Let a Vedic priest enter your home every month

Let a Vedic Priest Enter Your Home Every Month

Search This Blog

Friday, September 28, 2012

Vaithikasri February 2012ஆசிரியர் எண்ணங்கள்


நமது மதத்திற்கும், அனைத்து தர்ம காரியங்களுக்கும் தெய்வ வழிபாட்டுக்கும் மூலபிரமாணம் ஆதாரம்வேதங்களே வேத மந்திரங்களே, வேதம் எத்தனை காலமாக இவ்வுலகில் இருக்கிறது என்பதை யாராலும் கூற இயலாது, ஆராய்சியாளர்கள் கி.மு. 2000ஆம் ஆண்டு என்று கூறினாலும், உலக ஸ்ருஷ்டிக்கு முன்காலத்திலும் வேதங்கள் இருந்தன என்னும் சாஸ்திரப்படி இதுவும் தவறான கணிப்புகள்தான், அப்படிப்பட்ட வேதங்கள் பல்வேறு ஆயிரம் ஆண்டுகளாக ஸ்வரங்கள், மாத்ராகாலம், எழுத்துக்கள் போன்ற எவ்வித மாறுதலுமின்றியும் இடைச்செறுகலின்றியும் ஆசார்ய புருஷர்களாலும், முன்னோர்களாலும் நம் தேசத்தை ஆண்ட அரசர்களாலும், மற்றும் பல்வேறு பிரிவினராலும் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன, அவர்கள்வேதங்களை கற்றுக் கொள்வதிலும் கற்றுக்கொண்ட வேதமந்திரங்களை முறையாக நியமத்துடன் உபயோகிப்பதிலும் சில கட்டுப்பாடுகளை கடைபிடித்தார்கள், ஆகவேதான் இன்றளவும் வேதமந்திரங்கள் சக்தியுடன் இருக்கின்றன, வேதமந்திரங்கள் சொல்லி நடத்தப்படும் பல்வேறு கர்மாக்களின் மூலம் பல்வேறு நன்மைகளை அடைய முடிகிறது, நமது தேசமும் காலத்தில் மழை, விவஸாய செழிப்பு, என பல்வேறு நன்மைகளை அடைந்து வருகிறது, ஆனால் தற்சமயம் ஒரு சில இடங்களில் வேத மந்திரங்களை கற்றுக்கொள்ளும் போதும், கற்றுக்கொண்ட பிறகு அதை உபயோகிக்கும்போதும், அதற்கான நியமங்கள் ஸரிவர கடைபிடிப்பதில்லை, குறிப்பாக தகுதியற்ற அதர்மமான கர்மாக்கள் வேதமந்திரங்கள் சொல்லி நடத்தப்படுவதால் வேதம் அதன் புனிதத்தன்மையை இழக்கிறது, வேத மந்திரங்களின் சக்தியும் குறைகிறது, தற்சமயம் சில இடங்களில் (சில குடும்பங்களில்) வேததர்மத்துக்கும் சாஸ்திரங்களுக்கும் புறம்பான (திருமணம் போன்ற) நிகழ்ச்சிகள் (கர்மாக்கள்) நடத்த வேண்டிய சூழ்நிலை உறுவாகியுள்ளது, இது அவரவர்களின் சூழ்நிலை மற்றும் குடும்பம் ஸம்பந்தப் பட்ட விஷயம் என்றாலும், கட்டுக்கோப்பாக தற்சமயம் வரை பாதுக்காக்கும் நமது கலாசாரத்துக்கு, இதுவே தவறான வழிகாட்டுதலுக்குக் காரணமாகவும் அமையலாம், கலாசாரம் பாதிக்கப்படலாம். நல்ல குடும்பத்தில் நல்ல ஸம்ஸ்காரத்தில் வாழ்ந்ததின் பயனாக குடும்பத்திலுள்ள ஒருசிலர்,இப்படிப்பட்ட வேத விருத்தமான அதர்மச் செயலை (திருமணத்தை) அனுமதிக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள், அதைத் தவிர்க்கவும் முயற்சிக்கிறார்கள், ஆனாலும் கலியின் பிரபாவத்தாலும் புண்யபலத்தின் குறைவாலும் அவர்களாலும் அதைத் தடுக்க முடியவில்லை, அவர்களின் முயற்சி பயனலிக்காமல் இறுதியில் (இப்படிப்பட்ட நிகழ்ச்சி நடத்துவதும் அதை நடத்த அனுமதிப்பதும் அதில் கலந்து கொள்வதும் தவறு என்று தெரிந்தும் கூட)அவர்களும் அந்த அதர்மத்த்துக்குத் துணை போகிறார்கள். அந்த நிகழ்சிகளில் கலந்து கொள்கிறார்கள், இதனால் ஏற்படும் பாபங்களையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளத் துணிகிறார்கள். வேத தர்மத்துக்கு விரோதமாக செய்யப்படும் பல்வேறு விதமான திருமணங்களையும் வேத மந்திரம் சொல்லி நடத்தி, வைதிகமாக மாற்ற வேண்டும் என்று பலர் எண்ணுகிறார்கள், இது மிகவும் தவறான எண்ணமாகும், எப்போது சாஸ்திர விருத்தமாக செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டதோ, அப்போதே திருமணம் போன்ற அந்த நிகழ்ச்சிகளை, அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்து கொண்டு லௌகீகமான முறையில் செய்வதானால் (இதுவும் மிகப்பெரியத் தவறுதான்) செய்து விட்டுப்போகட்டும், ஆனால் இதில் சாஸ்திர ஸம்மதம் கிடைக்க வேண்டும் என்று ஒரு போதும் நினைக்கக்கூடாது, அதற்காக வைதிகமான முறையில் இதை நடத்தக்கூடாது, இதனால் நாம் நமது வேதத்தையும் வேத மந்திரத்தையும், ஏன் அதை இதுநாள் வரை கட்டுக்கோப்பாக பாதுகாத்த ஆசார்யர்களையும், , ராஜாக்களையும் நம் முன்னோர்களையும் கூட அவமானம் செய்தது போல் ஆகிவிடுகிறது. ஆகவே காலம் காலமாக புனிதத்தன்மை மாறாமல் பாதுகாக்கப்படும், பகவானின் மூச்சுக்காற்றாக போற்றப்படும், வேதங்கள், வேத மந்திரங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுத்தாமல் இருக்க வேண்டும், வேத மந்திரம் சொல்லி அதர்மச் செயல்களைச் செய்ய க்கூடாது, ராஜாவின் முன்னிலையில் ஸங்கீதம் பாட மறுத்த ஸத்குரு தியாகராஜ ஸ்வாமிகள் ஸங்கீதத்தை முறையாக உபயோகித்ததால்தான் ஸ்ரீ ராமரை ப்ரத்யக்ஷமாகக் கண்டார். ஆகவே ஸங்கீதத்துக்கே மூலமான நமது வேதமந்திரங்களை, அனாசாரமாக வேத விருத்தமாகதர்ம சாஸ்திர ஸம்மதமில்லாத நிகழ்ச்சிகளில் உபயோகிக்கக்கூடாது, சாஸ்திர ஸம்மதமில்லாத திருமண அங்கீகாரத்தை லௌகீகமானமுறையில் பெற்றுக்கொள்ளலாம், வேத சாஸ்திர விருத்தமான திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வைதிக முறைப்படி வேத மந்திரங்கள் சொல்லி நடத்த வேண்டும் என்னும் விபரீதமான எண்ணம் யார் மனதிலும் எழாமல் இருந்து, நமது வேத மந்திரங்களுக்கும் அதை பாதுக்காப்பவர்களுக்கும், அதற்கான கௌரவம் மரியாதை கிடைத்து , வேத மந்திரங்களின் முழுமையான சக்தியின் மூலம் இந்த தேசமும் நமது ஸமூஹமும் செழிப்பாக வளர ஸ்ரீ பகவான் ரக்ஷிக்கட்டும்.

No comments: