Let a Vedic priest enter your home every month

Let a Vedic Priest Enter Your Home Every Month

Search This Blog

Thursday, May 22, 2008

ஆசிரியர் எண்ணங்கள் 1 Mar 2008

க்ருதே ச ப்ரதிகர்த்தவ்ய: ஏஷ தர்ம: ஸனாதந: செய்த உபகாரத்துக்கு கட்டாயம் ப்ரத்யுபகாரம் செய்ய வேண்டும் என்கிறார் ஸ்ரீ ஆஞ்சனேயர்,

தாயும் தந்தையும் நமக்குச்செய்த உபகாரத்துக்கு நம்மால் முழுமையாக ப்ரத்யுபகாரம் செய்ய இயலாது, ஆனாலும் கூடியவரை செய்ய முயற்சிக்கலாம், இதையே சாஸ்திரங்கள் மகன் செய்ய வேண்டிய கடமை என்கிறது, அவற்றில் முக்கியமானது இறந்தபின் அவர்களுக்காக ஹோமம் செய்து பிண்ட ப்ரதானம் செய்து சாப்பாடு போட்டு ச்ராத்தம் செய்வது, இதனால்தான் முழுமையான த்ருப்தி அடையும் முன்னோர்கள் ஸந்தோஷத்துடன் ஆசீர்வதிக்கிறார்கள் என்றும் சாஸ்திரம் கூறுகிறது.

தற்காலத்தில் பலர் தவறாது ச்ராத்தம் செய்கிறார்கள், அதனால்தான் அவர்கள் குடும்பம் நிம்மதியாகக் கவலையின்றி வாழ்கிறது, இது ஸந்தோஷப்பட வேண்டிய விஷயம், ஆனால் தற்காலத்தில் பலருக்கு ச்ராத்தம் செய்ய வேண்டும் என்னும் எண்ணமிருந்தாலும் எப்படிச் செய்யவேண்டும்?என்னும் முறை தெரியாததால் சிலர் காட்டும் தவறான வழியில் செல்கிறார்கள்,

அதாவது உங்களுக்காக நாங்களே எங்கள் இடத்தில் ச்ராத்தம் செய்கிறோம், உங்களுக்காக ஆலயத்தில் இருக்கும் தெய்வமே ச்ராத்தம் செய்யும், என்கிறார்களாம், ச்ராத்தத்தன்று அங்கு சென்றால் (இவ்வாறு புக் செய்திருக்கும் பலருக்காக) மொத்தமாக நூற்றுக்கணக்கான பிண்டம் செய்து ஸ்வாமி நிவேதனம் செய்து காக்காய்க்குப் போடுகிறார்களாம்.இந்த வழி முறை சாஸ்திரத்தில் கூறப்படாததால் இது மிகவும் தவறானச் செயல், இதனால் ச்ராத்தம் செய்ததாக ஆகாது, அத்துடன் இது அந்த தெய்வத்தையே அவமானப்படுத்தும் செயல் என்றும் தோன்றுகிறது.

ந ஸந்தி பிதரஸ்சேதி க்ருத்வா மநஸி யோ நர:

ச்ராத்தம் ந குருதே தத்ர தஸ்ய ரக்தம் பிபந்தி தே

முன்னோர்களுக்கு சாப்பாடு போட்டு வைதிகமுறையில் ச்ராத்தம் செய்யா விட்டால் பித்ருக்கள் (தனது பசியை போக்கிக்கொள்ள) ச்ராத்தம் செய்ய வேண்டியவரின் (குடும்பத்தினரின்) ரத்தத்தை ஆக்ஸிடெண்ட் ஆபரேஷன் என்னும் நிமித்தமாகச் சாப்பிடுகிறார்கள் என்கிறது ஆதித்ய புராணம்.

ஆகவே அவரவரது முன்னோர்கள் செய்து வந்த வழிமுறைப்படியே ச்ராத்தத்தை வைதிகமான முறையில் தகுந்த நபரே செய்து முன்னோர்களின் ஆசியை பெற்று நிம்மதியாக வாழ ஸ்ரீ பகவான் அனுகிரஹிக்கட்டும்.

No comments: