Let a Vedic priest enter your home every month

Let a Vedic Priest Enter Your Home Every Month

Search This Blog

Friday, September 28, 2012

Vaithikasri March 2012-ஆசிரியர் எண்ணங்கள்


ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகப்பெறும் மாற்றத்தை ஏற்படுத்துபவர் தேவையான வித்யையை (கல்வியை) கற்றுத் தந்து அறிவுக்கண்ணைத்திறந்து விடும் ஆசிரியராவார், ஆசிரியரின் உதவியால்தான் இவ்வுலகத்தை-உலகில் நடைபெறும் ஸம்பவங்களை- நாம் நன்கு பார்க்க முடிகிறது, அத்துடன் ஆசிரியர் என்பவர் கல்வியை மட்டும் போதிக்காமல் இவ்வுலக வாழ்கைக்குத் தேவைப்படும்- ஒரு மனிதனை பண்படுத்தும் -நல்ல பல குணங்களையும் போதிப்பவராக இருக்கிறார், ஆகவேதான் குரு என்பவர் தெவத்துக்கும் மேலானவர் என்கின்றன நமது சாஸ்திரங்கள் ஆசிரியரைப் போலவே கல்வி கற்கும் மாணவனும் அடக்கத்துடன் பணிவுடன் கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும், அப்போதுதான் கற்றுக்கொள்ளும் கல்வியானது தக்க ஸமயத்தில் இவனுக்கு பயனுள்ளதாக அமையும், (தான் பிராஹ்மணன் என்று) பொ சோல்லி கல்வியை கற்றுக்கொண்ட கர்ணனுக்கு அவன் கற்ற அஸ்திர சஸ்திரங்கள் என்னும் கல்வி, குருகே்ஷத்ர (மஹாபாரத) யுத்த ஸமயத்தில் அதாவது தேவையான நேரத்தில் பயனளிக்கவில்லை, கல்வி இருந்தாலும் அதை முறையாக கர்ணன் கற்றுக்கொள்ளாததே இதற்குக்காரணம், எப்படிப்பட்ட (பெரிய இடத்து) மாணவனாக இருந்தாலும் கூட, ஆசிரியர் இருக்குமிடத்துக்குச் சென்று, அவரிடம் பணிவுடன் அடக்கமாக இருந்துதான் கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும், இதுதான் முறை, ஆகவேதான் பகவானே ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியாக இவ்வுலகில் அவதரித்த போது, குலகுருவான வஸிஷ்டாசார்யரிடமும், ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்த போது ஸாந்தீபினி மஹர்ஷியிடமும் அவர்கள் இருக்கும் ஆசிரமத்துக்கு (குருகுலத்திற்கு)ச் சென்று வித்யைகளை -கல்வியை- கற்றுக்கொண்டார்கள் என்கின்றன புராணங்கள் ஆனால் தற்சமயம் கல்வி போதிக்கும் முறையைக்காணும் போது, கற்றுத்தரும் முறையில் மாற்றம் தேவை என்று எண்ணத்தோன்றுகிறது, அதற்குக்காரணம் தற்போது சென்னையில் நடந்துள்ள ஒரு ஸம்பவம், அதாவது ஸுமார் 15 வயதுள்ள ஓர் மாணவன், தான் படிக்கும் பள்ளியில் கல்வி போதிக்கும் ஓர்ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செத ஸம்பவம், மிகுந்த வருத்தத்தையும் ஆஸ்சரியத்தையும் அளிக்கும் இந்த ஸம்பவத்திற்குக் காரணங்களை பலவாறாகா ஆராந்தாலும் கூட, அவற்றுள் அந்த மாணவன் கல்வி கற்றுக்கொண்ட- கற்பிக்கப்பட்ட- (தவறான) முறையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம், ஸுமார் 10 வருடங்களாக கற்றுக்கொள்ளும் , அந்த மாணவனின் கல்வி, அவனுக்கு விநயத்தையும் பண்பாட்டையும் குரு பக்தியையும் கற்றுத் தந்திருக்க வேண்டும், மாறாக அந்த கல்வி அவனுக்கு வெறுப்புத் தன்மையையும் குரோதத்தையும் கற்றுத் தந்துள்ளது, இது மிகவும் வருந்தத்தக்க விஷயம், தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஶ்நேந ஸேவயா என்பதாக ஆசிரியரிடமிருந்து மாணவன், ப்ரணிபாதம் என்னும் அடக்கத்துடனும், விநயத்துடனும் இருந்து குருவுக்கு பணிவிடைகள் செது வித்யையை (கல்வியை) குருவினிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டும், ஸந்தேஹங்களை பரிப்ரச்னத்துடன் (பணிவுடன்) கேட்டுத்தெளிவு பெற வேண்டும் என்பதாக பாடம் கற்றுக்கொள்ளும் முறையை பகவத் கீதை நமக்கு போதிக்கிறது, ஆனால் தற்போது ஆங்காங்கே பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் கலாசாலைகளிலும் படிக்கும் முறையை ஆராந்தால் இதன்படி இல்லை என்பது புரியும், முன்காலத்தில் கல்வி கற்பிக்கும் முறைகளுக்கும் தற்போதைய கல்வி கற்றுத்தரும் முறைகளுக்கும் நிறைய வேறுபாடுகள். ஆசிரியரின் முன்பாக அடக்கத்துடன்இருந்து மாணவர்கள் கல்விகற்றுக்கொண்ட நிலை மாறி, ஆசிரியர் நின்று கொண்டு கற்றுத்தருவதும், மாணவர்கள் கால்களை தொங்க விட்டுக்கொண்டு அலக்ஷ்யமாக பாடங்களை கற்றுக்கொள்வதுமாக இன்றைய நிலை, ஒரு மாணவனின் வாழ்க்கையில் அனைத்து கல்விகளுக்கும் ஒருவர்தான் குரு (ஆசிரியர்) என்னும் நிலை மாறி, ஒரே மாணவனுக்கு ஒரே நேரத்தில் (பாடப்பிரிவின் படி) பல்வேறு ஆசிரியர்கள் என, ஒரு மாணவன் 10ஆம் வகுப்பு படித்து முடிக்கும் போது, அவனுக்கு கல்வி போதித்த ஆசிரியர்களின் எண்ணிக்கை ஸுமார் 100 பேர்கள், இது இன்றைய கல்வி கற்கும் நிலை, குரு இருக்குமிடம் சென்று, குரு சோல்லித்தரும் ஸமயத்தில், மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டது அன்றைய நிலை, மாணவர்கள் இருக்கும் வகுப்பறையைத் தேடி ஆசிரியர் வந்து, மாணவர்களுக்கு உகந்த நேரத்தில் பாடங்களை கற்றுத் தருவது இன்றைய நிலை, நான் சோன்னபாடம் உனக்கு புரிந்ததா?என்று ஆசிரியர் மாணவனிடம் கேட்டநிலைமாறி, நான் உனக்கு புரியும்படி பாடங்களை கற்றுத்தந்தேனா? என்று கேட்பது இன்றைய நிலை. ஆகவே எப்படிப்பட்ட கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்தும் நாம் அந்தக் கல்வியை எந்த முறையில் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும், அப்போதுதான் கற்றுக்கொள்ளும் கல்வியும் வித்யா ததாதி விநயம் என்பதாக மாணவ்ர்களின் அறிவுக் கண்ணைத் திறந்து விடும், அந்தக் கல்வி கற்பவருக்கும் கற்றுத்தருபவருக்கும் இவ்வுலகத்திற்கும் நன்மையைத்தரும், ஆகவே பெரியோர்கள் ஒன்று கூடி பள்ளிகளில் தற்சமயம் கல்வி கற்றுத்தரும் முறைகளை மறுபரிசீலனை செய வேண்டும் தேவையானால் அவற்றில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும், இதற்கு ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்,

No comments: