Let a Vedic priest enter your home every month

Let a Vedic Priest Enter Your Home Every Month

Search This Blog

Thursday, May 22, 2008

ஆசிரியர் எண்ணங்கள்

வேதத்தையும் கலாசாரத்தையும் பாரம்பர்யமாகக் கொண்ட நமதுபாரததேசத்தில் அறிவாளிகளான முன்னோர்கள்தெய்வநம்பிக்கையுடனும்ஆசாரத்துடனும் அதேஸமயம் வேற்றுமை பாராட்டாமலும் வாழ்ந்து வந்தார்கள், தற்காலத்தில் நாமும் அவ்வாறே வாழ முயற்சிக்கிறோம் ?ன்றாலும் கூட சில வேற்றுமையை இன்றும் நாம் கடைபிடிக்கிறோம்,

ஜாதிவாரியாகவும், ஒவ்வொரு ஜாதிகளுக்குள்ளும் பற்பல பிரிவுகளாகவும் ?ன்று நமக்குள்ளே ஏராளமான பிரிவுகளை நம்மையறியாமலேயே ஏற்படுத்திக்கொண்டு விட்டோம்,

குறிப்பாக ப்ராஹ்மண ஸமூஹம், ஸ்மார்த்தர்கள் வைஷ்ணவர்கள் மாத்வர்கள் ?ன ஏராளமான பிரிவுகளுடனும், வடமாள் வாத்திமாள் ப்ருஹசரணம் அஷ்ட ஸஹஸ்ரம், வடகலையார் தென்கலையார் ஸ்வயமாசார்யர்கள் போன்ற உட்பிரிவுகளுடனும் பிரிந்து வாழுகிறோம்,

ஸம்ப்ரதாயத்தாலும் சிற்சில பழக்க வழக்கங்களாலும் பிரிக்கப்பட்டிருக்கும் இந்தப்பிரிவுகளுக்கு வேதங்களிலோ தர்ம சாஸ்திரங்களிலோ ?ந்த ஒரு பிரமாணங்களும் காணப்படவில்லை.

வேதங்கள் மற்றும் கோத்திரங்கள் மூலமாகத்தான் ப்ராஹ்மண ஸமூஹம் சாஸ்திரங்களில் பிரிக்கப்பட்டுள்ளதே தவிர, மேற்கூறியப்பிரிவுகள் ?ங்கும் காணப்பட வில்லை,

ஒவ்வொரு வேதத்தினருக்கும்தான் தனித்தனியான வைதிக ப்ரயோகங்கள் இருக்கிறதே தவிர, மேற்கூறிய பிரிவுகளுக்காக தனித்தனி வேதங்களோ ப்ரயோகங்களோ கிடையாது,

ஏனென்றால் மும்மதஸ்தர்களுக்கும் வேதங்கள் கோத்திரங்கள் தர்மசாஸ்திரங்கள் ?ல்லாம் ஒன்றுதான்,

இதைப் பலரும் நன்கு உணர்ந்து கொண்டதால்தான் தற்சமயம் சைவ வைஷ்ணவ பேதங்கள் அவ்வளவாகக்காணப்படவில்லை,

ஆனாலும் கூட திருமணத்துக்கு மாப்பிள்ளையையோ மணமகளையோ தேர்ந்தெடுக்கும்போது (ப்ருஹசரணம் வடமாள் வாத்திமாள் மற்றும் தென்கலை வடகலை போன்ற) அந்தந்தப் பிரிவிலிருந்துதான் தேர்ந்தெடுக்க வேண்டும் ?ன்பதில் ஒரு சிலர் மிகத்தீவிரமாக இருக்கிறார்கள், இது தேவையில்லை,

ஒரே கோத்திரக்காரர்களாக இருக்கக்கூடாது ?ன்பதைத்தவிர தேவையில்லாத மற்றப்பிரிவுகளைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும், நமது ஸமூஹத்தில் உள்ள சில உட்பிரிவுகளை பெரிதுபடுத்தாமல், சின்னஞ்சிறிய வேற்றுமைகளை அகற்றி, அனைத்துப்பிரிவினருடன் சேர்ந்து ஒன்றுபட்டு வாழ்ந்து, ஸமூஹத்தை ஒன்றினைக்க முயற்சிக்க ஸ்ரீ பகவான் நமக்கு உறுதுணையாக இருக்கட்டும்.

No comments: