Let a Vedic priest enter your home every month

Let a Vedic Priest Enter Your Home Every Month

Search This Blog

Friday, September 28, 2012

Vaithikasri July 2012-ஆசிரியர் எண்ணங்கள்


ஐம்பெரும் பூதங்கள் உட்பட யாருக்கும் எந்த ஒரு துன்பத்தையும் தர மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டு துறவறம் ஏற்பவர்களே ஸன்யாஸிகள் (துறவிகள்) எனப்படுகிறார்கள். மண்ணாசை பெண்ணாசை பொண்ணாசை என்னும் மூன்று வித ஆசைகளையும் துறந்த இவர்கள் தனது உபதேசம் (அருளுரை) மூலம் மக்களின் மனதிலுள்ள இருளை விலக்கி, ஆத்ம ஞானமென்னும் ஒளியை ஏற்றுபவர்கள், வருடம் முழுவதும் தேசமெங்கிலும் சுற்றிச் சுற்றி வந்து மக்க:ளுக்கு அருளாசி வழங்கலாம் என்னும் ஸ்வதந்திரத்தை இவர்களுக்குத் தந்த சாஸ்திரம், மழை காலங்களில் (இரண்டு மாதம்) மட்டும் ஒரே இடத்தில் -ஒரே ஊரில்- தங்கியிருக்க வேண்டும் என்று கூறுகிறது, அதன் படியே வருஷம் முழுவதும் ஸஞ்சரிக்கும் ஸன்யாஸிகளும், மழைகாலங்களில் (இந்த வருடம் மூன்று மாதம்) மட்டும் ஒரே இடத்தில் (ஊரில்) தங்கி சாதுர்மாஸ்யம் என்னும் விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள், இந்த ஸன்யாஸிகள், தாங்கள் தங்கும் இடத்தில், தினந்தோறும் தாங்கள் வழிபடும் தெய்வங்களுக்கு பூஜை செய்தல், தினஸரி வேதாந்த (உபநிஷத்) பாடங்களை மக்களுக்குச் சொல்லுதல், ஆத்ம விசாரம் செய்தல், மக்களுக்கு அருளுரை வழங்குதல்,என பற்பல செயல்கள் மூலம் மக்களுக்கு உதவி செய்கின்றார்கள். ப்ரும்ஹசாரி க்ருஹஸ்தன் வானப்ரஸ்தன் ஸன்யாஸி என்னும் நான்கு ஆசிரமங்களுக்குள் மிகவும் உயர்வான ஆசிரமம் துறவறம், ஆகவேதான் துறவி மிகவும் மரியாதைக்குரியவர்- அனைவராலும் போற்றப்பட வேண்டியவர்- இவர்கள் எங்கு வருகிறார்களோ-தங்குகிறார்களோ- அந்த தேசத்துக்கும் நகரத்திற்கும் - காலத்தில் மழை, உணவு தான்ய உத்பத்தி ,வியாபாரச் செழுமை, போன்ற பற்பல நன்மைகள் ஏற்படும் என்றும் , ஆகவே இவர்களை வரவேற்று உபசரித்து பூஜிக்க வேண்டியது அவர்கள் தங்கும் நகரத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை என்றும் கூறுகிறது சாஸ்திரம். ஸ்ரீ நாரதரின் முற்பிறவியில், அவர் சிறு குழந்தையாக இருந்த போது அவரது ஊரில் வந்து தங்கி சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்த துறவிகளுக்கு ஸேவை செய்ய, நாரதரின் தாயார் அவரை நியமிக்க ஸ்ரீ நாரதரும் அதை ஏற்றுக் கொண்டு ஸன்யாஸிகளுக்கு நான்கு மாதம் ஸேவை செய்ய, கடைசியில் ஒரு நாள், ஸன்யாஸிகள், தான் சாப்பிட்ட மிகுதியை நாரதருக்குத் தந்து சாப்பிடச் சொல்ல ஸ்ரீ நாரதரும் அதைச் சாப்பிட, அவருக்கு ஆத்ம ஸ்வரூபம் புலப்பட பிறகு காட்டிற்குச் சென்று தனிமையில் தவம் செய்து அடுத்த பிறவியில் ஸ்ரீ நாரதராகப் பிறந்தார் என்கிறது ஸ்ரீமத் பாகவத புராணம். மனிதனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய நல்ல வாய்ப்புகளில் ஸன்யாஸிகள் சாதுர்மாஸ்ய விரதத்தைச்செய்வதற்காக, தங்கள் வஸிக்கும் (அருகிலுள்ள) ஊரில் வந்து தங்குவதும் ஒன்று, இந்த வருஷம் 03-07-2012 முதல் 30-09-2012 முடிய ஸுமார் இரண்டு மாத காலங்கள் ஸன்யாஸிகள் (துறவிகள்) ஆங்காங்கே தங்கி , தினஸரி பூஜை, வேதாந்த சாஸ்திர விசாரம், மக்களுக்கு அருளுரை போன்றவைகளுடன் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள், மக்கள் தினஸரி அவர்கள் இருப்பிடம் சென்று அவர்களுக்குத்தேவையான பிக்ஷாவந்தனம் முதலியவற்றை அளித்து ,பாதபூஜை செய்து, பூஜா (அபிஷேக) தீர்த்த பிரஸாதம் பெற்றுக் கொண்டு, அருளுரையைக் கேட்டு ஆனந்தித்து பயனடைய வேண்டும், இது அவரவர்களின் விருப்பத்திற்குட்பட்ட செயல் மட்டுமல்ல , கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என்னும் சாஸ்திர விதி, உலகமனைத்தையும் ப்ருஹ்ம ஸ்வரூபமாக த்யானிக்கும் ஸன்யாஸிக்கு ஒரு நாள் (ஒரு வேளை) பிக்ஷாவந்தனம் செய்வதால் (அன்னமளிப்பதால்) இவ்வுலகில் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒரு நாள் உணவிட்ட பலன் கிட்டுமாம், துறவிகளுக்குச் செய்யும் பாதபூஜையால் செல்வம் ஆரோக்யம் போன்ற நன்மைகள் கிட்டும், வஸ்திரதானத்தால் ஆயுள் அதிகரிக்கும், ஒவ்வொரு நாளும் இவர்கள் செய்யும் வேதாந்த உபதேசத்தை-அருளுரையைக் கேட்பதால் என்பது கிருச்ரம் செய்த பலன் கிட்டும், இவ்விதம் கூறும் யதி தர்ம ப்ரதீபிகா என்னும் புஸ்தகம், மேலும் தனது இருப்பிடத்தை நாடி வந்திருக்கும் துறவியை யார் மதிக்க வில்லையோ அவர்களுக்கு பலவிதமான சிரமங்கள் ஏற்படலாமென்றும் பயமுறுத்துகிறது, யதி ஸன்யாஸிநம் பி4க்ஷும் பி4க்ஷான்னம் போ4ஜயேத் து ய: ஸ ஸத்ரயாக3 க்ருத் நித்யம் ஸார்வ தை3வத்ய லிங்க3த: என்பதாக யார் ஒருவர் யதியான ஸன்யாஸிக்கு பிகை்ஷ அளிக்கிறாறோ ,அவர் பலவருஷம் செய்ய வேண்டிய ஸத்ர யாகத்தின் பலனையடைகிறார்.என்கிறார் தூர்வாஸ மஹர்ஷி காளீ புராணத்தில். அத்துடன் மந்திர ஜபம் ஸ்தோத்திர (வேத) பாராயணம் புராண பாராயணம் போன்றவற்றை ஸன்யாஸிகளின் முன்னிலையில் செய்வதால் அவை உடனேயே ஸித்தியைத்தந்து பலனைத்தரும், ஆகவே தற்சமயம் ஆங்காங்கே தங்கி, சாதுர்மாஸ்ய விரதங்களை அனுஷ்டிக்கும் ஸன்யாஸிகளை நாமும் ஆச்ரயித்து பூஜித்து நமஸ்கரித்து பிக்ஷாவந்தனம் செய்து அனுக்ரஹ பாஷனத்தைக்கேட்டு அனைத்து நன்மைகளையும் அடைய ஸ்ரீ பகவான் நமக்கு அனுக்ரஹிக்கட்டும், (இந்த வருஷம் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கும் சில ஸன்யாஸிகளின் விபரங்கள்

No comments: