்று கடமையாகவே கூறியுள்ளது, ஸந்த்யாவந்தனம் செய்ய வேண்டிய (ஸூர்யஉதய- ஸூர்யஅஸ்தமன) நேரம், செய்பவருக்கான (சாஸ்திரப்படி வேஷ்டி கட்டிக்கொள்ளுதல், ஸ்னானம் செய்தல் முதலான) கட்டுப்பாட்டுகள்.,செய்யும் வழிமுறைகள், செய்யப்படும் இடங்கள் ஆகியவற்றில் (நோயாளிகள்-சிறுவர்கள்-முதியோர் போன்றவர்களுக்கு) சில விதிவிலக்குகளை வழங்கிய சாஸ்திரம், ஸந்தியாவந்தனத்தைச் செய்யாமல் இருப்பதற்கு யாருக்கும் அனுமதியளிக்கவில்லை, மாறாக ஸந்த்யா ஹீன: அஶுசிர் நித்யம் அநர்ஹ: ஸர்வகர்மஸு என்பதாக ஸந்த்யாவந்தனம் செய்யாத அந்தணர், தீட்டுள்ளவரைப் போல் எப்போதும் அசுத்தமானவர் என்று கூறும் தர்மசாஸ்திரம், அதைவிடக்கடுமையாக, அப்படிப்பட்டவர் எந்த ஒரு செயலையும் செய்யத்தகுதியற்றவர் என்றும் பயமுறுத்துகிறது. அதாவது ஸந்த்யாவந்தனம் செய்யாதவர், தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும், மற்றவருக்காகவும், செய்கின்ற தெய்வ ஸம்பந்தப்பட்ட பூஜைகள் பாராயணங்கள் அபிஷேகம் ஆலய தரிசனம் போன்றவைகளும், இறந்த தனது பெற்றோருக்காகச்செய்யும் சிராத்தம் தர்ப்பணம் போன்றவையும் முழுமையான பலனைத்தராது என்கிறது சாஸ்திரம், இவ்வுலகில் த்ரேதாயுகத்தில் பகவானே ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியாக மனிதராகப் பிறந்து, ஒரு மனிதன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை, தானே வாழ்ந்தும் காட்டினார், ஸ்ரீ ராமநவமியைக் கொண்டாடும் நாம், ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை- ராமாயணத்தை-படிக்கும் போது, ஸ்ரீ ராமர் வைதிக தர்மங்களுக்கு குறிப்பாக ஸந்த்யாவந்தனத்திற்கு, தந்துள்ள முக்கியத்துவத்தைப் பார்க்கலாம். ஸ்ரீ ராமலக்ஷ்மணர்கள், காயத்ரீ மந்திரத்தை உலகிற்குத் தந்த விஸ்வாமித்ர மஹர்ஷியுடன் யாகத்தை பாதுகாக்கச் செல்லும் போது, ஸ்நாத்வா க்ருதோத3கௌ வீரௌ ஜேபது: பரம ஜபம் (பாலகாண்டம்-23) என்று, ஸரயூ நதிக்கரையில் தங்கி ஓய்வெடுத்து விட்டு, மறுநாள் காலையில் எழுந்து நதியில்ஸ்னானம் செய்து,அர்க்யம் தந்து உயர்வான (காய்த்ரீ) மந்திரத்தை ஜபம் செய்தார்கள் என்கிறார் வால்மீகி மஹர்ஷி,மேலும் யதா2ர்ஹம் அஜபன் ஸந்த்4யாம் ருஷயஸ்தே ஸமாஹிதா: என்பதாக, காட்டில் வஸிக்கும் அனைத்து மஹ்ர்ஷிகளும் ஸந்த்யோபாஸனம் செய்தார்களாம். அத்துடன் ஜனகரின் தேசத்திற்கு ஜானகியை கைபிடிப்பதற்காக விஸ்வாமித்ரருடன் செல்லும் ஸ்ரீ ராம லக்ஷ்மணர்கள், க்ருத்வா பூர்வாஹ்ணிகாம் கிரியாம் என்று, பகலில் முதன்முதலாகச் செய்யவேண்டிய (ஸந்த்யோபாஸனம் என்னும்) கிரியைகளைச் செய்தார்கள் என்றும் காண்கிறோம், அயோத்தியில் சக்கிரவர்த்தியாக ஆக்ஷி செய்த ஸமயத்திலும் பூர்வாம் ஸந்த்4யா முபாஸீனோ ஜஜாப யத மானஸ: என்பதாக, காலையில் செய்ய வேண்டிய ஸந்த்யோபாஸனத்தை முடித்த பின்னரே, அரச ஸபைக்குச் சென்று தன்னைக் காண வந்திருக்கும் மக்களைக்கண்டார் என்கிறார் வால்மீகி மஹர்ஷி. ஸீதை மற்றும் லக்ஷ்மணருடன் காட்டில் ஸஞ்சரிக்கும் ஸ்ரீ ராமர், அகஸ்தியரின் ஆஸ்ரமம் செல்லும் முன்பாக ஸூர்யன் அஸ்தமனமாவதை உணர்ந்து ஸந்த்யோபாஸனத்தை(சுறுக்காமல்) முறையாக செய்தார் என்பதை ராமஶ்ச அஸ்தம் க3த: ஸந்த்4யா காலோப்4யவர்த்த, உபாஸ்ய பச்சிமாம் ஸந்த்4யாம் ஸஹ ப்ராப்ய யதா2விதி4 என்று ஆரண்யகாண்டம் தெரிவிக்கிறது.மனைவியை (ஸீதையை)ப் பிரிந்து தனிமையில் வருந்தும் போதும், ராவணணுடன் யுத்தம் செய்யும் ஸமயத்திலும் கூட ராமர் ஸந்த்யாவந்தனத்தை விட்டு விடவில்லை என்பதை ஆங்காங்கே தவறாது தெரிவிக்கிறார் வால்மீகி மஹர்ஷி. தர்மங்களுக்குள் சிறந்ததான-வேத விஹிதமான- ஸந்த்யோபாஸனம் என்னும் தர்மத்தை தவறாது செய்ததால்தான் ஸ்ரீராமரை ராமோ விக்4ரஹவான் த4ர்ம: என்பதாக தர்மத்தின் வடிவமே ஸ்ரீ ராமர் என்று கூறுகிறோம், ஸந்த்யாவந்தனம் அந்தணரின் கடமை என்பதால், ஸமயம் கிடைக்கும் போது செய்தால் போதுமே என்று நினைக்கக் கூடாது, ஸந்த்யோபாஸனத்தால் பஞ்ச பூதங்களின் சக்தி இவ்வுலகத்திற்கு ஸரியாக காலத்தில் கிடைக்கிறது என்பதால் இவ்வுலக (மக்களின்) நன்மையில் விருப்பமுள்ளவர்கள், மற்ற செயல்களைக் காட்டிலும் ஸந்த்யோபாஸனத்திற்கு முக்கியத்துவம் தந்து, ஒவ்வொரு நாளும் காலை மாலை நேரங்களில் ஸந்த்யோபாஸனம் செய்ய முயற்சிக்க வேண்டும், ஒவ்வொருவரும், தனக்கு ஏற்படும் ஆபத்தான காலங்களில் அவற்றிலிருந்து விடுபட, மந்திரஜபம் ஹோமம் பாராயணம் கே்ஷத்ராடனம் நாம ஸங்கீர்த்தனம் என்று பலவாறாக ஈடுபடுகிறார்கள், ஆனால் அதற்கு முன்பாக, ந கா3யத்ர்யா: பரோ மந்த்ர: என்பதாக காயத்ரீ மஹா மந்திரத்துக்கு மேலான மந்திரம் ஈரேழு புவனத்திலும் இல்லை என்பதால், ஸந்த்யோபாஸனம் செய்துவிட்டு, அதாவது முதன்முதலாக பலர்ர் முன்னிலையில் சிறு வயதில் தனக்கு (ப்ருஹ்ம) உபதேசம் செய்யப்பட்ட காயத்ரீ மஹா மந்திரத்தை ஜபம் செய்து விட்டுச் செய்தால் பூஜை ஜபம் பாராயணம் போன்றவைகள் முழுமையான பலனை விரைவாகத்தரும், தேவையான ஸமயத்திலெல்லாம் நமக்காக பால் சுறக்கும் காமதேனு (பசு)வைப் போல் இருக்கும் காயத்ரீ மந்திரம், நமது அனைத்துத் தேவைகளையும், ஏன்! இந்த தேசத்தின் தேவைகளைக் கூட, நிறைவேற்றும் ஆற்றலுடையது, நோய் வறுமை கடன் ஆபத்துகள் போன்றவற்றை விலக்கி, ஆயுள், செல்வம், புத்தி வளர்ச்சி, வெற்றி,லாபம்,ஆகிய அனைத்தையும், ஸந்த்யா வந்தனத்தை- காயத்ரீ ஜபத்தை-முறையாகச் செய்வதால் நாம் அடைய முடியும். உரியகாலத்தில் ஸந்த்யோபாஸனம் செய்பவர்கள் இருக்கும் கிராமத்தில்- நகரத்தில்- தேசத்தில்- நீராலோ (ஜலக்கஷ்டம்-வெள்ளம்), நெருப்பாலோ, ஆகாசத்தினாலோ (வான் வெளி ஆபத்துகள்), காற்றாலோ (புயல்), மண்ணாலோ (பூகம்பம்), எந்த ஆபத்தும் ஒரு போதும் ஏற்படாது. என்றும், ஆகவே ஸந்த்யா வந்தனம் செய்யாத அந்தணர் (தேசத்தை பாதுகாக்கத் தவறிய) குற்றம் புரிந்தவர் என்றும், அவரை அந்த தேச அரசன் (தேச த்ரோஹ குற்றத்திற்காக) தண்டிக்க வேண்டும் என்றும் கூறுகிறது மனுஸ்ம்ருதி. (அந்தணர்களின் நல்ல காலத்தால் இந்த ஷரத்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை, தற்போதைய ஆக்ஷியாளர்களும் இதை சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் நினைக்கவில்லை), அந்தணரல்லாத மற்றவர்கள்அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைக:ளை ஓரளவாவது செய்துகொண்டு வருகிறார்கள், அந்தணர்கள் மட்டும் தான், தனது கடமைகளை, (அதனால் கிட்டும் பயன்களை ஸரிவரப்புரிந்து கொள்ளாததால்) செய்யாமல் விட்டு விடுகிறார்கள் என்பது சிலரின் கருத்து. உலகில் காலத்தில் மழை பெய்யவும், பூகம்பம் ஸுனாமி, வெள்ளம் போன்ற ஆபத்துகள் வராமல் பாதுக்காக்கவும், வேத சாஸ்திரங்களால் தவறாது செய்ய வேண்டும் என்று விதிக்கப்பட்ட ஸந்த்யாவந்தனம் என்னும் கர்மாவை, ஒவ்வொரு அந்தணரும் ஒவ்வொரு நாளும் செய்ய முயற்சித்து, அதில் வெற்றி யடையவும், அதன் மூலம் உலகில் வாழும் மனிதன் மிருகம் பறவைகள் செடி கொடிகள் போன்ற அனைத்து உயிர்களுக்கும் நன்மைகள் கிடைக்கவும் ஸ்ரீ பகவான் நமக்கு அனுக்ரஹிக்கட்டும்.

Vaithikasri June 2012ஆசிரியர் எண்ணங்கள்


இவ்வுலகில் அனைவரின் வாழ்க்கையிலும் நடைபெறும் முக்கியமான ஸம்பவம் திருமணம், குறிப்பாக ஓர் பெண்ணின் வாழ்க்கையில் நடைபெறும் மகிழ்ச்சியான தருணம் திருமணம், திருமணம் ஆன பிறகு உரிய காலத்தில் குழந்தை பிறத்தல் என்பது அதை விட ஆனந்தம், மிகப்பெரிய பங்களா கட்டி அதில் அனைத்து ஸுக போகங்களுடன் வாழ்ந்தாலும் கூட அந்த வீட்டில் இங்குமங்கும் தவழ்ந்து ஓடி விளையாடி, வீட்டை அழுக்காக்கி, விஷமத்தனம் செய்து, மழலைச் சொல் பேசி மகிழ்விக்க சில குழந்தைகள் இருந்தால்தான் அந்த ஸுகத்தை வாழ்க்கையை நன்கு அனுபவிக்க முடியும், காலத்தில் திருமணம் நடைபெற்று உரிய காலத்தில் குழந்தை பிறத்தல் என்பது பகவத் கிருபையால்தான் கிட்டும், பலருக்கும் அந்த (ஸந்தான) பாக்யம் கிடைத்தாலும் கூட, ஒரு சிலருக்கு மட்டும் தகுந்த வயதில் திருமணம் நடந்தும் கூட பல காலமாக குழந்தை பாக்யம் கிடைப்பதில்லை, இதற்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனாலும் பொதுவான காரணங்கள் சில, அவற்றில், தந்தை தனது பெண்ணிற்கு காலத்தில் செய்து வைக்க வேண்டிய (ப்ரதமார்த்தவ சாந்தி மற்றும் கர்ப்பதானம் என்னும்) இரண்டு ஸம்ஸ்காரங்களைச் செய்து வைக்காதது என்பதும் ஒரு காரணம், 1)ஒரு பெண்ணின் வயிற்றில் கர்ப்பத்தை (குழந்தையை) உறுவாக்குதல், 2)அந்த கர்ப்பத்தை எந்த ஒரு ஆபத்தும் இன்றி பாதுகாத்தல் ஆகிய இரண்டும் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அருளால்தான் கிட்டும், ஒரு மனிதனின் முயற்சியால் கர்ப்பத்தில் குழந்தையை உருவாக்கவோ, அந்த சிசுவை பாதுகாப்பதோ இயலாத காரியம், தெய்வ அருளால் மட்டுமே ஒரு ஜீவனை கர்ப்பத்தில் உருவாக்கவும் பாதுகாக்கவும் முடியும், கர்ப்பத்தில் இருக்கும் சிசு, தனது தாய் சாப்பிடும் உணவையே தானும் சாப்பிட்டு வளரும்படி செய்வதும் பகவான்தான். மனித முயற்சி என்பது அதற்குத் துணையாகத்தான் இருக்க முடியும், ஆகவேதான் ஒரு பெண் முதன்முதலாக ருதுஸ்னானம் செய்த உடன், அந்தப் பெண்ணிற்கு உடலையும் உள்ளத்திலும் இருக்கும் தோஷத்தை (அழுக்கை) போக்கி அந்தப்பெண்ணின் உடலில் கர்ப்பம் தரிக்கும் தன்மையை ஏற்படுத்தும் விதமாக, பெண்ணின் தந்தை, ப்ரதமார்த்தவ சாந்தி என்னும் ஸம்ஸ்காரத்தைச் செய்து வைக்க வேண்டும் என்கிறார்கள் மஹர்ஷிகள், அதாவது பெண் ருதுவான நாளின் நக்ஷத்ர தேவதைக்கும் ஸ்ரீ மஹாவிஷ்ணுவிற்கும் பூஜை ஜபம் ஹோமம் செய்து கலச ஜலத்தை பெண்ணிற்கு அபிஷேகம் செய்து வைக்க வேண்டும், இதற்குத்தான் ப்ரதமார்த்தவ சாந்தி எனப்பெயர். உரிய காலத்தில் இந்த சாந்தியைச் செய்ய இயலவில்லை என்றால் திருமணத்திற்கு முன்பாக இதைச் செய்தபின்னர் பெண்ணிற்குத் திருமணம் நடத்த வேண்டும், இதனால் ஒரு பெண்ணின்உடலில் இருக்கும் தோஷம் விலகுகிறது, அவள் உடலாலும் உள்ளத்தாலும் தூய்மையை அடைகிறாள் என்பதால் ப்ரதமார்த்தவ சாந்தியை முறையாக நடத்த முயற்சிக்கலாம். இவ்வாறே திருமணம் ஆன உடன் முறையாக நடத்த வேண்டிய நிகழ்ச்சி கர்ப்பாதானம் என்னும் ஸம்ஸ்காரம், விஷ்ணுர் யோநிம் கல்பயது முதலான மந்திரங்கள் சொல்லி, ஸ்ரீ மஹாவிஷ்ணுவை பிரார்தித்து நடத்தப்படும் கர்ப்பாதான ஸம்ஸ்காரத்தால், ஒரு பெண், தனக்கிருக்கும் (கர்ப்பாசய) தோஷத்தை விலக்கி கர்ப்பத்தில் குழந்தையைத் தாங்கும் சக்தியைப் பெறுகிறாள், தற்காலத்தில் ஒரு சிலருக்கு, முறையாக மந்திரங்கள் சொல்லி சாஸ்திரமுறைப்படி திருமணம் நடைபெற்றாலும் கூட, அதன் பிறகு ஸந்ததி பாக்யத்தைத் தரும் கர்ப்பாதான நிகழ்ச்சி, முறையாக நடத்தாததால், குழந்தை பாக்யம் கிடைப்பதில் பெண் கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது, ஒரு சில இடங்களில் கர்ப்பாதானம் நடத்தாமலேயே (ஸீமந்தம் நடத்தி) குழந்தை பிறந்தாலும் கூட, அந்தக்குழந்தையிடம் அறிவு வளர்ச்சி நல்ல குணங்கள் போன்றவை அவ்வளவாக காணப்படுவதில்லை, இந்த தோஷத்தை விலக்கி காலத்தில் நல்ல குணங்களுடன் ஆரோக்யமாக அறிவு வளர்ச்சியுடன் கூடிய (பல)குழந்தைகள் பிறப்பதற்கும், அந்தக் குழந்தைகள் மூலம் அனைவருக்கும் ஆனந்தம் கிடைப்பதற்கும், பகவத் கிருபையை குறிப்பாக ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அருளை பெற்றுத்தரும் கர்ப்பாதானம் என்னும் ஸம்ஸ்காரத்தை திருமணம் ஆன பின்னர் நல்ல நாள் மற்றும் பொருத்தமான நக்ஷத்ரம் முஹூர்த்தம் பார்த்து சாஸ்திரப்படி நடத்தலாம், அப்போதுதான் எந்த ஒரு பரிஹாரமும் இன்றி திருமணம் ஆன உடனேயே காலத்தில் ஸந்ததி (குழந்தை)பாக்யம் கிட்டும், பிறக்கும் குழந்தையும் அறிவாளியாக தேச பக்தி மாத்ரு பித்ரு பக்தி உள்ளதாகப் பிறக்கும், ஆகவே ஒவ்வொரு பெண்ணிற்கும் பிரதமார்த்தவ சாந்தி மற்றும் கர்பாதானம் ஆகிய இரு ஸம்ஸ்காரமும் முறையாக நடைபெறவும், அதன் மூலம் பகவத் கிருபையால் உரிய காலத்தில் நல்ல சுபலக்ஷணமான குழந்தைகள் பிறக்கவும், அந்தக்குழந்தை நல்ல குணங்களுடன் வளர்ந்து நீண்ட ஆயுளுடன் பிரகாசிக்கவும் அத்துடன் அந்தக்குழந்தை குடும்பத்தின் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கவும் ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்

Vaithikasri July 2012-ஆசிரியர் எண்ணங்கள்


ஐம்பெரும் பூதங்கள் உட்பட யாருக்கும் எந்த ஒரு துன்பத்தையும் தர மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டு துறவறம் ஏற்பவர்களே ஸன்யாஸிகள் (துறவிகள்) எனப்படுகிறார்கள். மண்ணாசை பெண்ணாசை பொண்ணாசை என்னும் மூன்று வித ஆசைகளையும் துறந்த இவர்கள் தனது உபதேசம் (அருளுரை) மூலம் மக்களின் மனதிலுள்ள இருளை விலக்கி, ஆத்ம ஞானமென்னும் ஒளியை ஏற்றுபவர்கள், வருடம் முழுவதும் தேசமெங்கிலும் சுற்றிச் சுற்றி வந்து மக்க:ளுக்கு அருளாசி வழங்கலாம் என்னும் ஸ்வதந்திரத்தை இவர்களுக்குத் தந்த சாஸ்திரம், மழை காலங்களில் (இரண்டு மாதம்) மட்டும் ஒரே இடத்தில் -ஒரே ஊரில்- தங்கியிருக்க வேண்டும் என்று கூறுகிறது, அதன் படியே வருஷம் முழுவதும் ஸஞ்சரிக்கும் ஸன்யாஸிகளும், மழைகாலங்களில் (இந்த வருடம் மூன்று மாதம்) மட்டும் ஒரே இடத்தில் (ஊரில்) தங்கி சாதுர்மாஸ்யம் என்னும் விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள், இந்த ஸன்யாஸிகள், தாங்கள் தங்கும் இடத்தில், தினந்தோறும் தாங்கள் வழிபடும் தெய்வங்களுக்கு பூஜை செய்தல், தினஸரி வேதாந்த (உபநிஷத்) பாடங்களை மக்களுக்குச் சொல்லுதல், ஆத்ம விசாரம் செய்தல், மக்களுக்கு அருளுரை வழங்குதல்,என பற்பல செயல்கள் மூலம் மக்களுக்கு உதவி செய்கின்றார்கள். ப்ரும்ஹசாரி க்ருஹஸ்தன் வானப்ரஸ்தன் ஸன்யாஸி என்னும் நான்கு ஆசிரமங்களுக்குள் மிகவும் உயர்வான ஆசிரமம் துறவறம், ஆகவேதான் துறவி மிகவும் மரியாதைக்குரியவர்- அனைவராலும் போற்றப்பட வேண்டியவர்- இவர்கள் எங்கு வருகிறார்களோ-தங்குகிறார்களோ- அந்த தேசத்துக்கும் நகரத்திற்கும் - காலத்தில் மழை, உணவு தான்ய உத்பத்தி ,வியாபாரச் செழுமை, போன்ற பற்பல நன்மைகள் ஏற்படும் என்றும் , ஆகவே இவர்களை வரவேற்று உபசரித்து பூஜிக்க வேண்டியது அவர்கள் தங்கும் நகரத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை என்றும் கூறுகிறது சாஸ்திரம். ஸ்ரீ நாரதரின் முற்பிறவியில், அவர் சிறு குழந்தையாக இருந்த போது அவரது ஊரில் வந்து தங்கி சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்த துறவிகளுக்கு ஸேவை செய்ய, நாரதரின் தாயார் அவரை நியமிக்க ஸ்ரீ நாரதரும் அதை ஏற்றுக் கொண்டு ஸன்யாஸிகளுக்கு நான்கு மாதம் ஸேவை செய்ய, கடைசியில் ஒரு நாள், ஸன்யாஸிகள், தான் சாப்பிட்ட மிகுதியை நாரதருக்குத் தந்து சாப்பிடச் சொல்ல ஸ்ரீ நாரதரும் அதைச் சாப்பிட, அவருக்கு ஆத்ம ஸ்வரூபம் புலப்பட பிறகு காட்டிற்குச் சென்று தனிமையில் தவம் செய்து அடுத்த பிறவியில் ஸ்ரீ நாரதராகப் பிறந்தார் என்கிறது ஸ்ரீமத் பாகவத புராணம். மனிதனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய நல்ல வாய்ப்புகளில் ஸன்யாஸிகள் சாதுர்மாஸ்ய விரதத்தைச்செய்வதற்காக, தங்கள் வஸிக்கும் (அருகிலுள்ள) ஊரில் வந்து தங்குவதும் ஒன்று, இந்த வருஷம் 03-07-2012 முதல் 30-09-2012 முடிய ஸுமார் இரண்டு மாத காலங்கள் ஸன்யாஸிகள் (துறவிகள்) ஆங்காங்கே தங்கி , தினஸரி பூஜை, வேதாந்த சாஸ்திர விசாரம், மக்களுக்கு அருளுரை போன்றவைகளுடன் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள், மக்கள் தினஸரி அவர்கள் இருப்பிடம் சென்று அவர்களுக்குத்தேவையான பிக்ஷாவந்தனம் முதலியவற்றை அளித்து ,பாதபூஜை செய்து, பூஜா (அபிஷேக) தீர்த்த பிரஸாதம் பெற்றுக் கொண்டு, அருளுரையைக் கேட்டு ஆனந்தித்து பயனடைய வேண்டும், இது அவரவர்களின் விருப்பத்திற்குட்பட்ட செயல் மட்டுமல்ல , கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என்னும் சாஸ்திர விதி, உலகமனைத்தையும் ப்ருஹ்ம ஸ்வரூபமாக த்யானிக்கும் ஸன்யாஸிக்கு ஒரு நாள் (ஒரு வேளை) பிக்ஷாவந்தனம் செய்வதால் (அன்னமளிப்பதால்) இவ்வுலகில் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒரு நாள் உணவிட்ட பலன் கிட்டுமாம், துறவிகளுக்குச் செய்யும் பாதபூஜையால் செல்வம் ஆரோக்யம் போன்ற நன்மைகள் கிட்டும், வஸ்திரதானத்தால் ஆயுள் அதிகரிக்கும், ஒவ்வொரு நாளும் இவர்கள் செய்யும் வேதாந்த உபதேசத்தை-அருளுரையைக் கேட்பதால் என்பது கிருச்ரம் செய்த பலன் கிட்டும், இவ்விதம் கூறும் யதி தர்ம ப்ரதீபிகா என்னும் புஸ்தகம், மேலும் தனது இருப்பிடத்தை நாடி வந்திருக்கும் துறவியை யார் மதிக்க வில்லையோ அவர்களுக்கு பலவிதமான சிரமங்கள் ஏற்படலாமென்றும் பயமுறுத்துகிறது, யதி ஸன்யாஸிநம் பி4க்ஷும் பி4க்ஷான்னம் போ4ஜயேத் து ய: ஸ ஸத்ரயாக3 க்ருத் நித்யம் ஸார்வ தை3வத்ய லிங்க3த: என்பதாக யார் ஒருவர் யதியான ஸன்யாஸிக்கு பிகை்ஷ அளிக்கிறாறோ ,அவர் பலவருஷம் செய்ய வேண்டிய ஸத்ர யாகத்தின் பலனையடைகிறார்.என்கிறார் தூர்வாஸ மஹர்ஷி காளீ புராணத்தில். அத்துடன் மந்திர ஜபம் ஸ்தோத்திர (வேத) பாராயணம் புராண பாராயணம் போன்றவற்றை ஸன்யாஸிகளின் முன்னிலையில் செய்வதால் அவை உடனேயே ஸித்தியைத்தந்து பலனைத்தரும், ஆகவே தற்சமயம் ஆங்காங்கே தங்கி, சாதுர்மாஸ்ய விரதங்களை அனுஷ்டிக்கும் ஸன்யாஸிகளை நாமும் ஆச்ரயித்து பூஜித்து நமஸ்கரித்து பிக்ஷாவந்தனம் செய்து அனுக்ரஹ பாஷனத்தைக்கேட்டு அனைத்து நன்மைகளையும் அடைய ஸ்ரீ பகவான் நமக்கு அனுக்ரஹிக்கட்டும், (இந்த வருஷம் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கும் சில ஸன்யாஸிகளின் விபரங்கள்

Vaithikasri August 2012-ஆசிரியர் எண்ணங்கள்


இன்பமாக வாழ்க்கையை நடத்த தெய்வ அனுக்ரஹம் கட்டாயம் தேவை என்பதை பலரும் உணர்ந்திருக்கிறார்கள், ஒவ்வொரு ஆஸ்திகர்களும் தன்வீட்டில் தனக்குப் பிடித்தமான தெய்வ விக்ரஹங்களை- படங்களை-வாங்கி வந்து வைத்து, தினஸரி சக்திக்குத் தக்கவாறு பூஜை செய்கிறார்கள், சக்தியுள்ள சிலர் தனது வீட்டில் பூஜையறை என்று ஓரிடம் ஒதுக்கி, அதில் தெய்வங்களின் படங்களை வைத்து பூஜிக்கிறார்கள், மற்றும் சிலர் வீட்டில் எங்கு இடமிருக்கிறதோ அங்கெல்லாம் தெய்வங்களின் படங்களை (சுவற்றில் மாட்டி) வைத்து வழிபடுகிறார்கள், உங்கள் வீட்டில் எத்தனை தெய்வ (ஸ்வாமி)ப் படங்கள் இருக்கின்றன? என்று ஒருவரைக்கேட்டால் ஸுமார் 15 முதல் 20 வரை இருக்கலாம் என்று பதில் வரும், அவ்வளவு படங்கள் எப்படி வீட்டிற்கு வந்தன? என்று மறுபடியும் கேட்டால், ஒவ்வொரு ஸந்தர்பங்களிலும் ஒவ்வொரு படங்களை நானாகவே சேர்த்துக்கொண்டேன், சிலவற்றை எனக்கு நெருக்கமானவர் தந்தார், என்றெல்லாம் பதில் வரும், அந்தப்படங்களை வீட்டில் எங்கெல்லாம் மாட்டி வைத்துள்ளீர்கள்? என்று கேட்டால், வீட்டு வாசலில் சில, வீட்டின் உள்ளே நுழையுமிடத்தில் சில, ஹாலில் சில, பெட் ரூமில் சில, சாப்பிடும் இடத்தில் சில, சமையல் ரூமில் சில,கொல்லையில் ண்ச்சில, மாடியில் சில, என்று அடுக்கிக்கொண்டே போவார்கள், ஆக எங்கும் நிறைந்திருக்கும் தெய்வம், தனது வீட்டிலும் எங்கும் பரவி படங்களாக சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்பதைச் சொல்லுவார் அவர். இதுதான் பலரது நிலை, இதில் மாற்றம் தேவை. பெரிய மனிதர் ஒருவரின் எதிரில், நாம் கண்டகண்ட பேச்சுக்களைப் பேச மாட்டோம், கால்களைத் தொங்க விட்டுக்கொண்டோ நீட்டிக் கொண்டோ அமர மாட்டோம், மிகுந்த அடக்கத்துடன் நடந்து கொள்வோமல்லவா! நாம் ஒரு மனிதருக்குத் தரும் இந்த மரியாதையை நம் வீட்டில் படங்களாக காக்ஷிதரும் தெய்வங்களுக்கும் தர வேண்டாமா! தெய்வங்கள் படங்களில் விக்ரஹங்களில் ஸான்னித்யமாக இருக்கும் போது அந்தப்படங்களின் எதிரில் நாம் நாற்காலி சோபா போன்ற வற்றில் கால்களைத் தொங்கப்போட்டுக்கொண்டு அமர்வதும் மற்றவரைப் பற்றிய குற்றங்களையும் நமது தற்பெருமைகளையும், என- பேசக்கூடாத (பொய்) பேச்சுக்களைப் பேசுவதும், சாப்பிடக்கூடாது என்று சாஸ்திரங்களில் நிஷேதிக்கபட்ட பொருட்களை சாப்பிடக்கூடாத அகாலங்களில் சாப்பிடுவதும், தவறல்லவா!, இவற்றை நாம் தவிர்க்க முயற்சிக்கலாமே!, வீடு முழுவதும் தெய்வங்களின் படங்களை மாட்டி விட்டால் நாம் ஸுதந்திரமாக எங்கே நடமாடுவது? பேசுவது? சாப்பிடுவது? தூங்குவது? ஆகவேதான் வாஸ்து சாஸ்திரத்திலும் வீட்டில் பூஜையறை என்று ஒன்று அமைக்க வேண்டும் என்றும் அதில் தெய்வங்களை வைத்து பூஜிக்க வேண்டும், என்றும் கூறப்பட்டுள்ளது, ஆகவே நமது வீட்டில் எத்தனை தெய்வ விக்ரஹங்கள் படங்கள் இருக்கின்றனவோ, அத்தனையையும் ஒன்று சேர்த்து, பூஜை செய்யும் இடத்தில் (பூஜை யறையில்) வைத்துவிட வேண்டும்,அப்போதுதான் அனைத்துக்கும் ஒன்றாக இனைத்து பூஜைகள் நிவேதனங்கள் செய்ய ஸௌகரியமாக இருக்கும், இது காலண்டர் தானே!, இது அழகுக்கல்லவா மாடியிருக்கிறோம்? என்றெல்லாம் ஸமாதானம் சொல்லாமல் வீட்டிலுள்ள அனைத்து தெய்வப்படங்களையும் ஓரிடத்தில் சேர்த்து மாட்டலாம், மேலும் வீட்டில் அதிகமான அளவில் படங்களை விக்ரஹங்களை சேர்த்துக்கொள்ளாமல், படங்களின் விக்ரஹங்களின் எண்ணிக்கையையும் குறைத்துக் கொள்ளலாம். ஒரே தெய்வங்களின் ஒரேவிதமான பற்பல படங்களை வைத்துக் கொள்ளாமல் ஓரிறு படங்களை மட்டும் வைத்திருந்தால் போதும், ஆசார்யர்களின் படங்களையும் மஹான்களின் படங்களையும் தெற்கு நோக்கி மாட்ட வேண்டும், தெய்வங்களின் படங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி மாட்ட வேண்டும், மறைந்த முன்னோர்களின் படங்களை பூஜையறையில் மாட்டக்கூடாது போன்ற நியமங்களை கடைபிடிக்க வேண்டும், சிறிய அளவில் தெய்வ விக்ரஹங்கள் மற்றும் படங்களை வீட்டில் ஒரே இடத்தில் வைத்துக்கொண்டு தினந்தோறும் சிறிய அளவில் பூஜை செய்து வந்தாலே தெய்வ அருள் முழுமையாக நமக்குக் கிட்டும், குடும்பத்தில் நிம்மதி ஏற்படும், இதற்கு பகவான் அனுக்ரஹிக்கட்டும்.